ஹிட்லரின் கதிதான் பிரதமர் மோடிக்கும்; சித்தராமையா காட்டம்.!

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 104 (36.35%), காங்கிரஸ் 80 (38.14%), மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 (18.3%), மற்றவை 3 என வெற்றி பெற்றன. ஆட்சியை பிடிக்க 113 இடங்களை கைப்பற்ற வேண்டும். ஆனால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணமாக காங்கிரஸ் – மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால் 14 மாதங்களில் ஆட்சி கலைக்கப்பட்டு … Read more

ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த போது 7வது மாடியில் இருந்து விழுந்து மாணவி பலி

ஐதராபாத்: ஜதராபாத் விடுதியின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த பட்டதாரி மாணவி ஒருவர், 7வது மாடியில் இருந்து கீழே விழுந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் செயல்படும் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பல்கலைக்கழகத்தில், அரியானா மாநிலம் பஹம்னோலி கிராமத்தை சேர்ந்த அஞ்சலி (22) என்பவர் எம்ஏ ஆங்கிலம் படித்து வந்தார். எம்பிசி விடுதியில் தங்கி படித்த அவர், விடுதியின் நான்காவது மாடியில்  உள்ள படிக்கட்டின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தார். எதிர்பாராதவிதமாக ஜன்னலின் ஓரத்தில் இருந்து … Read more

‘ஒரு ஓட்டுக்கு 6 ஆயிரம் தர்றோம்’ – கர்நாடகா பாஜக தலைவர் உறுதி.!

கர்நாடகாவில் வருகிற மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் காரணமாக அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளன. கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்தநிலையில் ஒரு ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் தருவதாக பாஜக முன்னாள் அமைச்சர் கூறியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. மே மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாஜக ஒரு ஓட்டுக்கு ரூ.6,000 வழங்கப்படும் என அம்மாநில முன்னாள் நீர்வளத்துறை … Read more

பல்வேறு பிரிவுகளின் கீழ் சாதனை புரிந்த 11 குழந்தைகளுக்கு நாளை பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதை வழங்குகிறார் குடியரசுத் தலைவர்!

டெல்லி: பல்வேறு பிரிவுகளின் கீழ் சாதனை புரிந்த 11 குழந்தைகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  நாளை பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்க உள்ளார். ஒன்றிய அரசு குழந்தைகளின் சாதனைகளுக்காக பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதை வழங்கி வருகிறது. இந்நிலையில் தேசிய அங்கீகாரத்திற்கு தகுதியான கலை, கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், கல்வியியல், சமூக சேவை, விளையாட்டு ஆகிய 6 பிரிவுகளில் சிறந்து விளங்கும்  5 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு … Read more

`இங்க 3 நாள், அங்க 3 நாள்’- 2 பெண்களை ஏமாற்றிய திருமணம் செய்த நபருக்கு கிடைத்த தீர்ப்பு!

இரண்டு மனைவிகளுடனும் கணவர் சேர்ந்து வாழ்வதற்கு வழங்கிய வினோத தீர்ப்பொன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம் மொராதாபாத் பகுதியை சேர்ந்த நபர், தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார். அவர், தன் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று தனியாக வசித்துள்ளார். இதற்கிடையே அவருக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்படவே, தன்னுடைய முதல் திருமணத்தை மறைத்து கடந்த 2017ஆம் ஆண்டு அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்துவந்துள்ளார். இந்தப் … Read more

பிபிசி தொடர் நீக்கம்; பிரதமர் பயப்படுவது தெரிகிறது..காங்கிரஸ் சுளீர்.!

