பள்ளி சென்று கொண்டிருந்த 14 வயது பள்ளி மாணவிக்கு ஆண் குழந்தை..!!

ஜார்கண்ட் மாநிலம் சிம்தேகா பகுதியில் வசித்து வந்த ஜெய்ராம் நாயக் (20) என்பவர், அதே கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை காதலித்து வந்தார். இந்த நிலையில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். அதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். இதனை அறிந்த அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள், 18 வயது பூர்த்தியடையாத சிறுமியுடன் ஜெய்ராம் நாயக்குக்கு திருமணம் செய்து வைக்க முயன்றனர். இதற்கிடையே அந்த கிராமத்தை விட்டு ஜெய்ராம் நாயக் … Read more

மைசூருவில் தேவாலயம் மீது தாக்குதல்: போலீஸார் தீவிர விசாரணை

பெங்களூரு: கர்நாடகாவின் மைசூருவில் கிறிஸ்துவ தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, சிலைகள் உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் பிரியாபட்டணாவில் தூய மரியன்னை தேவாலயம் உள்ளது. திங்கள்கிழமை இரவு தேவாலயத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் குழந்தை இயேசு, அன்னை மரியாள், சூசையப்பர் ஆகியோரின் சிலைகளை தாக்கி சேதப்படுத்தினர். மேலும் தேவாலயத்தில் இருந்த பொருட்களை கீழே போட்டு உடைத்த‌னர். அங்கிருந்த 4 உண்டியல்களையும் உடைக்க முயற்சித்துள்ள‌னர். அப்போது தேவாலயத்தின் காவலர் சத்தம் போட்டதால் மர்ம நபர்கள் … Read more

புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க புதிய ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்!

புலம்பெயர் தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் இடத்தில் இருந்து கொண்டே, தங்களது சொந்த தொகுதியில் வாக்குகளை பதிவு செய்யும் வகையில், ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. தற்போதைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், அந்தந்த தொகுதி வேட்பாளர்களின் விவரங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. இதனால் வெளியூருக்கு சென்று பணிபுரியும் நபர்கள், தேர்தலில் வாக்களிக்க சொந்த தொகுதிக்கு வர வேண்டிய நிலை உள்ளது.  இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், புதிய இயந்திரத்தை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. இதன்மூலம் … Read more

அரசியலமைப்பு சட்டத்தில் நிரந்தர மாற்றம் செய்த பிறகு ஒரேநாடு ஒரே தேர்தல் அமல்படுத்தப்படும்: ஒன்றிய இணையமைச்சர் வி.கே.சிங் தகவல்

டெல்லி: அரசியலமைப்பு சட்டத்தில் நிரந்தர மாற்றம் செய்த பிறகு ஒரேநாடு ஒரே தேர்தல் அமல்படுத்தப்படும் என ஒன்றிய இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். வருங்காலத்தில் ஆட்சிக்கு வருவோர் மீண்டும் சட்டத்தை மாற்றம் செய்யாத வகையில் அமல்படுத்தப்படும் எனவும் வி.கே.சிங் கூறினார்.

அன்று கட்டட வேலை, இன்று `முனைவர் பட்டம்!’ கேரள பழங்குடியின இளைஞருக்கு குவியும் வாழ்த்துகள்

கேரளாவின் பாலக்காட்டில் மருத்துவ வேதியியலில் டாக்டர் பட்டம் பெற்ற பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையை கேரள மாநிலம் அட்டப்பாடியைச் சேர்ந்த டாக்டர் ஆர்.சந்திரன் பெற்றுள்ளார். கேரள மாநிலம் அட்டப்பாடியில் உள்ள கொட்டியார்கண்டி (Goddiyarkandi) என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரங்கன் – லட்சுமி தம்பதியர். இவர்களது மகன் சந்திரன், லக்னோவில் ரேபரேலியில் உள்ள தேசிய மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார். அட்டப்பாடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த சந்திரன், … Read more

பெண்கள் பணிபுரிய தடை | உத்தரவை திரும்பப்பெற தலிபான்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்

