“முற்றிலும் தவறானது…” – நளினி உள்பட 6 பேர் விடுதலைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது முற்றிலும் தவறானது, சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியி மூத்த தலைவரும், பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த … Read more

'6 பேர் விடுதலை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று' – காங்கிரஸ் பரபரப்பு கருத்து!

ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது, ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என, காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்து உள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, கடந்த 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரசாரத்திற்கு வந்த போது படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை அடுத்து முன்னாள் பிரதமர் ராஜிவ் … Read more

இமாச்சல் பிரதேசத்தில் நாளை வாக்குப்பதிவு: 412 வேட்பாளர்களில் 94 பேர் மீது கிரிமினல் வழக்கு

சிம்லா: இமாச்சல் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கான சட்டப் பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நாளை (நவ. 12) நடக்கிறது. மொத்தமுள்ள 68 தொகுதிகளிலும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 412 வேட்பாளர்கள்  களத்தில் உள்ளனர். 412 வேட்பாளர்களில் 94 பேர் மீது கிரிமினல் வழக்குகள்  உள்ளன; இதில் 50 பேர் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் பட்டியலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் 11 வேட்பாளர்களில் ஏழு பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள்;  … Read more

மாறி மாறி ஆபாச கருத்துகள் கூறியதால் 2 நடிகைகள் மீதும் வழக்கு: மும்பை போலீஸ் நடவடிக்கை

மும்பை: தங்களுக்குள் மாறி மாறி ஆபாசமான கருத்துகள் கூறிய இரு நடிகைகள்  ராக்கி சாவந்த், ஷெர்லின் சோப்ரா ஆகியோர் மீது மும்பை போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். பாலிவுட் நடிகைகள் ராக்கி சாவந்த், ஷெர்லின் சோப்ரா ஆகியோர் ஒருவருக்கொருவர் பொதுதளங்களில் தரக்குறைவாக பேசி விமர்சித்து வருகிறார்கள். நடிகை ராக்கி சாவந்துக்கு 10 ஆண் நண்பர்கள் உள்ளதாக ஷெர்லின் சோப்ரா கூறினார். தன்னை இழிவுபடுத்திய ஷெர்லின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராக்கி சாவந்த் மும்பை போலீசில் புகார் … Read more

கூடுதலாக 1 மணி நேரம் பணிபுரிய வேண்டும்: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்..!

ஏழை மக்களின் நலனை மனதில் கொண்டு அரசு ஊழியர்கள் கூடுதலாக ஒரு மணி நேரம் பணிபுரிய வேண்டும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடக அரசு ஊழியர்களின் சம்பளத்தை மாற்றி அமைக்கும் நோக்கத்தில் ஓய்வுபெற்ற தலைமைச் செயலர் சுதாகர் ராவ் தலைமையில் 7-வது ஊதிய குழு அமைக்கப்படும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். இதற்காக, கர்நாடக அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் பெங்களூருவில் நேற்று முதல்வர் பசவராஜ் பொம்மையை நேரில் சந்தித்து … Read more

5 மருந்துகளில் செயல் திறன்பாடி இல்லை என கண்டுபிடிப்பு: அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் ராம்தேவ் நிறுவனங்கள்

லக்னோ: யோகா மாஸ்டர் ராம்தேவுக்கு சொந்தமான பதஞ்சலி நிறுவனம் தயாரிக்கும் 5 மருந்து பொருட்கள் உடலுக்கு கேடு விளைவிப்பதாக கூறி தடை விதிக்கப்பட்டுள்ளது. ராம்தேவ் நடத்தி வரும் பதஞ்சலி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் திவ்யா பார்மசி மதுக்ரிட், ஐக்ரிட், தைரோகிட், பிபிகிரிட், லிப்பிடோம் மாத்திரிகைகள் என 5 மருந்துகளை தயாரித்து விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த மருந்துகளை சாப்பிட்ட பலர் உடல் உபாதை ஏற்படுவதாக கூறி புகார் அளித்ததின் பேரில் உத்தரகாண்ட் மாநிலம் ஆயுர்வேதம் … Read more

கேரள அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் காரணமாக பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் நீக்கம்

கேரள அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் வலுவடைந்து வரும் நிலையில் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்கியுள்ளது பினராய் விஜயன் தலைமையிலான அரசு. பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் தேவையில்லை என்று கேரள அரசு அறிவித்துள்ளது. கேரள கலாமண்டலம் நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ஆரிப் முகமது கான் நீக்கப்பட்டதாக கேரள அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலை கலாச்சாரத்துறை சார்ந்த தகுதி வாய்ந்த நபர் ஒருவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட இருப்பதாக கேரள … Read more

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991ம் ஆண்டு மே  21ம் தேதி நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம்  தொடர்பாக பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் ஆகியோருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோருக்கு ஆயுள் … Read more

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு: அனைவரையும் விடுவித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளி  பேரறிவாளனை உச்சநீதிமன்றம் தனது தனிப்பட்ட அதிகார பிரிவை பயன்படுத்து  கடந்த மார்ச் மாதம் விடுவித்தது. இதனைதொடர்ந்து, அதே வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களையும் விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தை நாடினர். அந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கும் … Read more

திருமணத்திற்கு ஓகே சொல்லி திடீரென பின்வாங்கிய காதலி… ஆத்திரத்தில் குத்தி கொலை செய்த காதலன்!!

புனே சித்தார்த் நகரை சேர்ந்தவர் ஸ்வேதா விஜய் ரன்வாடே (26). இவருக்கும் பிரதீக் கிசான் தாமலே என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இந்த திருமணம் உடனே நடக்க வேண்டும் என்று பிரதீக் தெரிவித்துள்ளார். ஆனால், ஸ்வேதா காலஅவகாசம் கேட்டதால் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஸ்வேதா திருமணம் வேண்டாம் என்று கூறியதையடுத்து, பிரதீக் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார். இதனிடையே தற்கொலை செய்து கொள்ளபோவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். இருப்பினும் ஸ்வேதா மறுப்பு … Read more