”இனி ஃபோன் பயன்படுத்தினால் ஸ்பாட் ஃபைன்” கறார் காட்டும் கிராம பஞ்சாயத்து.. எங்கு தெரியுமா?

18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் எவருமே செல்ஃபோன் பயன்படுத்தக் கூடாது என்றும், கையும் களவுமான பிடிபட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் பஞ்சாயத்து நிர்வாகம் உத்தரவு போட்டுள்ளது. கடந்த நவம்பர் 11ம் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது என்றும், குழந்தைகள் செல்ஃபோனுக்கு அடிமையாவதில் இருந்து தடுக்கவே இந்த உத்தரவு போடப்பட்டிருக்கிறது என பன்சி கிராம நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிராவின் யவதமால் மாவட்டத்தில் உள்ள பன்சி என்ற … Read more

ராஜீவ் கொலையாளிகளை போல் விடுதலை செய்ய கோரி நீதிமன்றத்தில் சாமியார் மனு

புதுடெல்லி: ராஜீவ் கொலையாளிகளை விடுவித்தது போல் தன்னையும் விடுதலை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சாமியார் ஷ்ரத்தானந்தா மனு தாக்கல் செய்துள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த சாமியார் ஷ்ரத்தானந்தா என்ற முரளி மனோகர் மிஸ்ரா. இவரது மனைவி ஷகீரா நமாசி. முன்னாள் மைசூர் திவானின் பேத்தியான ஷகீரா தனது கணவர் அக்பர் கலீலை விவகாரத்து செய்த பின் ஷ்ரத்தானந்தாவை கடந்த 1986-ல் திருமணம் செய்தார். கடந்த 1991-ம் ஆண்டு ஷகீராவின் சொத்துகளை அபகரிப்பதற்காக ஷகீராவுக்கு மயக்க மருந்து … Read more

`லிவ்-இன்’ வாழ்க்கையால் குற்றங்கள் பெருகுகின்றன: ஒன்றிய அமைச்சர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: “லிவ் – இன் ரிலேஷன்ஷிப்’ உறவுகளினால் நாட்டில் குற்றங்கள் பெருகி வருகின்றன,’ என்று ஒன்றிய அமைச்சர் கவுஷால் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் வாடகைக்கு வீடு எடுத்து `லிவ்-இன்` உறவில் வசித்து வந்த மும்பையை சேர்ந்த அப்தாப் பூனேவாலா தனது காதலி ஷ்ரத்தாவை கொன்று,  உடலை 35 துண்டுகளாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசிய சம்பவம் நாட்டில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஒன்றிய வீடு மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை இணையமைச்சர் கவுஷால் … Read more

தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி முதலமைச்சர் கடிதம்!!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும், இலங்கை வசம் உள்ள விசைப் படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 16.11.2022 அன்று இரவு தமிழக மீனவர்கள் 4 பேர் உட்பட 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 198 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் … Read more

ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கிய அமேசான்! கலக்கத்தில் ஊழியர்கள்!

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவராகவும் இருப்பவர் எலான் மஸ்க். இந்த நிலையில், பிரபல சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை கடந்த வாரம் எலான் மஸ்க் தன் வசப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து ட்விட்டரில் பணியாற்றி வந்த 7,500 ஊழியர்களில் சுமார் 4 ஆயிரம் பேரை பணியில் இருந்து அதிரடியாக நீக்கினார். ட்விட்டரை தொடர்ந்து ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியது. … Read more

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம் எஸ்’: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை ஏவப்படுகிறது

சென்னை: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான ‘விக்ரம் எஸ்’ ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (நவம்பர் 18) காலை 11.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. விண்வெளி ஆய்வில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது. இதற்காக 2020-ம் ஆண்டு ‘இன்ஸ்பேஸ்’ என்ற அமைப்பு நிறுவப்பட்டது. இதன்மூலம் ராக்கெட், செயற்கைக்கோள் தயாரித்தல் பணிகளில் தனியார் நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டன. அந்தவகையில் ஹைதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் எனும் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தனது ராக்கெட்டுகளை … Read more

திருப்பதி மாவட்டம் கூடூர் சந்திப்பு அருகே சென்னை நோக்கி சென்ற நவஜீவன் ரயிலில் தீ விபத்து

திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் கூடூர் சந்திப்பு அருகே சென்னை நோக்கி சென்ற நவஜீவன் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பேன்ட்ரி பெட்டியில் திடீரெனெ தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் பீதியடைந்தனர். கூடூர் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி, பயனாளர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின் போது, தமிழ்நாட்டில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டும் இன்று முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி வரை, சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் இருந்து, பம்பைக்கு, … Read more

ராஜீவ் காந்தி கொலை வழக்கு | 6 பேர் விடுதலைக்கு எதிராக மறுசீராய்வு மனு – மத்திய அரசு தாக்கல் செய்தது

புதுடெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 6 பேரின் விடுதலையை எதிர்த்து, மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1991 மே 21-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 26 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் ஆகியோரது மரண தண்டனை உறுதி … Read more

மேற்கு வங்கத்துக்கு ஆளுநராக ஐஏஎஸ் அதிகாரி நியமனம்

புதுடெல்லி: மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக ஐஏஎஸ் அதிகாரி சி.வி.ஆனந்தா போஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர், துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, மணிப்பூர் ஆளுநராக உள்ள இல.கணேசனுக்கு, மேற்கு வங்க மாநிலம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் புதிய ஆளுநராக, ஐஏஎஸ் அதிகாரியான சி.வி.ஆனந்தா போஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி நேற்று பிறப்பித்தார். கலெக்டர், முதன்மை செயலாளர், கூடுதல் தலைமை செயலாளராக போஸ் … Read more