ராகுல்காந்தி 2020-ம் ஆண்டிலிருந்து 113 முறை பாதுகாப்பு நெறிமுறைகளை மீறி உள்ளார் – சி.ஆர்.பி.எஃப்

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி 2020-ம் ஆண்டிலிருந்து டெல்லியில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணம் உள்பட 113 முறை பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியிருப்பதாக சி.ஆர்.பி.எஃப் தெரிவித்துள்ளது. டெல்லி நடைப்பயணத்தின்போது ராகுல்காந்தியின் பாதுகாப்பில் மீறல்கள் இருந்ததாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கடிதம் எழுதிய நிலையில், சி.ஆர்.பி.எஃப் இதனை தெரிவித்துள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்படுவது குறித்து ராகுல்காந்திக்கு அவ்வப்போது தெரிவிக்கப்பட்டதாகவும், முன்கூட்டிய பாதுகாப்பு பணி உட்பட ராகுல்காந்திக்கான பாதுகாப்பு முழுமையாக வழங்கப்பட்டு வருவதாகவும் வேணுகோபாலுக்கு சி.ஆர்.பி.எஃப் எழுதிய … Read more

வங்கிக்கடன் முறைகேடு வழக்கில் ஐ.சி.ஐ.சி.ஐ. முன்னாள் சி.இ.ஓ. சந்திர கோச்சார் உட்பட 3 பேருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்..!!

மும்பை: வங்கிக்கடன் முறைகேடு வழக்கில் ஐ.சி.ஐ.சி.ஐ. முன்னாள் சி.இ.ஓ. சந்திர கோச்சார் உட்பட 3 பேருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. சந்திர கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார்,  வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால் ஆகியோருக்கும் 14 நாள் காவல் விதிக்கப்பட்டுள்ளது. 3 பேரையும் 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்பில் குறைவில்லை ராகுல் தான் இதுவரை 113 முறை அத்துமீறியுள்ளார்: காங்கிரஸ் புகாருக்கு சிஆர்பிஎஃப் பதில்

புதுடெல்லி: டெல்லியில் நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது ராகுல் காந்தி பலமுறை பாதுகாப்பு வளையத்தை அத்துமீறினார் என்று சிஆர்பிஎஃப் பதிலடி கொடுத்துள்ளது. டிச.24 யாத்திரையின் போது ராகுல் காந்தி பாதுகாப்பில் சிஆர்பிஎஃப், காவல்துறை மெத்தமனமாக இருந்ததாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டிய நிலையில் சிஆர்பிஎஃப் இந்த விளக்கத்தை வழங்கியுள்ளது. முன்னதாக, ராகுல் காந்தி Z+ பாதுகாப்பைப் பெற்றவர் என்பதால் அவருக்கு போதுமான பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், அவரோடு பாத யாத்திரையில் பங்கேற்க இருக்கும் தலைவர்கள் தொண்டர்கள் … Read more

புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்: ஜன.16-ல் அரசியல் கட்சிகளுக்கு செயல்முறை விளக்கம்

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது. சொந்தஊர்களை விட்டு இந்தியாவிற்குள் வேறு இடங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக ரிமோட் வாக்குப்பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி ஜனவரி 16ம் தேதி ஆணையம் செயல்முறை விளக்கம் தருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த இருக்கிறது. ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் (RVM) குறித்து ஜனவரி 31க்குள் அரசியல் கட்சிகள் கருத்துகளை … Read more

"இது கூடவா தெரியாது?” துப்பாக்கியில் தோட்டா நிரப்ப திணறிய உ.பி. போலீஸ்… கடுப்பான டிஐஜி!

காவல் நிலையங்களில் உயரதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தும் போதுதான், எந்தளவுக்கு தகுதியுடைய காவலர்கள் பணியில் இருக்கிறார்கள் என்பது வெளிச்சத்துக்கு வரும். அப்படித்தான் இரு தினங்களுக்கு முன்னர் உத்தர பிரதேசத்தில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் அம்மாநில டிஐஜி திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, ஒரு அதிர்ச்சியான விஷயம் தெரியவந்துள்ளது. ஆய்வின்போது, சப்-இன்ஸ்பெக்டரொருவரின் செயலை பார்த்து ஆய்வுக்கு சென்றிருந்த டி.ஐ.ஜி கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார். சந்த் கபிர் நகரில் உள்ள காலிலாபாத் காவல் நிலையத்தில் மாநில டி.ஐ.ஜி பரத்வாஜ் தலைமையிலான … Read more

வெஜ் பிரியாணியில் இறைச்சி துண்டு!!

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் பிரபல உணவகத்திற்கு ஆகாஷ் துபே என்பவர் சாப்பிட வந்தார். அவர் உணவக ஊழியரிடம் வெஜ் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவில் எலும்புத் துண்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உணவக உரிமையாளரிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் தவறுதலாக வந்து விட்டது என கூறி மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனாலும் ஆகாஸ் துபே இது குறித்து விஜய் நகர் … Read more

பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீறிய ராகுல் காந்தி!?

டெல்லியில் இந்திய ஒற்றுமை பயணத்தின் போது ராகுல்காந்தி பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீறியதாக சிஆர்பிஎப் குற்றம்சாட்டியுள்ளது. ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பாதுகாப்பு குளறுபடி நடந்ததாக கூறி காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.சிவேணுகோபால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், கடந்த 24ஆம் தேதி ராகுல் நடைபயணம் டெல்லிக்குள் நுழைந்த போது பலமுறை பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டது. கூட்ட நெரிசலை கட்டுபடுத்தும் பணியில் டெல்லி காவல்துறை தோல்வி அடைந்தது என குற்றம் சாட்டினார். z+ … Read more

எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணை அமைய வேண்டும்… ராகுல் காந்தி சொன்ன சுவாரஸ்ய பதில்

புதுடெல்லி: இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனக்கு எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்பது குறித்து மனம் திறந்துள்ளார். ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் அளித்தப் பேட்டியில் அவர் மனம் திறந்து திருமணம் பற்றி பேசியுள்ளார். இந்திரா காந்தி போன்ற குணநலன் கொண்ட பெண்ணை வாழ்க்கை துணையாக ஏற்பீர்களா என்று ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “எனக்கு எனது அன்னையை மிகவும் பிடிக்கும். என் பாட்டி … Read more

மோடியின் தாய் உடல்நிலை: குஜராத் அரசு சொன்ன தகவல்!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் மோடி (வயது 99) குஜராத், காந்தி நகர் ரேசானில் பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் அமைந்துள்ள தனது இளைய மகன் பங்கஜ் மோடியின் இல்லத்தில் வசித்து வருகிறார். பிரதமர் மோடி குஜராத் செல்லும் போதெல்லாம் தனது தாயாரை சென்று சந்தித்து வருவார். அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகும். இந்நிலையில் ஹீரா பென் மோடியின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று (டிசம்பர் 28) அவர் அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய … Read more

தான் பிரதமர் மோடியால் அசுர வளர்ச்சி பெற்றதாக கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு: தொழிலதிபர் அதானி மறுப்பு

டெல்லி: தான் பிரதமர் மோடியால் அசுர வளர்ச்சி பெற்றதாக கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று தொழிலதிபர் அதானி மறுப்பு தெரிவித்துள்ளார். தனது தொழில்களின் வளர்ச்சிக்கு எந்த ஒரு தனி நபரும் காரணமில்லை. 30 ஆண்டுகளில் பல தலைவர்கள், பல அரசுகள் செய்த சீர்திருத்தங்கள் எனது தொழில் வளர்ச்சிக்கு உதவின என்று அதானி விளக்கம் அளித்துள்ளார்.