நாட்டின் 7-வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி வரும் 30-ம் தேதி தொடங்கி வைக்கிறார்

கொல்கத்தா: நாட்டின் 7-வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி வரும் 30-ம் தேதி தொடங்கி வைக்கிறார். மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் இருந்து நியூ ஜல்பைகுரிக்கு இடையே புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை வரும் 30-ம் தேதி (வெள்ளிக்கிழமை) பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. இந்த இரண்டு ரயில் நிலையங்களுக்கிடையில் 550 கிலோமீட்டர் கொண்ட தூரத்தை 8 மணி நேரத்திற்கும் மேலான நேரத்தில் கடக்கும், தற்போதைய சதாப்தி … Read more

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தின் விலை இது தான்…!!

சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில், மரபணு மாற்றமடைந்த ‘பிஎப் 7’ வகை கொரோனா, அதிகளவில் பரவி வருகிறது. எனவே, முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசு வழிகாட்டுதல்கள் வழங்கியுள்ளது. இதையடுத்து, தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டு பயணியருக்கு, கொரோனா பரிசோதனை செய்யும் நடைமுறை, மீண்டும் துவங்கியுள்ளது. இந்நிலையில் மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை கோவேக்சினை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியது.பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு … Read more

ஒடிசா ஓட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்த ரஷ்ய தொழிலதிபர்

புபனேஸ்வர்: ரஷ்யாவைச் சேர்ந்த தொழிலதிபரும் மக்கள் பிரதிநிதியுமான பவெல் ஆன்டோவ், ஒடிசாவுக்கு சுற்றுலா வந்திருந்த நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்தார். ரஷ்யாவின் விளாடிமிர் மகாண மக்கள் பிரதிநிதிகளான விளாடிமிர் புதானோவ், பவெல் ஆன்டொனோவ் உள்ளிட்ட 4 பேர் கடந்த வாரம் இந்தியா வந்துள்ளனர். இவர்கள் ஒடிசாவில் ராயகடா என்ற பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் அறைகள் எடுத்து தங்கி உள்ளனர். கந்தமால் மாவட்டத்தில் உள்ள தரிங்பாடி என்ற இடத்திற்கு கடந்த 21-ம் தேதி சுற்றுலா சென்றுவிட்டு பிறகு … Read more

சபரிமலையில் இன்று மண்டல பூஜை ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்

திருவனந்தபுரம்: சபரிமலையில் 41 நாட்கள் நீண்ட மண்டல காலம் பிரசித்தி பெற்ற மண்டல பூஜையுடன் இன்று நிறைவடைகிறது. இதையொட்டி மதியம் சுவாமிக்கு மண்டல பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (17ம் தேதி) முதல் பூஜைகள் தொடங்கியது. கடந்த இரு வருடங்களாக அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டதால் … Read more

டிஜிட்டல் முறையில் வருகைப் பதிவு: நாடு முழுவதும் ஜன.1ம் தேதி முதல் அமல்..!

வரும் ஜனவரி 1-ம் தேதி முதல், தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் வருகைப் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிபடுத்தும் நோக்கில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மத்திய அரசால் கடந்த 2005-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், கிராமப்புற தொழிலாளர்களுக்கு ஒரு நிதி ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, நாள் ஒன்றுக்கு ரூ. 214 … Read more

சிபிஐ கைதுக்கு எதிராக சந்தா கோச்சார் மனு: அவசர வழக்காக விசாரிக்க மும்பை ஐகோர்ட் மறுப்பு

புதுடெல்லி: சிபிஐ-யின் கைது நடவடிக்கைக்கு எதிர்த்து ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோரை கடந்த வாரத்தில் சிபிஐ கைது செய்தது. சந்தா கோச்சார் ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக … Read more

தாயின் இறுதி ஆசை… ICU-வில் திருமணம் செய்து கொண்ட மகள்.. அடுத்து நடந்த துயரம்

பிகாரில் உடல்நிலை சரியில்லாமல் மரண படுக்கையில் கிடந்த தாயின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஐசியு-வில் தாயின் முன்பு ஒரு மகள் திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே அந்த தாய் பரிதாபமாக உயிரிழந்தார். பிகார் மாநிலம் குராரு தொகுதி பாலி கிராமத்தைச் சேர்ந்த லாலன் குமாரின் மனைவி பூனம் குமாரி வர்மா. இவருக்கு உடல்நிலை மோசமாகி கயாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், பூனம் குமாரியின் உடல்நிலை மேலும் மோசமாகி … Read more

கொரியர் கடையில் கொரியரில் வந்த மிக்சி வெடித்து விபத்து.. உரிமையாளரின் வயிற்றை துளைத்த மிக்சியின் பாகங்கள்..!

கர்நாடக மாநிலம் ஹாசன் நகரில் உள்ள கொரியர் கடையில் கொரியரில் வந்த மிக்சி வெடித்ததில் கடை உரிமையாளர் படுகாயமடைந்தார். கே.ஆர்.புரம் பகுதியில் சசி என்பவர் நடத்தி வரும் கொரியர் கடையில் வெடி சத்தம் கேட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது கடை முழுவதும் சேதம் அடைந்து காணப்பட்டதோடு, சசி கை விரல்கள் சேதமடைந்து, காயங்களுடன் கீழே விழுந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சசியிடம் விசாரணை நடத்தியதில், கொரியரில் … Read more

கர்நாடகாவில் பரபரப்பு: பார்சலில் வந்த மிக்சி வெடித்ததில் உரிமையாளரின் கை சிதைந்தது..காவல்துறை விசாரணை..!!

கர்நாடகா: கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கூரியர் மையத்திற்கு அனுப்பப்பட்ட பார்சல் மிக்சி பயங்கரமாக வெடித்து சிதறியதில் மையத்தின் உரிமையாளரின் கை சிதைந்தது இந்த சம்பவம் தீவிரவாத தாக்குதலா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது. ஹாசன் நகரை அடுத்த கே.ஆர்.புரத்தில் சசி என்பவர் கூரியர் மையத்தை நடத்திவருகிறார். நேற்று இரவு இவர் வழக்கம் போல் மையத்தில்  பணியில் இருந்தார். அப்போது திடீரென பலத்த சத்தத்துடன் வெடி சத்தம் கேட்டது. சத்தம்கேட்டு அரண்டுபோன அக்கம்பக்கத்தினர் கூரியர் மையத்திற்கு சென்று பார்த்தனர் … Read more

ஒரேநாளில் ஜே.பி.நட்டா வருகை – அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்… ஏன்? அண்ணாமலை பதில்!

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். குறிப்பாக கோவையில் இருந்து அதனை தொடங்குகிறார். இந்நிலையில் டெல்லியில் வானிலை மோசமாக இருந்ததால் அங்கிருந்து கிளம்புவதற்கு தாமதமாகி நட்டா கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு வரவில்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். நட்டாவை வரவேற்பதற்காக கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக பாஜகவினர் பல்வேறு ஏற்பாடுகளை இன்று செய்துள்ளனர். மேளதாளங்கள் முழங்க, ஆரத்தி எடுத்தும் வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் … Read more