சட்டப்பேரவை தேர்தலில் ரொக்க செலவு வரம்பை ரூ.2,000 ஆக குறைக்கலாம்: தேர்தல் ஆணையம் பரிந்துரை

புதுடெல்லி: சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ரொக்க செலவு வரம்பை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரமாக  குறைக்கும்படி ஒன்றிய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நியாயமாக நடைபெறும் வகையில், ரூ.10 ஆயிரத்துக்கு மேலான  பரிவர்த்தனைகள்  காசோலை, வரைவோலை மற்றும் ஆர்டிஜிஎஸ் முறையில்தான் நடைபெற வேண்டும் என்று  தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.   தேர்தல் செலவுகளுக்காக வேட்பாளர்கள் தனி வங்கி கணக்கை துவக்க வேண்டும். தினசரி  செலவு கணக்கு விபரங்களை வேட்பாளர்கள் … Read more

10% இடஒதுக்கீடு வழக்கு – இன்று தீர்ப்பு!!

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்த 10% இடஒதுக்கீடு சட்டம் பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அமலில் உள்ளது. இதனை எதிர்த்து, பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் … Read more

தனிமைப்படுத்திய காலம் முடிந்ததால் ம.பி. பூங்காவில் விடப்பட்ட 2 சிவிங்கி புலி

புதுடெல்லி: மத்திய பிரதேச மாநிலத்தில் குனோ தேசிய பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 2 சிவிங்கி புலிகள் (சீட்டா) வனப்பகுதியில் நேற்று திறந்துவிடப்பட்டன. சிறுத்தையில் பல வகைகள் உள்ளன. இதில் சீட்டா வகைகள் சிவிங்கி புலிகள் என்று அழைக்கப்படுகின்றன. கடந்த 1950-க்குப் பிறகு இந்தியாவில் எந்தப் பகுதியிலும் இவை தென்படவில்லை. இந்நிலையில், பிரதமர் மோடியின் முயற்சியால் நமீபியாவில் இருந்து 8 சிவிங்கி புலிகள் (5 பெண்) மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டன. இந்த 8 சிவிங்கி … Read more

நாளை சந்திர கிரகணம் – திருப்பதி கோவில் நடை 11 மணி நேரம் மூடல்..!

சந்திர கிரகணம் நாளை நிகழ உள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை 11 மணி நேரம் மூடப்படுகிறது.  மதியம் 2.39 மணியில் இருந்து மாலை 6.29 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. அதையொட்டி நாளை காலை 8.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை நடை மூடப்படுகிறது. அந்த நேரத்தில் கோவிலில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சந்திர கிரகணம் முடிந்ததும் இரவு 7.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டபிறகு,   பக்தர்கள் … Read more

உத்தரகாண்டில் நிலநடுக்கம்

டேராடூன்: உத்தரகாண்டில் நேற்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டேர் அளவுகோலில் 4.5 புள்ளிகளாக பதிவாகி உள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள தெக்ரி என்ற பகுதியில் நேற்று காலை 8.33 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து அப்பகுதியில் உள்ள வீடுகள் குலுங்கின.  இதனால் பீதியில் மக்கள் பதறியடித்து வீடுகளை விட்டு அவசரமாக வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டேர் அளவுகோலில் 4.5 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கமானது டேராடூன், … Read more

கார்பன் ஆய்வு லிங்கத்தை பாதிக்குமா? தொல்பொருள் ஆய்வுத்துறை பதில் அளிக்க உத்தரவு

பிரயாக்ராஜ்: கார்பன் டேட்டிங் அல்லது இதர அறிவியல் பூர்வமான ஆய்வு முறைகள், கியான்வாபி வளாகத்தின் ஒசுகானாவில் கண்டுபிடிக்கப்பட்ட சிவ லிங்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி, தொல்பொருள் ஆய்வுத்துறை தலைமை இயக்குனருக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதிக்குள் உள்ள சிங்கார கவுரி அம்மன் உட்பட இதர தெய்வங்களை வழிபட அனுமதிக்க வேண்டும் என வாரணாசி நீதிமன்றத்தில் 5 பெண்கள் மனு செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த வாரணாசி நீதிமன்றம் … Read more

எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்க பாத்தியா.. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு அதே இடத்தில் தண்டனை..!

உத்தரபிரதேசத்தில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது சாலையில் கேக்கை கொட்டிய இளைஞர்களை, காவல்துறையினர் சுத்தம் செய்ய வைத்த காட்சி இணையத்தில் பரவி வருகிறது. லக்னோவில், சாலையில் பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள் சிலர், கேக்கை சாலையில் கொட்டி வீணடித்தனர். இதனை கவனித்த காவல் ஆய்வாளர் ஒருவர், இளைஞர்களை அழைத்து சாலையில் கொட்டப்பட்ட கேக்கை, அவர்களையே சுத்தம் செய்ய அறிவுறுத்தினார். Source link

குஜராத்தில் போட்டியிடாமல் இருக்க பாஜ என்னிடம் பேரம் பேசியது: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

அகமதாபாத்: குஜராத் தேர்தல் போட்டியில் இருந்து ஆம் ஆத்மி விலகிக்கொண்டால் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள டெல்லி அமைச்சர்கள் மனிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயினும் விசாரணை வளையத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என பாஜ தன்னிடம் பேரம் பேசியதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். ஆங்கில தொலைக்காட்சி பங்கேற்று கெஜ்ரிவால் பேசுகையில்:பாஜ முதலில் டெல்லியின் துணை முதல்வரான மணிஷ் சிசோடியாவை குறிவைத்தது. ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகினால் அவரை முதல்வராக்குவதாக ஆசை காட்டியது. ஆனால், … Read more

நாடு முழுவதும் மாணவர்கள், நடிகை, நடிகர்களுக்கு சப்ளை சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் சிக்கினான்: பாஜ தலைவர் கொலையில் முக்கிய குற்றவாளி: ரூ. 100 கோடி வரை சொத்து குவித்ததும் அம்பலம்

திருமலை: நாடு முழுவதும் மாணவர்கள், நடிகை, நடிகர்கள் என 50 ஆயிரம் பேருக்கு போதைப்பொருட்கள் சப்ளை செய்து வந்த சர்வதேச போதை கடத்தல் மன்னன் எட்வினை, ஐதராபாத் போலீசார் நேற்று முன்தினம் கோவாவில் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள சில பகுதிகளில் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகளவில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சந்தேகத்துக்குரிய பகுதிகளை போலீசார் கண்காணித்தனர். அப்போது, போதைப்பொருட்கள் சப்ளை செய்ததாக கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி ஐதராபாத்தை சேர்ந்த … Read more

வக்பு வாரிய சொத்துக்கள் கணக்கெடுப்பு இமாச்சலில் பொது சிவில் சட்டம்: பாஜ தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

சிம்லா: இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜ வெற்றி பெற்றால், அம்மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும், வக்பு வாரிய சொத்துக்களை கணக்கெடுத்து சட்ட விரோத செயல்கள் தடுக்கப்படும் என வாக்குறுதிகள் தரப்பட்டுள்ளன.இமாச்சல பிரதேச மாநிலத்தில் 68 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இம்மாநிலத்தில் பாஜ, காங்கிரஸ் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. தற்போது பாஜ ஆட்சி நடக்கும் நிலையில், மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் … Read more