ஜும்மா மசூதியில் பெண்கள் நுழைய தடை – ஆளுநர் வேண்டுகோளை ஏற்று அறிவிப்பை வாபஸ் பெற்றார் இமாம்

புதுடெல்லி: டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் 17-ம் நூற்றாண்டில் முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஜும்மா மசூதி உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், இதன் 3 முக்கிய நுழைவாயில்களுக்கு வெளியே சில நாட்களுக்கு முன் ஓர் அறிவிப்பு வைக்கப்பட்டது. பெண்கள் தனியாகவோ அல்லது குழுக்களாகவோ நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து பெண்ணுரிமை செயற்பாட்டாளர் ரஞ்சனா குமாரி கூறும்போது, “இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது என்ன மாதிரியான … Read more

விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே அருண் கோயலுக்கு பதவி தேர்தல் ஆணையர் நியமனத்தில் அவசரம் ஏன்? ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: ‘ஒன்றிய அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே, தேர்தல் ஆணையராக அருண் கோயலை நியமித்தது ஏன்? இந்த நியமனத்தில் என் இவ்வளவு அவசரம்?’ என்று ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்வி கேட்டுள்ளது. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் அமைப்பு இருப்பது போல், இந்திய தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கும் ஒரு அமைப்பை ஏற்படுத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், கோபால் சங்கர் … Read more

தமிழ் செம்மொழி அந்தஸ்து பெற ஆன்மிக இலக்கியம் காரணமா? – ஆதீனங்கள் கருத்துக்கு தமிழ், வரலாற்று பேராசிரியர்கள் மறுப்பு

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் ஒரு மாத காலத்திற்கு நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள வந்த தமிழக ஆதீனங்களின் பேட்டி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் இரண்டு தினங்களுக்கு முன் வெளியானது. இதில், ஆன்மிக இலக்கியங்களால்தான் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்ததாக அவர்கள் கூறியிருந்தனர். இது தவறான கருத்து எனவும், 2004-ல் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க சங்க இலக்கியங்களே காரணம் என்றும் தமிழ் மற்றும் வரலாற்று பேராசிரியர்கள் கூறியுள்ளனர். செம்மொழி தமிழாய்வு மத்திய … Read more

'என் கணவர் செக்ஸ் வெறி பிடித்தவர்' காங்கிரஸ் எம்எல்ஏ மனைவி சோனியா காந்தியிடமே புகார்!

மத்திய பிரதேச எம்எல்ஏ உமாங்கு சிங்கார் என்பவரின் மனைவி, அவரின் கணவரின் மீது காவல்துறையில் பாலியல் துன்புறுத்தல் புகாரை அளித்துள்ளார். இதன்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவர், முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் கமல் நாத்  உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், தனக்கு நீதி கிடைக்க உதவ வேண்டும் என்று இக்கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதத்தை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கும் அந்த பெண், அனுப்பியுள்ளதாக … Read more

சிலை கடத்தல் விவகாரம் பொன்.மாணிக்கவேலிடம் சிபிஐ விசாரிக்கலாம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சிலை கடத்தல் விவகாரத்தில் பொன்.மாணிக்கவேலிடம் சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்வதேச கடத்தல் கும்பலோடு கூட்டு சேர்ந்து, பலகோடி மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள, திருவள்ளூர் மாவட்ட டிஎஸ்பி.யாக இருந்த காதர் பாட்சாபணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கில், பழவளூர் சிலை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்ப வைக்கவே, அவருடன் கூட்டு சேர்ந்து இந்த … Read more

காங்கிரசை வசைபாடுவதை கைவிட்டு குஜராத்தின் மோசமான பாஜ ஆட்சி பற்றி பேசுங்கள்: பிரதமருக்கு மல்லிகார்ஜுன கார்கே பதிலடி

