139 தொகுதியில் வெற்றி பெற்று குஜராத்தில் மீண்டும் பாஜ ஆட்சி அமைக்கும்: கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்

அகமதாபாத்: குஜராத் தேர்தலில் 139 சீட்களுடன் அமோக வெற்றி பெற்று மீண்டும் பாஜ ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் அம்மாநிலத்தில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜவை எதிர்த்து காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் போட்டியிடுகின்றன. இதனால் மும்முனை போட்டி உருவாகி உள்ளது. பாஜ ஆட்சி மீது குஜராத் மக்கள் அதிருப்தி … Read more

தகுதியானவர் நீதிபதியாக வேண்டும் கொலிஜியத்திற்கு தெரிந்தவர் அல்ல: ஒன்றிய சட்ட அமைச்சர் மீண்டும் சர்ச்சை

மும்பை: ‘நீதிபதியாக தகுதியான நபர்களே நியமிக்கப்பட வேண்டும். கொலிஜியத்திற்கு தெரிந்தவர்கள் அல்ல’ என ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு மீண்டும் கொலிஜியம் முறையை எதிர்த்து பேசி உள்ளார். நாடு முழுவதும் தற்போது நீதிபதிகள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 மூத்த நீதிபதிகளை கொண்ட கொலிஜியம் அமைப்பு தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரைக்கிறது. அவர்களையே அரசு நீதிபதிகளாக நியமிக்க வேண்டும். இந்த நடைமுறையை ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு பொது வெளியில் வெளிப்படையாக … Read more

அதிவேகத்தில் வைரஸ்.. அரசு அதிரடி; பீதியில் உறைந்த மக்கள்!

பருவமழை தொடங்கி உள்ள நிலையில் ‘புளூ காய்ச்சல்’ வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரையில் அனைவரும், இதனால் பாதிக்கப்படுகின்றனர். இந்த காய்ச்சல் சுமார் 6 நாட்கள் வரை இருக்கும். உரிய சிகிச்சை மூலம் இதிலிருந்து மீளலாம். குழந்தை பருவத்தில் உடல் உறுப்புக்கள் வளர்ச்சி அடையும். மேலும் பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளுக்கு தான் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். எனவே குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும் என, … Read more

மத்திய பிரதேசத்தில் தகவல் சட்டத்தில் பெறப்பட்ட 8,500 பக்க ஆவணங்களை மாட்டு வண்டியில் எடுத்து சென்ற ஆர்வலர்

சிவ்புரி: மத்திய பிரதேசத்தில் சுமார் 8,500 பக்க ஆவணங்களை மாட்டு வண்டியில் தகவல் ஆர்வலர் ஒருவர் எடுத்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டம் பைராட் நகரை சேர்ந்த மஹ்கான் தாகத் என்ற சமூக ஆர்வலர்,  கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவரது பஞ்சாயத்தில் நடைபெற்ற திட்டங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து  இருந்தார். அவருக்கான பதிலை உரிய காலத்தில் பஞ்சாயத்து நிர்வாகம் அளிக்க வில்லை. அதனால் … Read more

'ரூ.500 கோடி கேட்டார்..! அரவிந்த் கெஜ்ரிவால் பெரிய ஃப்ராடு' – சுகேஷ் சந்திரசேகர் பரபரப்பு குற்றச்சாட்டு!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னிடம் 500 கோடி ரூபாய் வசூலித்து வரும்படி கூறியதாக, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் குற்றம் சாட்டி உள்ளார். தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் பேசி அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்டுத் தருவதாகக் கூறி, அமமுக தலைவர் டிடிவி தினகரனை லஞ்சம் கொடுக்க வைத்ததாக, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர், கடந்த 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவர், தற்போது டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். … Read more

குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி?.. கருத்துக் கணிப்பில் தகவல்

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்று தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் குஜராத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் சி-வோட்டர், ஏபிபி தனியார் நிறுவனங்கள் குஜராத் தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளன. அதன்படி, ‘182 உறுப்பினர்களைக் … Read more

”சார்.. நகை, பணத்த பறிக்க பாக்குறாங்க” – போலீசுக்கே செக் வைத்து அதிரடி காட்டிய பெண் IPS!

குற்றச் செயல்களை கண்காணிக்கும் போலீசாரையே ஒருவர் கண்காணித்தால் எப்படி இருக்கும்? ஏனெனில் அங்கொன்றும் இங்கொன்றுமாக காவல்துறையினரே சட்டத்திற்கு புறம்பான செயலில் ஈடுபடுவது குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம்தான் இருக்கிறது. ஆகையால் போலீசாரையே கண்காணிக்கும் கோரிக்கைகளும் அவ்வப்போது எழுவது வழக்கம். இந்த நிலையில், தனக்கு கீழே பணியாற்றும் காவல்துறையினரை மாறுவேடத்தில் சென்று பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் கண்காணித்து எப்படி பணியாற்றுகிறார்கள் என்பதை சோதித்து பார்த்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்திருக்கிறது. உத்தர பிரதேசத்தின் அவ்ரியா மாவட்ட துணை … Read more

கெஜ்ரிவாலை ஹிட்லருடன் ஒப்பிட்டு பேனர்!!

டெல்லியில் பாஜக அலுவலகம் முன்பு அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஹிட்லருடன் ஒப்பிட்டு பேனர் வைக்கப்பட்டுள்ளது. பாஜக பிரமுகர் தஜிந்திர பால் சிங் பாகா பாஜக அலுவலகம் முன்பு, அரவிந்த் கெஜ்ரிவாலை ஹிட்லருடன் ஒப்பிட்டு பேனர் ஒன்றை வைத்துள்ளார். அந்த பேனரில், ‘தான் வாழும் நகரினை எரிவாயு கிடங்காக மாற்றி வைத்திருக்கும் உலகின் இரண்டாவது தலைவர் கெஜ்ரிவால். முதலாவது நபர் ஹிட்லர். பொது நலன் கருதி தஜேந்திர பால் சிங் பாகா என்று தனது பெயரையும் குறிப்பிட்டுள்ளார். … Read more

பயணிகள் ரயிலில் திடீரென பற்றிய தீ!!

மேற்கு வங்கம் – மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் அச்சம் அடைந்தனர். மேற்குவங்க மாநிலம் சாலிமாரில் இருந்து மும்பையில் உள்ள லோக்மான்யா திலக் டெர்மினசுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டு இருந்தது. இந்த ரயில் இன்று காலை 8.43 மணிக்கு நாசிக் ரோடு ரயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென ரயிலின் பார்சல் வேன் பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர். அவர்கள் … Read more

6 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் 7 தொகுதியில் நாளை வாக்கு எண்ணிக்கை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

புதுடெல்லி: தெலங்கானா, பீகார், உத்தரப் பிரதேசம் உட்பட 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. தெலங்கானா மாநிலம் முனுகோடு, பீகாரின் மொகாமா, கோபால்கன்ச், மகாராஷ்டிராவின் அந்தேரி கிழக்கு, அரியானாவின் ஆதம்பூர், உத்தர பிரதேசத்தின் கோலா கோக்கராநாத், ஒடிசாவின் தாம்நகர் சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று முன்தினம் இடைத் தேர்தல் நடந்தது. இவற்றில் 3 தொகுதிகள் பாஜகவிடமும், 2 தொகுதிகள் காங்கிரஸிடமும், சிவசேனா மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியிடம் … Read more