பிரதமர் நரேந்திர மோடி குறித்து, இங்கிலாந்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் ஒன்று வெளியிட்டு உள்ளது. பிபிசி தயாரித்து பிரிட்டனில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தில், 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றி பல தகவல்கள் கூறப்பட்டுள்ளன. பிரிட்டன் அரசின் ரகசிய விசாரணையில் கலவரத்துக்கு மோடியே நேரடி காரணம் என தெரியவந்ததாக ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது. ‘இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ எனும் தலைப்பிலான இந்த ஆவணப்படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தில், 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி … Read more

கேரளாவில் பரவும் கொடூர வைரஸ்: கொத்து கொத்தாக உயிரிழக்கும் நாய்கள் – தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 3,200 நாய்களின் உயிரிழந்துள்ளன. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அம்மாநிலத்தில் பரவி வரும் புது வகை வைரஸ் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் கால்நடை பராமரிப்புத் துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இது குறித்து துறை அதிகாரிகள் கூறுகையில், “திருக்கருவா, பனையம், கொட்டங்கரை மற்றும் கொல்லம் மாநகராட்சி பகுதிகளில் அதிகளவில் பரவும் வைரஸ் நோய் பாதிப்பு உள்ளது. நோயின் அறிகுறிகள் ரேபிஸைப் போலவே இருக்கும், ஏனெனில் பாதிக்கப்பட்ட … Read more

யார் ஷாருக்கான்.? என அசாம் முதலமைச்சர் கேள்விக்கு நள்ளிரவு 2 மணிக்கு தொலைபேசியில் ஷாருக்கான் பதில்..!

யார் ஷாரூக்கான்.? என அசாம் முதலமைச்சர் சனிக்கிழமை கேட்டிருந்த நிலையில், தன்னை நள்ளிரவு 2 மணிக்கு ஷாருக்கான் தொலைபேசியில் தொடர்புக் கொண்டதாக முதலமைச்சர் இன்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். வரும் 25ம் தேதி வெளியாக உள்ள ஷாருக்கானின் பதான் படத்தின் சுவரொட்டிகள் கவுகாத்தியில் கிழித்தெறியப்பட்ட நிலையில், அசாமிய படங்களை பற்றி மட்டுமே தான் கவலைப்படுவதாகவும், ஷாருக்கான் தன்னை தொடர்புக் கொண்டால் பதான் பட பிரச்சனையில் தான் தலையிடுவதாக முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வா செய்தியாளர்களிடம் நேற்று கூறியிருந்தார். இந்நிலையில், முதலமைச்சர் … Read more

டேங்கர் வெடித்து சிதறி 2 பேர் பலி: வெல்டர் உட்பட 2 பேர் சீரியஸ்

பானிபட்: அரியானா மாநிலம் பானிபட் மாவட்டம் சதர் பகுதியில் செயல்படும் சுத்திகரிப்பு ஆலைக்கு அருகே ரசாயன லோடு ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிக்கு சர்வீஸ் நடந்து கொண்டிருந்தது. பழுதான பகுதிகளுக்கு தொழிலாளர்கள் வெல்டிங் வைத்துக் கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக வெல்டிங் செய்து கொண்டிருந்த போது ஏற்பட்ட தீப் பொறியில், டேங்கர் லாரி திடீரென பற்றியது. அப்போது ஏற்பட்ட பயங்கர சத்தத்துடன் ேடங்கர் வெடித்தது. இந்த சம்பவத்தின் வெல்டிங் கடையில் மேற்கூரை சிதறியது. இந்த விபத்தில் உத்தரபிரதேச மாநிலம் கடம்பூரைச் … Read more

அக்கா கணவருக்கு மறுமணம் செய்துவைக்க முயன்ற தங்கை.. கோபத்தில் தங்கைக்கு வில்லியான அக்கா!

மேற்கு வங்கத்தில் தன் உடன்பிறந்த சகோதரி மீதே பெண்ணொருவர் ஆசிட் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலம் மாம்ராஜ்பூர் பகுதியை அடுத்த பிர்சிங் கிராமத்தைச் சேர்ந்த அகாலிமா பீபியும் ரஹீமா பீபியும் சகோதரிகள் ஆவர். இவர்கள் இருவரும் பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த அஷதுல் அலி மற்றும் டெஸ்லிம் அலி ஆகிய சகோதரர்களைத் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இதில், அக்கா அகாலிமாவுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதைக் காரணம் காட்டி அகாலிமா கணவர் டெஸ்லிம் … Read more