ராகுல் காந்தியை ராமருடன் ஒப்பிடுவதா? – காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்

புதுடெல்லி: ராகுல் காந்தியை ராமருடன் ஒப்பிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை எனும் பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவரது யாத்திரை டெல்லியை அடைந்த நிலையில், தற்போது யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் மேற்கொண்டு வரும் யாத்திரை குறித்து குறிப்பிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், பகவான் ராமரைப் போல … Read more

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நிறைவு: வழக்கமான பூஜைகளுக்கு பின் இரவு நடை அடைப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விமர்சையாக நடைபெற்றது. தங்க அங்கி அணிவித்து ஐயப்பனை பல்லாயிரக்கணக்கான பக்த்தர்கள் தரிசித்து மகிழ்ந்தனர். சபரி மலையில் நவம்பர் 16-ம் தேதி மண்டலபூஜை தொடங்கியதில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்தரிசித்து வந்தனர். 41 நாட்கள் நீடித்த மண்டல பூஜையின் இறுதி நிகழ்வின் போது, திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா 1973-ம் ஆண்டு சபரிமலைக்கு வழங்கிய 450 பவுன் எடையுள்ள தங்க அங்கியை ஐயப்பனுக்கு அணிவிப்பது வழக்கம். அதன்படி … Read more

”காய்கறி வெட்டும் கத்தியால் எதிரியின் தலையை வெட்டுங்கள்”-பாஜக எம்பி பிரக்யா சர்ச்சை பேச்சு

மக்களிடையே மத வெறுப்பை துண்டும் வகையில் பேசியதாக பா.ஜ.க. எம்.பி. பிரக்யா சிங் தாகூருக்கு எதிராக காவல்துறையில் இரண்டு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  கர்நாடகாவின் ஷிவ்மோகாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த பா.ஜ.க. எம்.பி. பிரக்யா சிங் தாகூர், “லவ் ஜிகாத்தில் ஈடுபடுபவர்களை இது போன்ற நிகழ்வுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருங்கள். ஆயுதங்கள் இல்லாவிட்டாலும் காய்கறி வெட்டும் கத்தியையாவது கூர்மையாக வைத்திருங்கள். அந்த கத்தியை கொண்டு காய்கறிகளை வெட்ட முடியும் என்றால் … Read more

கர்நாடகாவின் 865 கிராமங்களுக்கு உரிமை கோரும் மகாராஷ்டிரா – ‘சட்டப்படி மீட்க’ பேரவையில் தீர்மானம்

நாக்பூர்: கர்நாடகாவில் உள்ள 865 கிராமங்கள் மகாராஷ்டிராவுக்குச் சொந்தம் என்றும், அவற்றை சட்டப்படி மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுக்கும் என்றும் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களான கர்நாடகா – மகாராஷ்டிரா இடையே எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. கர்நாடகாவில் உள்ள பெல்காம், கார்வார், பிதார், நிபானி, பால்கி உள்பட 865 கிராமங்கள் மகாராஷ்டிராவுக்குச் சொந்தம் என அம்மாநில அரசு உரிமை கோரி வருகிறது. இதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு … Read more

'பெலகாவி எங்களுக்கு தான்..!' – மகாராஷ்டிர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

பெலகாவி விவகாரம் தொடர்பாக, மகாராஷ்டிரா – கர்நாடகா இடையே பிரச்னை நீடித்து வரும் நிலையில், மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கர்நாடகா – மகாராஷ்டிரா எல்லையில் உள்ள பெலகாவி மாவட்டத்திற்கு இரு மாநிலங்களும் பல ஆண்டுகளாக உரிமை கொண்டாடி வருகின்றன. பெலகாவி, தற்போது கர்நாடகா வசம் இருந்தாலும், அடிக்கடி இரு மாநில எல்லை பகுதிகளில் தகராறு ஏற்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, மகாராஷ்டிர மாநிலத்திற்கு சென்ற கர்நாடக மாநில அரசு பேருந்துகள் மீது, … Read more

9 அடி இரும்பு வேலியைத் தாண்டி கார் மீது தாக்குதல் நடத்திய சிறுத்தை..

அசாமின் ஜோர்கட் வனப்பகுதியில் சுமார் 9 அடி இரும்பு வேலியை தாண்டிக் குதித்த சிறுத்தை, சாலையில் சென்ற கார் மீது தாக்குதல் நடத்திய வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவை வெளியிட்டுள்ள வனத்துறை அதிகாரிகள், மழைக்காடு ஆராய்ச்சி நிலை பகுதியில் உலாவும் சிறுத்தையின் தாக்குதலுக்கு வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் 15 பேர் காயமடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். Source link

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் தனியார் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பயணிகள் அச்சம்!

புதுடெல்லி: டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் தனியார் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு ஜெய்சால்மர் நகரில் இருந்து தனியார் நிறுவன விமானம் ஒன்று வந்து இறங்கியுள்ளது. அந்த விமானத்தின் சீட்டின் இருக்கையில் பின்புறம் துணி மீது இந்தியில், இந்த விமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது என்ற பொருள்பட தகவல் எழுதப்பட்டு இருந்துள்ளது. இதனை கவனித்த பயணி ஒருவர் மற்றவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். … Read more

”இந்தியாவில் "பெண்கள்" ஒழுக்கம், ஒருமைப்பாட்டின் உருவமாக இருக்கிறார்கள்” – மத்திய அமைச்சர்

ஒழுக்கம், ஒருமைப்பாடு, தீர்ப்பு மற்றும் வலிமை ஆகியவற்றின் உருவகமாக புதிய இந்தியாவின் கொடியை ஏந்துபவர்கள் பெண்கள் என்று பெண்கள் பொருளாதார மன்ற 84ஆவது உலகளாவிய விழாவில் பேசியுள்ளார் மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா. டெல்லியில் “பெண்கள் பொருளாதார மன்றம்” ( Women Economic Forum) சார்பில் நடைபெற்ற 84வது உலகளாவிய பதிப்பு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் ,பல துறைகளில் சாதித்திவரும் பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தனராக மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா … Read more

நெகிழ்ச்சி சம்பவம்..!! ஐசியுவில் இருக்கும் தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்..!

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் உள்ள பாலி கிராமத்தில் வசித்து வருபவர் லாலன் குமார். இவரது மனைவி பூனம் வர்மா. இந்த தம்பதிக்கு சாந்தினி குமாரி என்ற மகள் உள்ளார். கடந்த சில நாட்களாக பூனம் வர்மா இதய நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனால் அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் ஐசியுவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், … Read more

மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்து: விலையை அறிவித்தது பாரத் பயோடெக்

புதுடெல்லி: கரோனா தொற்றுக்கு மூக்கு வழியாக செலுத்தும் இரண்டு சொட்டு தடுப்பு மருந்தின் விலையை நிர்ணயித்துள்ளது பாரத் பயோடெக் நிறுவனம். iNCOVACC இன்கோவாக் என்ற அந்த மருந்தின் விலை கோவின் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜிஎஸ்டி வரியில்லாமல் தனியார் சந்தையில் ரூ.800-க்கும், அரசாங்கத்திற்கு ஜிஎஸ்டி இல்லாமல் ரூ.325-க்கும் விநியோகிக்கப்படும். இந்த தடுப்பூசி ஜனவரி 2023 கடைசி வாரத்தில் இருந்து சந்தையில் புழக்கத்திற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. iNCOVACC இன்கோவாக் மூக்குவழி தடுப்பு மருந்தை கரோனா தடுப்பு … Read more