சல்மான் கான் தீவிரவாதியாம்: சொல்கிறது பாகிஸ்தான்

புதுடெல்லி: இந்​தி நடிகர் சல்​மான் கான் தீவிர​வாதியாம் என பாகிஸ்​தான் அரசு கூறியுள்​ளது. சவுதி அரேபி​யா​வின் ரியாத் நகரில் சமீபத்​தில் நடை​பெற்ற ஒரு நிகழ்ச்​சி​யில் இந்தி நடிகர்​கள் சல்​மான் கான், ஷாருக் கான், அமீர் கான் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். இதில் சல்​மான் கான் பேசும்​போது, “இப்​போது, இந்தி திரைப்​படத்தை இங்கு வெளி​யிட்​டால் அது சூப்​பர் ஹிட் ஆகும். தமிழ், தெலுங்கு அல்​லது மலை​யாள திரைப்​படம் வெளி​யிட்​டாலும் பல நூறு கோடி வசூலாகும். ஏனென்​றால், இங்கு பலுசிஸ்​தான், ஆப்​கானிஸ்​தான், … Read more

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி – முழு விவரம்

புதுடெல்லி: தமிழகம், புதுச்சேரி, கேரளா உட்பட நாடு முழுவதும் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று தொடங்குகிறது. இதுதொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியதாவது: இந்தியாவில் கடந்த 1951 முதல் 2004 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி 8 முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைசியாக 2002-04 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு, பிஹார் மாநிலத்தில் … Read more

தெருநாய்கள் வழக்கில் தமிழகம் உள்ளிட்ட மாநில தலைமைச் செயலர்கள் நவ.3-ல் ஆஜராக வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ​நாடு முழு​வதும் தெரு​நாய்​களால் ஏற்​படும் பிரச்​சினை தொடர்​பாக உச்ச நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து விசா​ரிக்​கும் வழக்​கில் உரிய காலக்​கெடு​வுக்​குள் பதில்​மனு தாக்​கல் செய்​யாத தமிழகம் உள்​ளிட்ட பிற மாநிலங்​களின் தலை​மைச் செயலர்​கள் வரும் நவ.3-ம் தேதி ஆஜராகி விளக்​கமளிக்க வேண்​டுமென சம்​மன் பிறப்​பித்து உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் உத்​தர​விட்​டுள்​ளனர். தலைநக​ரான டெல்​லி​யில் சிறு​வர்​களை தெரு​நாய்​கள் துரத்​தி, துரத்தி கடித்து ரேபிஸ் தொற்று பரவியது தொடர்​பாக வெளி​யான செய்​தி​யின் அடிப்​படை​யில் நாடு முழு​வதும் உள்ள தெரு​நாய்​கள் பிரச்​சினை … Read more

திருமண நிகழ்ச்சிகளில் பெண்கள் தங்க நகைகள் அணிய கட்டுப்பாடு: உத்தராகண்ட் கிராமத்தில் விதி மீறினால் ரூ.50,000 அபராதம்

டேராடூன்: உத்​த​ராகண்ட் மாநிலம், ஜான்​சர் – பவார் பகு​தி​யில் உள்​ளது கந்​தார் கிராமம். பழங்​குடி​யின மக்​கள் வசிக்​கும் இந்த கிராமத்​தில் சமீபத்​தில், பழங்​குடி​யின தலை​வர்​களின் கூட்​டம் நடை​பெற்​றது. அப்​போது திரு​மணம் மற்​றும் குடும்ப நிகழ்ச்​சிகளில் திரு​மண​மான பெண்​கள், தங்க நகைகள் அணிய கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டன. அதன்​படி, திரு​மணம் போன்ற நிகழ்ச்​சிகளில் திரு​மண​மான பெண்​கள், தங்​கத்​தில் கம்​மல், மூக்​குத்​தி, தாலி ஆகிய​வற்றை மட்​டும் அணி​ய​லாம். மற்​றபடி ஆடம்​பர​மான தங்க நகைகளை அணிய கூடாது. மீறி​னால் ரூ.50,000 அபராதம் விதிக்​கப்​படும் … Read more

