ஒடிசாவில் நடைபெற்ற வண்ணமயமான படகு திருவிழா: சிறிய படகுகளில் தீபங்களை ஏற்றி வழிப்பட்ட மக்கள்

ஒடிசா: கார்த்திகை பவுர்ணமியை ஒட்டி ஒடிசா மாநிலத்தில் படகு திருவிழா கோலகலமாக கொண்டாடபடுகிறது. ஒடிசா மாநிலத்தில் கார்த்திகை பவுர்ணமி தினத்தில் கடல் தெய்வத்திற்கு பூஜைகள் நடத்தப்படுவது வாடிக்கையாகும். இதனையொட்டி ஒய்டா பந்தனா எனப்படும் படகு திருவிழா அதிகாலை முதலே கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வாழை மட்டை, தெர்மா கோல்கள் மற்றும் இதர மிதக்கும் பொருட்களை கொண்டு செய்யப்பட்ட சிறிய படகுகளில் தீபங்களை ஏற்றிய மக்கள் அதனை நீர்நிலைகளில் மிதக்க விட்டு வழிப்பட்டனர். புவனேஷ்வரில் நடைபெற்ற படகு திருவிழா … Read more

காப்புரிமை விதிமீறல் | காங்கிரஸ் ட்விட்டர் கணக்கை முடக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கை தற்காலிகமாக முடக்கும் படி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராகுல்காந்தி நடத்தி வரும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் ‘கேஜிஎஃப்-2’ படத்தின் பாடல் இசை அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டதாக இசைநிறுவனம் ஒன்று பதிந்த காப்புரிமை மீறல் வழக்கில் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. எம்ஆர்டி இசைநிறுனத்தை நிர்வகித்து வரும் எம் நவீன்குமார் என்பவர் கடந்த மாதத்தில் காங்கிரஸ் கட்சி நடத்தும் இந்திய ஒற்றுமை யாத்திரை கர்நாடகாவில் நடைபெற்ற போது, அதில் அனுமதி இல்லாமல் மாபெரும் கன்னட … Read more

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் 95-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேரில் வாழ்த்து

டெல்லி : பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் 95-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். டெல்லியில் அத்வானி இல்லத்துக்கு நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

`உங்களுக்கும் இஸ்க் இஸ்க்னு தான் கேட்குதா?’- 28 கோப்ராக்களோடு சென்ற பெண்ணை மடக்கிய பயணிகள்

ஜார்க்கண்டில் பெண்ணொருவர் அதிக விஷத்தன்மை கொண்ட பாம்புகளை ரயிலில் கடத்த முயன்றது தெரியவந்துள்ளது. அப்பெண்ணை ஜார்கண்ட் காவல்துறையினர் டாடாநகர் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர். அப்பெண் 28 அயல்நாட்டு வகை பாம்புகளையும், கூடவே மேலும் சில பூச்சிகளையும் கடத்துவதுவதாக ரயில்வே காவல்துறைக்கு பயணிகள் தரப்பிலிருந்து சீக்ரெட்டாக தகவல் கிடைத்ததாக தெரிகிறது. அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது அவை மீட்கப்பட்டுள்ளன. இந்த பாம்புகள், பல கோடிகளுக்கு சர்வதேச சந்தையில் விலைபோகக்கூடியதென சொல்லப்படுகிறது. காவல்துறை தரப்பிலான தகவல்களின்படி, “இவர் … Read more

காற்றின் தரம் மேம்பாடு: தொடக்கப் பள்ளிகளை நாளை திறக்க டெல்லி அரசு முடிவு

புதுடெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதால் தொடக்கப் பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. டெல்லியில் காற்றின் தரம் கடந்த வாரத்தில் மிகவும் மோசமடைந்தது. பல்வேறு இடங்களில் காற்றின் தரக்குறியீட்டு எண் 450-ஐ தொட்டுள்ளது. இதனால் காற்று மிக மோசமான நச்சுத்தன்மையை எட்டியுள்ளது. குறிப்பாக, நொய்டா பகுதியில் காற்றின் தரம் மிக மோசமாகியுள்ளதால், அங்கு 8-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு … Read more