புதுடெல்லி: காங்கிரசை வசைபாடுவதை தவிர்த்து, குஜராத்தின் மோசமான பாஜ ஆட்சி பற்றி பேசுங்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பதிலடி கொடுத்துள்ளார். குஜராத்தில் அடுத்த மாதம் 1 மற்றும் 5ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக குஜராத்தில் நேற்று முன்தினம் பிரசார பேரணியில் பேசிய பிரதமர் மோடி, ‘ஜனாதிபதி தேர்தலில் பழங்குடியினரான திரவுபதி முர்முவிற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கவில்லை. குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டதோடு, உறவினர்களுக்கு … Read more

ஒரு ஆண்… 4 பெண்கள்.. காரில் கடத்தி கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை..!!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள லெதர் ஃபேக்டரியில் தொழிலாளியாக பணியாற்றும் நபர் ஞாயிற்றுக்கிழமை இரவு பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி ஒரு கார் வேகமாக வந்துள்ளது. அந்த காரில் 20 வயது மதிக்கத்தக்க 4 இளம்பெண்கள் இருந்துள்ளனர். இதனையடுத்து காரில் இருந்த இளம்பெண்கள் ஒரு துண்டு சீட்டை நீட்டி அந்த நபரிடம் கொடுத்து முகவரி விவரம் குறித்து கேட்டுள்ளனர். அந்த துண்டு சீட்டை வாங்க சென்ற போது, அந்த பெண்கள் … Read more

பஸ்சை தூக்கி போட்டு ‘கபாலி’ அட்டகாசம்: 50 பயணிகள் அலறல்

திருவனந்தபுரம்: திருச்சூர் அருகே ‘கபாலி’ யானை 50 பயணிகளுடன் சென்ற கேரள அரசு பஸ்சை தந்தத்தால் தூக்கிப் போட்டு பயணிகளை கதிகலங்க வைத்து உள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் அருகே சாலக்குடி பகுதியில் கபாலி என்ற காட்டு யானை, கடந்த சில தினங்களுக்கு முன் 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சாலக்குடியில் இருந்து வால்பாறைக்கு சென்ற தனியார் பஸ்சை தாக்க முயன்றது. அந்த யானையிடமிருந்து தப்பிப்பதற்காக டிரைவர் பஸ்சை வளைவான அந்த மலைப்பாதையில் மிகவும் சாகசமாக 8 கிமீ … Read more

முகம் முழுவதும் முடி வளரும் வினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்!!

மத்தியப்பிரதேச மாநிலம் ராட்லாம் மாவட்டம் நண்ட்லெட்டா கிராமத்தை சேர்ந்த லலித் படிதார் என்ற இளைஞருக்கு பிறந்ததில் இருந்தே முகம் உள்பட உடல் முழுவதும் ரோமங்கள் வளர்ந்துள்ளது. எனவே, அவர் அந்த கிராமத்தில் விசித்திரமானவராக திகழ்ந்துள்ளார். அவருக்கு 6 வயது இருக்கும்போது குரங்கு மனிதர் என அக்கம் பக்கத்தினரால் அழைக்கப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்டுள்ளார். இதன் காரணமாக இவர் வீட்டில் இருந்து வெளியே வருவதை இல்லை. இவருக்கு உள்ளூர் தொண்டு நிறுவனங்களில் உதவியோடு மருத்துவ நிபுணர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் … Read more

அரசு மருத்துவமனையில் சிசுவை கவ்விக்கொண்டு ஓடிய நாய்!!

அரசு மருத்துவமனை அருகில் நாய் ஒன்று சிசுவின் உடலை கவ்விச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேரி என்னும் இடத்தில் அரசு மகப்பேறு மருத்துவமனை அமைந்துள்ளது. அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாய் ஒன்று வாயில் எதையோ கவ்விக் கொண்டு சுற்றி திரிந்துள்ளது. எதேச்சையாக பார்த்த ஒருவர், நாய் கவ்வியிருப்பது சிசுவின் உடல் என்று கண்டுபிடித்தார். இதனையடுத்து சிலர் நாயை விரட்டி சென்றனர். ஆனால் நாய் விடாமல் ஓடியது. ஒருகட்டத்தில் வாயில் கவ்வியிருந்த … Read more