உடல் முழுவதும் வெட்ட வெட்ட வளரும் முடி! அரியவகை நோயால் மீளா துயரத்தில் ம.பி. இளைஞர்!

werewolf syndrome என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வாலிபனின் புகைப்படம்தான் சமூக வலைதளங்களில் படு வைரலாகியிருக்கிறது. நோயின் பேருக்கு ஏற்றார் போல, அந்த வாலிபனின் முகம் உட்பட உடல் முழுவதும் முடிகளால் சுழப்பட்டிருக்கிறது. லலித் பதிடர் என்ற 17 வயது இளைஞனான அவர் மத்திய பிரதேசத்தின் நந்த்லேட்டா கிராமத்தைச் சேர்ந்தவராவார். லலித்தின் ஆறாவது வயதில் கண்டறியப்பட்ட இந்த அறியவகை நோய்க்கு மருத்துவத்தில் hypertrichosis என அழைக்கப்படுகிறது. hypertrichosis என்பது உடலின் பாகங்களில் அதிகளவில் … Read more

மங்களூரு குண்டுவெடிப்புக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் அமைப்பு பொறுப்பேற்பு

கர்நாடகா: மங்களூரு குண்டுவெடிப்புக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. நவம்பர் 19-ல் மங்களூரில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவில் திடீரென குக்கர் குண்டு வெடித்தது. குக்கர் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்ற இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் அமைப்பு குறித்து மங்களூரு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

”ஆர்கானிக் Pad-களால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்” – மாதவிடாய் குறித்த ஆய்வில் பகீர் தகவல்!

இந்தியாவில் பெண்கள் தங்களின் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கின்களில் இதயக்குறைபாடுகள், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற தீவிர பிரச்னைகளை ஏற்படுத்தும் ரசாயனங்களை கொண்டிருப்பதாக தன்னார்வு அமைப்பு செய்த ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. டாக்ஸிக்ஸ் லிங்க் என்ற தன்னார்வ அமைப்பு செய்த அந்த ஆய்வில், ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 10 சாம்பிள்களில் (6 கனிமமற்ற மற்றும் 4 கனிமங்கள் நிறைந்த சானிட்டரி நாப்கின்கள்) phthalates and volatile ரசாயனங்கள் இருந்தது உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக விரிவான அறிக்கை, `மென்சுரல் வேஸ்ட் 2022’ (மாதவிடாய்க்கால கழிவுகள் … Read more

மின்னல் வேகத்தில் தேர்தல் ஆணையர் நியமனம்: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!

புதிய தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக மத்திய அரசு ஆவணங்களை தாக்கல் செய்த நிலையில், புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தில், ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் இருப்பர். இவர்கள் பணி மூப்பின் அடிப்படையில் அந்தந்த பதவிகளில் நியமிக்கப்படுவர். அந்தவகையில், இந்தியாவின் புதிய தேர்தல் ஆணையராக … Read more

புதுச்சேரி – காலாப்பட்டு சிறையில் கைதி மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்..!!

புதுச்சேரி: புதுச்சேரி – காலாப்பட்டு சிறையில் கைதி முழவன் என்பவர் மீது தண்டனை கைதியான குமரன் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கைதி குமரன் நடத்திய தாக்குதலில் காயமடைந்த முழவனுக்கு சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

என்னாது இங்கேயுமா? ஏகப்பட்ட சலுகைகளுடன் இந்திய ஊழியர்களை வெளியேற்றும் அமேசான்

இந்திய ஊழியர்களை வெறுமனே பணிநீக்கம் செய்யாமல் பல்வேறு சலுகைகள் அடங்கிய VSP என்ற திட்டத்துடன் வெளியேற்றுகிறது அமேசான் நிறுவனம். ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கை தொடர்ந்து, உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனமும் இதுவரை இல்லாத அளவில் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகி வருகிறது. செலவினங்களை குறைக்க இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமேசான் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டது என அமேசான் தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவிலும் அந்நிறுவனம் … Read more

Measles outbreak: உலகெங்கும் வேகமெடுக்கும் தட்டம்மை – இந்தியாவிலும் அதிகரிக்கும் பாதிப்பு

உலகம் முழுவதும் தற்போது தட்டம்மை நோய் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதுகுறித்து, உலக சுகாதார மையம், அமெரிக்காவின் நோய் கட்டுபாடு மற்றும் தடுப்பு மையம் ஆகியவை இணைந்து எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.  அதில்,”கரோனா பெருந்தொற்று காலம் தொடங்கியதில் இருந்து தட்டம்மை நோய்க்கான எதிர்ப்பு சக்திகள் குறைந்து காணப்படுகிறது. ஏனென்றால், கடந்தாண்டு மட்டும் ஏறத்தாழ 40 மில்லியன் குழந்தைகள் தட்டமைக்கான தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லை.  இதனால், தற்போது தட்டம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளது. இந்த பாதிப்பு உலகெங்கிலும் காணப்படுகிறது” என … Read more

தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி : தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அறிவித்துள்ளது. வழக்கு குறித்து ஒன்றிய அரசு, மனு தாரர்கள் 5 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.

16 மாதங்களில் 38 பேர் டிஸ்மிஸ் – 'ஓபி' அடிக்கும் ஊழியர்களை களையெடுக்கும் ரயில்வே துறை

கடந்த 16 மாதங்களில் மட்டும் ஒவ்வொரு 3 நாட்களுக்கும் ஒரு செயல்படாத/ஊழல் அதிகாரியை களையெடுத்துள்ளது ரயில்வே துறை. உலகின் மிகப்பெரிய ரயில்வேயில் ஒன்று இந்திய ரயில்வே. ஆனாலும் இந்திய ரயில்வே நிறுவனம் லாபகரமானதாக இயங்கவில்லை என்கிற குறை ஆட்சியாளர்கள் தரப்பில் முன்வைக்கப்படுகிறது. ரயில்வே துறை சரியாக இயங்காமல் போனதற்கு உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தாமல் இருப்பது, நிர்வாகச் சீர்கேடு, ஊழல் உள்ளிட்ட காரணங்கள் முதன்மையானதாக உள்ளது. இச்சூழலில் தான் இந்திய ரயில்வே துறையை மறுசீரமைக்கும் முயற்சிகளில் இயங்கி உள்ளது மத்திய … Read more

என்ன மனுஷன்யா நீ..? 6 மாத கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் வரதட்சணைக்காக கொடுமைபடுத்தி கொலை செய்த கணவன்..!!

கர்நாடக மாநிலம் கங்ககொண்டனஹல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்குமார்(வயது 25). இவருக்கும் அருகே உள்ள ஐகூர் கிராமத்தை சேர்ந்த சந்திரகலாவுக்கும்(21) கடந்த 7 மாதத்திற்கு முன்பு ஏப்ரல் 13- ஆம் தேதி திருமணம் நடந்தது. சந்திரகலாவின் தந்தை பால் வியாபாரம் செய்து வரும் ஏழை என்றாலும் திருமணதத்தின் போது மோகன்குமார் அதிகமாக கேட்ட அனைத்து வரதட்சணை பொருட்கள் மற்றும் பணத்தை கொடுத்து தனது மகளின் திருமணத்தை விமர்சையாக நடத்தி உள்ளார். திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் சந்திரலேகா கர்ப்பமான … Read more