’இந்து’… இந்த வார்த்தை எங்கிருந்து வந்துச்சு? அர்த்தம் தெரிஞ்சா அவ்ளோ தான்… காங்கிரஸ் தலைவர் பேச்சால் சர்ச்சை!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராகவும் இருப்பவர் சதிஷ் ஜர்கிஹோலி. இவர் பெலகாவி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, இந்து மதம் நம் மக்கள் மீது கட்டாயப்படுத்தி திணிக்கப்பட்டுள்ளது. ’இந்து’ என்கிற வார்த்தை எங்கிருந்து வந்தது தெரியுமா? பெர்சியாவில் இருந்து தான். இந்தியாவிற்கும், பெர்சியாவிற்கும் என்ன தொடர்பு? இந்து எப்படி நம் மதம் ஆகும்? வாட்ஸ்-அப், விக்கிபீடியா ஆகியவற்றில் தேடிப் பாருங்கள். இந்த வார்த்தை நம்முடையது … Read more

பணமதிப்பு நீக்கம்; 6 ஆண்டுகள் நிறைவு; பிரதமர் மோடி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ்

டெல்லி: பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 6 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அதன் தோல்வியை பிரதமர் மோடி ஒப்புக்கொள்ள மறுப்பதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. 2016ம் ஆண்டு நவ.8ம் தேதி இரவு 8 மணிக்கு தொலைக்காட்சிகளில் தோன்றிய பிரதமர் மோடி புழக்கத்தில் உள்ள 500,1000, ரூபாய்கள் நோட்டுகள் தடை செய்யப்படுவதாக அறிவித்தார். தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கிகள் கொடுத்து புதிய ஆயிரம் மற்றும் 2,000 ரூபாய் தாள்களை பெறுவதற்காக மக்கள் மாதக்கணக்கில் வங்கிகளில் வரிசையில் … Read more

ஆரம்பிக்கலாங்களா… இந்தியக் காடுகளில் வேட்டையை தொடங்கிய 'சீட்டாக்கள்'

நமீபியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட பின்னர், இந்தியக் காடுகளில் சிவிங்கிப்புலிகள் மேற்கொள்ளும் முதல் வேட்டை இதுவாகும். இந்தியாவில் முற்றிலும் அழிந்துபோன சிவிங்கிப் புலிகளை (சீட்டா) மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக 8 சிவிங்கிப் புலிகள் நமீபியாவிலிருந்து மத்தியப் பிரதேசத்திலுள்ள குனோ பால்பூர் தேசிய பூங்காவிற்கு தனி விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. அவற்றை  பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளான கடந்த செப்டம்பர் 17 அன்று சரணாலயத்திற்குள் விடுவித்தார். பொதுவாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு … Read more

கியான்வாபி மசூதியில் சிவலிங்க தரிசனத்துக்கு அனுமதி கோரிய மனு: இன்று தீர்ப்பு

வாரணாசி: உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இருப்பதாகவும் அதனை அன்றாடம் தரிசனம் செய்ய அனுமதி வேண்டும் என்று கோரியுள்ள மனு மீது வாரணாசி விரைவு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. உத்தரப் பிரதேசம் – வாரணாசியில் பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியபடி அமைந்துள்ளது கியான்வாபி மசூதி. அங்கிருந்த கோயிலை இடித்துவிட்டு முகலாய மன்னர் அவுரங்கசீப், அங்கு மசூதி கட்டியதாகக் கூறப்படுகிறது. இதன் மீதான வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், காசி விஸ்வநாதர் … Read more

தெலுங்கானாவில் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி..!!

தெலுங்கானா: தெலுங்கானாவில் வாரங்கல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். ஓங்கோல் பகுதியில் இருந்து தெலுங்கானாவுக்கு காரில் சென்றபோது நிகழ்ந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர்.