வாஷிங்டன்: அரசு சாரா அமைப்புகளில் பெண்கள் பணிபுரிய தலிபான்கள் தடை விதித்துள்ள நிலையில், அதை திரும்பப் பெற வேண்டும் என்று அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கென் ட்விட்டர் பதிவில், ”அரசு சாரா அமைப்புகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பெண்கள் பணிபுரிய தடை விதிக்கும் தலிபான்களின் உத்தரவு அபாயகரமானது. பல லட்சக்கணக்கான ஆப்கன் மக்களுக்கு, மனிதாபினமான உதவிகள் மிகவும் அவசியம். அந்த உதவிகள் கிடைத்தால்தான் அவர்களால் உயிர்வாழ முடியும். … Read more

ராகுல் காந்தி பாதுகாப்பு குறைபாடு: சிஆர்பிஎப் மறுப்பு!

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும், இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடனும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் 3,500 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியிலிருந்து நடை பயணத்தை செப்டம்பர் மாதம் 7ம் தேதி ராகுல் துவங்கினார். இதையடுத்து, கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் நடைபயணம் … Read more

ராகுல்காந்தி 2020-ம் ஆண்டிலிருந்து 113 முறை பாதுகாப்பு நெறிமுறைகளை மீறி உள்ளார் – சி.ஆர்.பி.எஃப்

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி 2020-ம் ஆண்டிலிருந்து டெல்லியில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணம் உள்பட 113 முறை பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியிருப்பதாக சி.ஆர்.பி.எஃப் தெரிவித்துள்ளது. டெல்லி நடைப்பயணத்தின்போது ராகுல்காந்தியின் பாதுகாப்பில் மீறல்கள் இருந்ததாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கடிதம் எழுதிய நிலையில், சி.ஆர்.பி.எஃப் இதனை தெரிவித்துள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்படுவது குறித்து ராகுல்காந்திக்கு அவ்வப்போது தெரிவிக்கப்பட்டதாகவும், முன்கூட்டிய பாதுகாப்பு பணி உட்பட ராகுல்காந்திக்கான பாதுகாப்பு முழுமையாக வழங்கப்பட்டு வருவதாகவும் வேணுகோபாலுக்கு சி.ஆர்.பி.எஃப் எழுதிய … Read more

வங்கிக்கடன் முறைகேடு வழக்கில் ஐ.சி.ஐ.சி.ஐ. முன்னாள் சி.இ.ஓ. சந்திர கோச்சார் உட்பட 3 பேருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்..!!

மும்பை: வங்கிக்கடன் முறைகேடு வழக்கில் ஐ.சி.ஐ.சி.ஐ. முன்னாள் சி.இ.ஓ. சந்திர கோச்சார் உட்பட 3 பேருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. சந்திர கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார்,  வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால் ஆகியோருக்கும் 14 நாள் காவல் விதிக்கப்பட்டுள்ளது. 3 பேரையும் 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்பில் குறைவில்லை ராகுல் தான் இதுவரை 113 முறை அத்துமீறியுள்ளார்: காங்கிரஸ் புகாருக்கு சிஆர்பிஎஃப் பதில்

புதுடெல்லி: டெல்லியில் நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது ராகுல் காந்தி பலமுறை பாதுகாப்பு வளையத்தை அத்துமீறினார் என்று சிஆர்பிஎஃப் பதிலடி கொடுத்துள்ளது. டிச.24 யாத்திரையின் போது ராகுல் காந்தி பாதுகாப்பில் சிஆர்பிஎஃப், காவல்துறை மெத்தமனமாக இருந்ததாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டிய நிலையில் சிஆர்பிஎஃப் இந்த விளக்கத்தை வழங்கியுள்ளது. முன்னதாக, ராகுல் காந்தி Z+ பாதுகாப்பைப் பெற்றவர் என்பதால் அவருக்கு போதுமான பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், அவரோடு பாத யாத்திரையில் பங்கேற்க இருக்கும் தலைவர்கள் தொண்டர்கள் … Read more