மோர்பி தொங்கு பால விபத்து – குஜராத் மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
அகமதாபாத்: மோர்பி தொங்கு பால விபத்து தொடர்பாக, தாமாகவே முன் வந்து வழக்குப் பதிவு செய்த குஜராத் உயர்நீதிமன்றம், விபத்து தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் மச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நூறாண்டு பழமையானதொங்கு பாலம் ஒன்று புனரமைக்கப்பட்டு, மறுபயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், பயன்பாட்டுக்கு வந்த 4 நாட்களிலேயே அந்த பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர். துருப்பிடித்த, பழைய கேபிள் வயர்கள் மற்றும் … Read more