சிவாஜி விவகாரம் | “அவர் மகாராஷ்டிர ஆளுநர் அல்ல… பணிவான பாஜக தொண்டர்” – சஞ்சய் ராவத் காட்டம்
மும்பை: “சத்ரபதி சிவாஜி மகாராஜாவைப் பற்றி பேசியதன் மூலம் மகாராஷ்டிகாரவில் ஆளுநர் பதவிக்கான கண்ணியம் முடிவுக்கு வந்துவிட்டது” என்று மகாராஷ்டிரா மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் காட்டமாக விமர்சித்துள்ளார். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் அளித்த பேட்டி ஒன்றில், “நாங்கள் அவரை (பகத்சிங் கோஷ்யாரி) ஆளுநராக கருத தயாராக இல்லை. அவர் பாஜகவின் பணிவான தொண்டர். ஆளுநர் என்பவர் நடுநிலையோடு இருக்க வேண்டும். தன்னுடைய வார்த்தைகளிலும், நடத்தைகளிலும் … Read more