6 மாடி வணிக வளாகத்தில் தீ; மூவர் உடல் கருகி பரிதாப பலி: தெலங்கானாவில் பயங்கரம்

திருமலை: தெலங்கானாவில் உள்ள 6 மாடி கட்டிட வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி பலியானார்கள். தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ராம்கோபால் நகரில் டெக்கான் ஸ்போர்ட்ஸ் எனப்படும் தனியாருக்கு சொந்தமான 6 மாடி வணிக வளாகம் உள்ளது. இங்கு நேற்றுமுன்தினம் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டு கட்டிடம் முழுவதும் தீ பரவியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடிவந்தனர். இருப்பினும் அந்த வளாகத்திற்குள் 3 பேர் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து … Read more

''பிரதமராவதற்கு தகுதியானவர் ராகுல் காந்தி'': சிவ சேனா எம்.பி. சஞ்சய் ராவத்

ஜம்மு: நாட்டின் பிரதமராவதற்கு ராகுல் காந்தி தகுதியானவர் என்று சிவ சேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை தற்போது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரையில் கலந்து கொண்ட சஞ்சய் ராவத், ஹாட்லி மோர் என்ற பகுதியில் இருந்து சந்த்வால் என்ற பகுதி வரை சுமார் 13 கிலோ மீட்டர் தூரம் ராகுல் காந்தியோடு நடந்து சென்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய … Read more

அரசு பள்ளிக்கு ‘திடீர்’ விசிட் மாணவர்களுக்கு பாடம் நடத்திய நித்யாமேனன்

திருமலை: ஆந்திராவில் உள்ள அரசு பள்ளியில் நடிகை நித்யாமேனன் மாணவர்களுக்கு ஆங்கில பாடம் எடுத்தார். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் வரதயாபாளையத்தில் கல்கி பகவானின் ஆசிரமம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் திரைப்பட நடிகை நித்யாமேனன் தவறாமல் வந்து செல்வது வழக்கம். அதன்படி, இந்தாண்டும் அந்த ஆசிரமத்திற்கு நேற்று முன்தினம் நடிகை நித்யாமேனன் வந்தார். அப்போது, அங்கு நடந்த சிறப்பு தியான பயிற்சியில் பங்கேற்றார். தொடர்ந்து, கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்கு சென்றார். அங்குள்ள … Read more

பெங்களூரு டிராஃபிக்கில் சிக்கிய கார்.. சாமர்த்தியமாக தப்பித்த மணப்பெண்..!

பெங்களூருவின் டிராஃபிக் பற்றி நாடே அறியும். அரை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு இடத்துக்கு செல்வதற்கே அரை மணிநேரம் காத்திருக்கும் அளவுக்கான போக்குவரத்து நெரிசலே இந்தியாவின் டெக் சிட்டியின் நிலையாக இருக்கும். அதுவும் மாலை வேளையாக இருந்தால் சொல்லவே வேண்டாம். சாரை சாரையாக வாகனங்கள் வெளிச்சத்தோடு சிக்னல்களில் அணிவகுத்து நிற்பதை பல வீடியோக்கள் ஃபோட்டோக்கள் மூலம் காணலாம். இதற்காகவே பெங்களூருவில் வசிப்பவர்கள் பெரும்பாலும் சாலை வழி பயணத்தை தவிர்த்து மெட்ரோ ரயில்களில் செல்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். … Read more

கோயில் அறங்காவலர் நியமன விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு

புதுடெல்லி: தமிழகத்தில் உள்ள கோயில்களில் அறங்காவலர்களை நியமிக்கும் வழக்கில் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கோயில் அறங்காவலர்கள் நியமன வழக்கில் தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், ‘தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள 1045 கோயில்களுக்கு அறங்காவலர் நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணி 6 மாதத்தில் முடிவடையும். அறநிலையத் துறையின் கீழ் வரும் அனைத்து கோயில்களிலும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தனித்தனியாக … Read more

ஷாருக்கான் யார் என கேட்ட அசாம் முதல்வர் – தொலைபேசியில் அழைத்துப் பேசிய பாலிவுட் சூப்பர் ஸ்டார்

