நெகிழ்ச்சி சம்பவம்..!! ஐசியுவில் இருக்கும் தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்..!

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் உள்ள பாலி கிராமத்தில் வசித்து வருபவர் லாலன் குமார். இவரது மனைவி பூனம் வர்மா. இந்த தம்பதிக்கு சாந்தினி குமாரி என்ற மகள் உள்ளார். கடந்த சில நாட்களாக பூனம் வர்மா இதய நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனால் அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் ஐசியுவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், … Read more

மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்து: விலையை அறிவித்தது பாரத் பயோடெக்

புதுடெல்லி: கரோனா தொற்றுக்கு மூக்கு வழியாக செலுத்தும் இரண்டு சொட்டு தடுப்பு மருந்தின் விலையை நிர்ணயித்துள்ளது பாரத் பயோடெக் நிறுவனம். iNCOVACC இன்கோவாக் என்ற அந்த மருந்தின் விலை கோவின் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜிஎஸ்டி வரியில்லாமல் தனியார் சந்தையில் ரூ.800-க்கும், அரசாங்கத்திற்கு ஜிஎஸ்டி இல்லாமல் ரூ.325-க்கும் விநியோகிக்கப்படும். இந்த தடுப்பூசி ஜனவரி 2023 கடைசி வாரத்தில் இருந்து சந்தையில் புழக்கத்திற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. iNCOVACC இன்கோவாக் மூக்குவழி தடுப்பு மருந்தை கரோனா தடுப்பு … Read more

டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல்: ஆம் ஆத்மி vs பாஜக… அரங்கேறும் கடைசி நேர ட்விஸ்ட்!

15 ஆண்டுகால பாஜகவின் தொடர் ஓட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது ஆம் ஆத்மி. டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் 134 இடங்களை பிடித்து புதிய சாதனை படைத்தது. பாஜக 104 இடங்களில் வென்று இடண்டாம் இடம் பிடித்தது. இதையடுத்து வரும் ஜனவரி 6ஆம் தேதி மாநகராட்சியின் மேயர், துணை மேயர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், இன்று கடைசி தேதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் அடுத்த மேயர்? … Read more

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதற்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை

புதுச்சேரி:  புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதற்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார். கல்வி நிறுவனங்களில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என ஆட்சியர் புதுச்சேரி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

பாரத் பயோடெக்கின் நாசிவழி தடுப்பூசி iNCOVACC விலை நிர்ணயம்!

புதுடெல்லி: BF.7  உருமாறிய கொரோனா வைரஸ் உலகில் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் தொற்று பாதிப்புகள் சில உறுதி செய்யப்பட்டுள்ளன.  கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த வாரம் இந்தியாவின் கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தில் சேர்க்க அனுமதிக்கப்பட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் நாசிவழி தடுப்பூசியின் பயன்பாட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.  இதனால், நாசி வழியே கொரோனா தடுப்பூசி செலுத்தும் முறையை மேற்கொள்ளும் முதல் நிறுவனம் என்ற பெருமையை … Read more

நாட்டின் 7-வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி வரும் 30-ம் தேதி தொடங்கி வைக்கிறார்

கொல்கத்தா: நாட்டின் 7-வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி வரும் 30-ம் தேதி தொடங்கி வைக்கிறார். மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் இருந்து நியூ ஜல்பைகுரிக்கு இடையே புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை வரும் 30-ம் தேதி (வெள்ளிக்கிழமை) பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. இந்த இரண்டு ரயில் நிலையங்களுக்கிடையில் 550 கிலோமீட்டர் கொண்ட தூரத்தை 8 மணி நேரத்திற்கும் மேலான நேரத்தில் கடக்கும், தற்போதைய சதாப்தி … Read more

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தின் விலை இது தான்…!!

சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில், மரபணு மாற்றமடைந்த ‘பிஎப் 7’ வகை கொரோனா, அதிகளவில் பரவி வருகிறது. எனவே, முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசு வழிகாட்டுதல்கள் வழங்கியுள்ளது. இதையடுத்து, தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டு பயணியருக்கு, கொரோனா பரிசோதனை செய்யும் நடைமுறை, மீண்டும் துவங்கியுள்ளது. இந்நிலையில் மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை கோவேக்சினை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியது.பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு … Read more

ஒடிசா ஓட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்த ரஷ்ய தொழிலதிபர்

புபனேஸ்வர்: ரஷ்யாவைச் சேர்ந்த தொழிலதிபரும் மக்கள் பிரதிநிதியுமான பவெல் ஆன்டோவ், ஒடிசாவுக்கு சுற்றுலா வந்திருந்த நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்தார். ரஷ்யாவின் விளாடிமிர் மகாண மக்கள் பிரதிநிதிகளான விளாடிமிர் புதானோவ், பவெல் ஆன்டொனோவ் உள்ளிட்ட 4 பேர் கடந்த வாரம் இந்தியா வந்துள்ளனர். இவர்கள் ஒடிசாவில் ராயகடா என்ற பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் அறைகள் எடுத்து தங்கி உள்ளனர். கந்தமால் மாவட்டத்தில் உள்ள தரிங்பாடி என்ற இடத்திற்கு கடந்த 21-ம் தேதி சுற்றுலா சென்றுவிட்டு பிறகு … Read more

சபரிமலையில் இன்று மண்டல பூஜை ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்

திருவனந்தபுரம்: சபரிமலையில் 41 நாட்கள் நீண்ட மண்டல காலம் பிரசித்தி பெற்ற மண்டல பூஜையுடன் இன்று நிறைவடைகிறது. இதையொட்டி மதியம் சுவாமிக்கு மண்டல பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (17ம் தேதி) முதல் பூஜைகள் தொடங்கியது. கடந்த இரு வருடங்களாக அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டதால் … Read more

டிஜிட்டல் முறையில் வருகைப் பதிவு: நாடு முழுவதும் ஜன.1ம் தேதி முதல் அமல்..!

வரும் ஜனவரி 1-ம் தேதி முதல், தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் வருகைப் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிபடுத்தும் நோக்கில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மத்திய அரசால் கடந்த 2005-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், கிராமப்புற தொழிலாளர்களுக்கு ஒரு நிதி ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, நாள் ஒன்றுக்கு ரூ. 214 … Read more