டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல முயற்சி: மணீஷ் சிசோடியா புகார்

டெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல முயற்சி நடப்பதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா புகார் அளித்துள்ளார். டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுவிடும் என்ற அச்சத்தில் சதி நடக்கிறது என அவர் கூறினார்.

நாடு முழுவதும் பொது சிவில் சட்டம்.. உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்..!

பொது சிவில் சட்டம் என்பது ஜனசங்கம் காலத்தில் இருந்து பாஜக அளித்து வரும் வாக்குறுதி ஆகும். எனவே இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் பாஜக உறுதியாக இருக்கிறது என்று, மத்திய அமைச்சர் அமித்ஷா கூறினார்.தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஆங்கில செய்தி சேனலின் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர், “பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என்பது ஜனசங்க காலத்தில் இருந்து மக்களுக்கு பாஜக அளித்து வரும் வாக்குறுதி ஆகும். எனவே, … Read more

அரசுக்கு சொந்தமான ஹோட்டல் அம்பானிக்கு கைமாறுகிறது..!

இந்திய அரசின் சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான மிகப் பிரமாண்டமான 5 நட்சத்திர அந்தஸ்து கொண்ட அசோக் ஹோட்டலை, முகேஷ் அம்பானி வாங்குவார் என்றும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தலைநகர் டெல்லியின் அடையாளங்களில் ஒன்றான, பிரதமரின் இல்லத்துக்கு மிகவும் அருகிலுள்ள அசோக் ஹோட்டல் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்திய அரசின் சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான மிகப் பிரமாண்டமான 5 நட்சத்திர அந்தஸ்து கொண்ட அசோக் ஹோட்டலின் விற்பனை விலையாக 7,409 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் மட்டுமின்றி, இந்திய … Read more

இந்தியப் பார்வையில் வரலாற்றை திருப்பி எழுதுங்கள்; மத்திய அரசு உதவி செய்யும்: அமித் ஷா

புதுடெல்லி: வரலாற்று ஆய்வாளர்கள் இந்திய வரலாற்றை திருப்பி எழுத வேண்டும். இந்திய பின்புலத்தில் எழுதப்படும் வரலாற்றுக்கு மத்திய அரசு உதவி செய்யும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். டெல்லியில் நேற்று அசாம் மாநில அரசின் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, “வரலாறு படித்த மாணவன் நான். நம் நாட்டின் வரலாறு சரியாக சொல்லப்படவில்லை. அது சிதைக்கப்பட்டுள்ளது என்று எனக்குத் தோன்றுகிறது. நாம் அந்தத் தவற்றை இப்போது சரி செய்ய … Read more

வரலாற்றை திருத்தி எழுதுங்கள்… நாங்க பாத்துக்கிறோம் – அமித் ஷா அதிரடி

17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அஹோம் தளபதி லச்சித் பர்புகான் என்பவரின் 400ஆவது ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்ட விழா மூன்று நாள்களுக்கு டெல்லியில் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்நிகழ்ச்சியை அசாம் மாநில அரசு ஏற்பாட செய்துள்ளது. இதில், இரண்டாம் நாளான நேற்று, சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறுகையில்,”நான் வரலாறு பாடத்தை படித்த மாணவன். நம்முடைய வரலாறு சரியாக பதிவுசெய்யப்படவில்லை என நான் கேள்விப்பட்டுள்ளேன். அந்த பேச்சு … Read more

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 77 புள்ளிகள் சரிந்து 62,194 புள்ளிகளில் வர்த்தகம்..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 77 புள்ளிகள் சரிந்து 62,194 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 16 புள்ளிகள் சரிந்து 18,467 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

ஜும்மா மசூதியில் பெண்கள் நுழைய தடை – ஆளுநர் வேண்டுகோளை ஏற்று அறிவிப்பை வாபஸ் பெற்றார் இமாம்

புதுடெல்லி: டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் 17-ம் நூற்றாண்டில் முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஜும்மா மசூதி உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், இதன் 3 முக்கிய நுழைவாயில்களுக்கு வெளியே சில நாட்களுக்கு முன் ஓர் அறிவிப்பு வைக்கப்பட்டது. பெண்கள் தனியாகவோ அல்லது குழுக்களாகவோ நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து பெண்ணுரிமை செயற்பாட்டாளர் ரஞ்சனா குமாரி கூறும்போது, “இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது என்ன மாதிரியான … Read more

விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே அருண் கோயலுக்கு பதவி தேர்தல் ஆணையர் நியமனத்தில் அவசரம் ஏன்? ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: ‘ஒன்றிய அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே, தேர்தல் ஆணையராக அருண் கோயலை நியமித்தது ஏன்? இந்த நியமனத்தில் என் இவ்வளவு அவசரம்?’ என்று ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்வி கேட்டுள்ளது. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் அமைப்பு இருப்பது போல், இந்திய தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கும் ஒரு அமைப்பை ஏற்படுத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், கோபால் சங்கர் … Read more

தமிழ் செம்மொழி அந்தஸ்து பெற ஆன்மிக இலக்கியம் காரணமா? – ஆதீனங்கள் கருத்துக்கு தமிழ், வரலாற்று பேராசிரியர்கள் மறுப்பு

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் ஒரு மாத காலத்திற்கு நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள வந்த தமிழக ஆதீனங்களின் பேட்டி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் இரண்டு தினங்களுக்கு முன் வெளியானது. இதில், ஆன்மிக இலக்கியங்களால்தான் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்ததாக அவர்கள் கூறியிருந்தனர். இது தவறான கருத்து எனவும், 2004-ல் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க சங்க இலக்கியங்களே காரணம் என்றும் தமிழ் மற்றும் வரலாற்று பேராசிரியர்கள் கூறியுள்ளனர். செம்மொழி தமிழாய்வு மத்திய … Read more

'என் கணவர் செக்ஸ் வெறி பிடித்தவர்' காங்கிரஸ் எம்எல்ஏ மனைவி சோனியா காந்தியிடமே புகார்!

மத்திய பிரதேச எம்எல்ஏ உமாங்கு சிங்கார் என்பவரின் மனைவி, அவரின் கணவரின் மீது காவல்துறையில் பாலியல் துன்புறுத்தல் புகாரை அளித்துள்ளார். இதன்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவர், முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் கமல் நாத்  உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், தனக்கு நீதி கிடைக்க உதவ வேண்டும் என்று இக்கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதத்தை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கும் அந்த பெண், அனுப்பியுள்ளதாக … Read more