குவஹாத்தி: ஷாருக்கான் யார் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கேட்ட நிலையில், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஷாருக்கான் பேசியுள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டாராக கருதப்படும் ஷாருக்கானின் பதான் படம் வரும் 25 ஆம் தேதி நாடு முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் இடம்பெற்ற பேஷாராம் பாடலில் காவி பிகினி உடை அணிந்து தீபிகா படுகோனே ஆடி இருப்பதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. குவஹாட்டியில் இந்த படம் திரையிட உள்ள … Read more

வடகிழக்கில் கிறிஸ்துவ வாக்குகள்; மாறிய இமேஜ்… தேர்தலில் பாஜகவின் ராஜதந்திரம்!

நடப்பாண்டில் முதல் சட்டமன்ற தேர்தல் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறுகிறது. திரிபுராவில் பிப்ரவரி 16, நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் பிப்ரவரி 27 ஆகிய தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வடகிழக்கு மாநிலங்களை பொறுத்தவரை கிறிஸ்துவ வாக்குகள் தான் அதிக அளவில் காணப்படுகிறது. இதனை இந்துத்துவா இமேஜ் கொண்ட பாஜக எப்படி அறுவடை செய்யும் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது. வடகிழக்கு அரசியல் இந்தி பேசும் மாநிலங்களில் … Read more

பணம் கேட்டு பலரும் தொல்லை அடிச்சும் கேட்பாக… பெயரை மட்டும் சொல்லாதீக…: கேரளா லாட்டரியில் ரூ.16 கோடி, ரூ.10 கோடி பரிசு பெற்றவர்கள் கெஞ்சல்

திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு லாட்டரி  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் அரசுக்கு பல கோடி வருமானம்  கிடைத்து வருகிறது. கடந்த வருடம் ஓணத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பம்பர்  லாட்டரியில் ரூ.25 கோடி முதல் பரிசாக அறிவிக்கப்பட்டது. இந்த லாட்டரியில் முதல் பரிசான ரூ.25 கோடி திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆட்டோ  டிரைவரான அனூப்  என்பவருக்கு  கிடைத்தது. 25 கோடி கிடைத்த அவரது பேட்டி  மற்றும் புகைப்படங்கள் அனைத்து டிவிக்களிலும், பத்திரிகைகளிலும் வெளியானது.  உறவினர்கள் உள்பட ஏராளமானோர் அவரிடம் … Read more

ஜம்முவின் ஹிராநகரில் இருந்து மீண்டும் தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை

கத்துவா(ஜம்மு காஷ்மீர்): ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உள்ள ஹிராநகர் பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கியது. காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை அதன் இறுதி கட்டமான காஷ்மீர் பகுதியில் நடந்து வருகிறது. முன்னதாக யாத்திரை கத்துவாவின் லக்னாபூர் பகுதியில் வியாழக்கிழமை மாலை நுழைந்தது. இதற்கிடையில் ஜம்மு அருகிலுள்ள நர்வால் பகுதியில் அடுத்தடுத்து 2 இடங்களில் சனிக்கிழமை … Read more

பெங்களூருவில் ஜி20 முதல் சுற்றுச்சூழல், காலநிலை கூட்டம்!

ஜி20-ன் முதலாவது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை பணிக்குழு கூட்டம் வருகிற பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை பெங்களூருவில் நடைபெறவுள்ளது. ஜி20 தலைமைத்துவப் பொறுப்பை வருகிற நவம்பர் 30ஆம் தேதி வரை ஓராண்டிற்கு இந்தியா ஏற்றிருக்கும். இந்த மன்றம் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகள் மற்றும் இந்தியாவால் அழைக்கப்பட்ட சர்வதேச அமைப்புகளை ஒன்றிணைக்கும். ஷெர்பா (பிரதிநிதி) கூட்டம் மூலம், 13 பணிக்குழுக்கள் மற்றும் 2 முன்முயற்சிகள் கட்டமைப்பு, இந்தியாவின் தலைமையின் … Read more