தன் மீதான தாக்குதல் வழக்கை புறக்கணிக்க கவாய் விருப்பம்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது நீதிமன்ற அறையில் நிகழ்ந்த தாக்குதலை அவர் புறக்கணிக்க விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். உச்ச நீதி​மன்​றத்​தில் தலைமை நீதிபதி பி.ஆர்​. க​வாய் தலை​மையி​லான அமர்வு வழக்கு விசா​ரணைக்​காக கடந்த 6-ம் தேதி கூடியபோது, வழக்​கறிஞர் ராகேஷ் கிஷோர் தனது காலணியை கழற்றி தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாயை நோக்கி வீசினார். ஆனால் அது அவர் மீது படவில்லை என கூறப்​படு​கிறது. இதையடுத்து அவர் போலீ​ஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணைக்கு பிறகு போலீஸார் அவரை விடுவித்தனர். … Read more

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தமிழகம் வருகை

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவராக தேர்வான பிறகு சி.பி. ராதாகிருஷ்ணன் முதன்முறையாக நாளை (செவ்வாய்க்கிழமை) மூன்று நாள் பயணமாக தமிழகம் வருகிறார். இது தொடர்பாக குடியரசு துணைத் தலைவர் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சி பி ராதாகிருஷ்ணன் நாளை தமிழகம் வருகிறார். மூன்று நாள் பயணமாக தமிழகம் வரும் அவர், கோவை, திருப்பூர், மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அரசு முறைப் பயணமாக … Read more

“குடும்பங்கள் நடத்தும் கட்சிகளின் அரசியல் இனி எடுபடாது என்பதை பாஜக நிரூபித்துள்ளது” – அமித் ஷா

மும்பை: குடும்பங்கள் நடத்தும் கட்சிகளின் அரசியல் இனி எடுபடாது என்பதை பாஜக நிரூபித்துள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் பாஜகவுக்கு புதிய அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (அக்.27) நடைபெற்றது. இதில், அடிக்கல் நாட்டிப் பேசிய பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, “1950-ல் இருந்தவர்கள் முதல் 2025-ல் இருப்பவர்கள் வரை, மூத்தவர்கள் முதல் இளையவர்கள் வரை பாஜகவினர் அனைவருக்கும் கட்சி அலுவகம் என்பது ஒரு கோயிலைப் … Read more

SIR | தமிழக வாக்காளர்களிடம் நவ.4 முதல் டிச.4 வரை வீடு வீடாக ஆய்வு – தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, குஜராத், மத்தியப் பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நாளை முதல் தொடங்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பிர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, பிஹாரைத் தொடர்ந்து அடுத்து வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். செய்தியாளர்களிடம் பேசிய ஞானேஷ் குமார், … Read more

AI போட்டோ மார்பிங்கால் உயிரிழந்த 19 வயது இளைஞர்! நடந்தது என்ன?

AI Morphing 19 Year Old Dies : AI புகைப்படத்தால், 19வயது நபரின் உயிர் பறிபோய் உள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்க்கலாம்.  

டிமேட் கணக்கில் டிஜிட்டல் மாயம்: ம.பி.யில் சில நிமிடங்கள் மட்டும் கோடீஸ்வரராக இருந்த வழக்கறிஞர்

போபால்: டிஜிட்டல் மாயம் காரணமாக மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் சில நிமிடங்கள் மட்டும் கோடீஸ்வரராக திகழ்ந்தார். மத்தியப் பிரதேசம் தர் மாவட்டம் தாம்நாத் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் வினோத் டாங்ளே. தனியார் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர் சமீபத்தில் தொடங்கிய டி-மேட் கணக்கில் சில நாட்களுக்கு முன்பு ‘ஹர்சில் அக்ரோ லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் 1,312 பங்குகள் வரவு வைக்கப்பட்டன. டிஜிட்டல் மாயம் காரணமாக தவறாக கணக்கிடப்பட்டு வந்த இந்த பங்குகளின் மொத்த … Read more