பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநர் நீக்கம் – மாநில அரசு அதிரடி!

கேரள கலாமண்டலம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியில் இருந்து அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானை நீக்கி மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. கேரள மாநிலத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசுக்கும், மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே தொடக்கம் முதலே முட்டல் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே, கேரள மாநிலத்தில் உள்ள ஒன்பது பல்கலைக்கழக துணைவேந்தர்களும் பதவியில் … Read more

படைகள் எப்போதும் உச்சபட்ச தயார் நிலையில் இருக்க வேண்டும்: ராணுவ தளபதிகளுடனான உரையாடலில் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தல்..!

டெல்லி: படைகளை எப்போதும் உச்சபட்ச தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு மே 5-ம் தேதி சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். சீன தரப்பிலும் அதிக உயிர் பலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இரு நாட்டு ராணுவமும் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திய … Read more

ஜாக்குலின் பெர்னாண்டசை கைது செய்யாதது ஏன்? – அமலாக்க துறைக்கு நீதிமன்றம் கேள்வி!

பணப் பரிமாற்ற மோசடி வழக்கில், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசை கைது செய்யாதது ஏன் என அமலாக்கத் துறையிடம் டெல்லி நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், டெல்லி தொழிலதிபர்களின் குடும்பத்தினரை ஏமாற்றி, 200 கோடி ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். மோசடி செய்த பணத்தில், பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நோரா பதேகி ஆகியோருக்கு சொகுசு கார்கள் உட்பட பல விலை உயர்ந்த பொருட்களை இவர் … Read more

ஊட்டி – கூடலூர் சாலையில் சுற்றித்திரியும் குதிரைகளால் வாகன ஓட்டுநர்கள் அவதி

ஊட்டி: நீலகிரி  மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளும் குறுகியும், அதிக  வளைவுகளையும் கொண்டுள்ளன. இதனால், எதிரே வரும் வாகனங்கள் மிக அருகில்  வந்தால் மட்டுமே தெரியும். அதேபோல், வளைவான பகுதிகளில் கால்நடைகள் நின்றால்  கூட தெரியாது. இந்நிலையில், ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில்  தற்போது ஹில்பங்க் முதல் பைக்காரா வரையில் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில்  குதிரைகள் கூட்டமாக வலம் வருகின்றன. குறிப்பாக, தலைகுந்தா மற்றும் பைன்  பாரஸ்ட் பகுதிகளில் ஏராளமான குதிரைகள் தற்போது சாலையில் வலம் … Read more

நீரவ் மோடியை விரைவாக இந்தியா கொண்டுவர நடவடிக்கை: வெளியுறவு அமைச்சகம்

புதுடெல்லி: நீரவ் மோடியை விரைவாக இந்தியா கொண்டு வர மத்திய அரசு விரும்புவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி இதனைத் தெரிவித்தார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் பண மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். நாடு கடத்தப்படுவதற்கு எதிரான நீரவ் மோடியின் மனுவை தள்ளுபடி செய்த இங்கிலாந்து நீதிமன்றத்தின் … Read more

ஜம்முவில் பஸ்கள் மோதல் 3 பேர் பலி; 17 பேர் காயம்

சம்பா: ஜம்மு காஷ்மீர் சம்பா மாவட்டத்தில் 2 பஸ்கள் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். 17 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலையில் அதிவேகமாக ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் பயணம் செய்த பயணிகளில் சிலர், லேசான தூக்கத்தில் இருந்தனர். அந்த நேரத்தில் முன்னால் சென்ற ஒரு பஸ்சை முந்த முயன்றபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில், பஸ்சில் இருந்தவர்கள் … Read more

இலுப்பை பூ சாராயம் குடித்து போதையில் தூங்கிய யானைகள்: ஒடிசாவில்தான் இந்த சம்பவம்

புவனேஸ்வர்: ஒடிசாவில் இலுப்பை பூ சாராயம் குடித்த யானைகள் கூட்டம் போதையில் தூங்கின. இதனால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். நம் நாட்டில் பழங்குடியின சமுதாயத்தினர், இலுப்பை மர பூக்களை நீரில் ஊற வைத்து சாராயம் தயாரிப்பது வழக்கம். அப்படித்தான் ஒடிசா மாநிலத்தில் கியோன்ஜர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமத்தினர் இலுப்பை பூ சாராயம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினர். அவர்கள், தங்கள் கிராமத்துக்கு அருகில் உள்ள முந்திரிக்காட்டில் பெரிய பெரிய பானைகளில் தண்ணீர் நிரப்பி இலுப்பை பூக்களை போட்டு … Read more

இமாச்சல் வளர்ச்சிக்காக 5 ஆண்டுகளில் பாஜக அரசு எதையும் செய்யவில்லை: பிரியங்கா காந்தி சாடல்

சிர்மார்: இமாச்சல பிரதேசத்தின் வளர்ச்சிக்காக கடந்த 5 ஆண்டுகளில் ஆளும் பாஜக எதையும் செய்யவில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா குற்றம்சாட்டியுள்ளார். இமாச்சல பிரதேசத்தில் வரும் 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அந்த மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிவுக்கு வந்தது. சீர்மாரில் இறுதிக்கட்டப் பிரச்சாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி வத்ரா பேசியதாவது: “இமாச்சல பிரதேசத்தில் 30 லட்சம் இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 15 லட்சம் இளைஞர்கள் வேலை … Read more

சமூக வலைதள தகவல் போர் – சர்வதேச நடவடிக்கைக்கு ராஜ்நாத் சிங் அழைப்பு!

சைபர்- குற்றங்கள், சமூக வலைதளங்களின் தகவல் போர் போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முறியடிக்க சர்வதேச சமுதாயம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் தேசிய ராணுவ கல்லூரியின் 60ஆவது பட்டமளிப்பு விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இதில், பயிற்சி முடித்த இந்திய முப்படை அதிகாரிகள், ஆட்சிப்பணி அதிகாரிகள் மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு பட்டங்களையும் அவர் வழங்கினார். விழாவில் … Read more

டெல்லியில் பெண்கள் மதுகுடிப்பது 37% அதிகரிப்பு

புதுடெல்லி: கொரோனா பெருந்தொற்றுக்கு பின் டெல்லியில் பெண்கள் இடையே மதுபான நுகர்வு 37% அதிகரித்து உள்ளது. டெல்லியில் அரசின் மதுபான கொள்கை பற்றிய சர்ச்சை நீடித்து வரும் நிலையில், மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிரான பெயரில் செயல்பட்டு வரும் என்.ஜி.ஓ. அமைப்பு ஒன்று ஆய்வு மேற்கொண்டது. அதில், அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்து உள்ளன. நாட்டில் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட பின்பு ஊரடங்கு அமலான சூழலில், டெல்லி பெண்களிடையே மதுபான நுகர்வு அதிகரித்து உள்ளது … Read more