பயணிகள் ரயிலில் திடீரென பற்றிய தீ!!

மேற்கு வங்கம் – மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் அச்சம் அடைந்தனர். மேற்குவங்க மாநிலம் சாலிமாரில் இருந்து மும்பையில் உள்ள லோக்மான்யா திலக் டெர்மினசுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டு இருந்தது. இந்த ரயில் இன்று காலை 8.43 மணிக்கு நாசிக் ரோடு ரயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென ரயிலின் பார்சல் வேன் பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர். அவர்கள் … Read more

6 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் 7 தொகுதியில் நாளை வாக்கு எண்ணிக்கை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

புதுடெல்லி: தெலங்கானா, பீகார், உத்தரப் பிரதேசம் உட்பட 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. தெலங்கானா மாநிலம் முனுகோடு, பீகாரின் மொகாமா, கோபால்கன்ச், மகாராஷ்டிராவின் அந்தேரி கிழக்கு, அரியானாவின் ஆதம்பூர், உத்தர பிரதேசத்தின் கோலா கோக்கராநாத், ஒடிசாவின் தாம்நகர் சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று முன்தினம் இடைத் தேர்தல் நடந்தது. இவற்றில் 3 தொகுதிகள் பாஜகவிடமும், 2 தொகுதிகள் காங்கிரஸிடமும், சிவசேனா மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியிடம் … Read more

வெளியானது தேர்வு முடிவுகள்!!

2021 டிசம்பர், 2022 ஜூன் மாதம் நடைபெற்ற UGC NET தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. யு.ஜி.சி நெட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.nta.ac.in என்ற இணையதளத்தில் காணலாம். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர், ஆராய்ச்சி மாணவர் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. newstm.in Source link

கேஜிஎஃப் பாடலை பயன்படுத்தியதாக ராகுல்காந்தி மீது வழக்குப்பதிவு!!

ராகுல்காந்தி நடைப்பயணத்தின் போது யாஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான கேஜிஎப் 2 திரைப்படத்தின் பாடல்கள், இசையை தனது வீடியோ ப்ரோமேஷன்களுக்கு அனுமதி பெறாமல் பயன்படுத்தியுள்ளார் என புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பெங்களூருவைச் சேர்ந்த எம்ஆர்டி மியூசிக் என்ற நிறுவனம் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ், சுப்ரியா ஆகியோர் மீது காப்புரிமை மீறல் புகாரில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. பெரும் தொகையை முதலீடு செய்து கேஜிஎப் 2 பாடல் காப்புரிமையை … Read more

இமாச்சலப்பிரதேச காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 300 யூனிட் இலவச மின்சாரம்.!

300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று இமாச்சலப்பிரதேச காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இமாச்சலப்பிரதேச தேர்தல் வரும் 12 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அக்கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மாட்டுச்சாணம் கிலோ 2 ரூபாய்க்கு வாங்கப்படும் என்றும் பெண்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் எனவும் தேர்தல் அறிக்கையில் வெளியீடு.   Source link

பண்ணை, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது தாய், தந்தை, 2 மகன்கள் கோடாரியால் வெட்டிக் கொலை: தண்ணீர் தொட்டியில் விழுந்து போதை விவசாயி தற்கொலை

ஜோத்பூர்: ராஜஸ்தானில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாய், தந்தை, 2 மகன்களை கோடாரியால் வெட்டிக் கொன்ற போதை விவசாயி, தானும் தண்ணீர் தொட்டியில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் லோஹாவத் பகுதியை சேர்ந்த விவசாயி சங்கர் லால் (38). இவர் தனது தந்தை (60), தாய் சம்பா (55), மனைவி மற்றும் மகன்கள் லட்சுமணன் (14), தினேஷ் (6) ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து … Read more

சபரிமலை பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ் – கேரள அரசு செம ஏற்பாடு!

சபரிமலைக்கு பெரு வழிப் பாதை வழியாக வரும் பக்தர்கள் வசதிக்காக புதிய செயலி உருவாக்கப்பட்டு உள்ளதாக கேரள மாநில வனத் துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் தெரிவித்து உள்ளார். கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு, உள்ளூரில் இருந்தும், உள்நாட்டில் இருந்தும், வெளி நாடுகளிலும் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருவர். இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல மகர விளக்கு சீசன் வரும் 16 … Read more

இந்தியாவின் சிபிஐ அதிகாரிகள் எனக்கூறிக் கொண்டு ஜெர்மன் பெண்ணிடம் கொள்ளையடித்த ஈரான் நாட்டு தந்தை, மகன் கைது: தலைநகர் டெல்லியில் நூதன மோசடி அம்பலம்

புதுடெல்லி: டெல்லியில் மருத்துவ சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம் கொள்ளையடித்த ஈரானிய தந்தை, மகன் மற்றும் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தலைநகர் டெல்லியில் தங்களை சிபிஐ அதிகாரிகள் எனக்கூறிக் கொண்டு ஜெர்மனி பெண் உள்ளிட்ட சிலரிடம் கொள்ளையடித்த கும்பலில் ஈரான் நாட்டை சேர்ந்த தந்தை மற்றும் மகனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், அவர்களுக்கு போலி அடையாள அட்டைகளை தயாரித்து கொடுத்த 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். … Read more

மோர்பி பாலம் புனரமைப்பில் இத்தனை கோடிகள் ஊழலா? – விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

குஜராத் மோர்பி பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில், நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன. விசாரணையில், பாலம் புனரமைப்பு பணிகளுக்காக 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் ரூ.12 லட்சத்தை மட்டும் தான் செலவிட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் அமைக்கப்பட்டிருந்து. இந்த பாலத்தை சீரமைக்கும் பணி 6 மாதங்களாக நடைப்பெற்று, கடந்த 26ஆம் தேதி திறக்கப்பட்டது. பாலம் சீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது முதல் … Read more

பாம்புக்கு பயந்து அசைவம் சாப்பிடாத வினோத கிராமம்!!

ஒடிசாவில் மாநிலம் தேன்கனல் மாவட்டம் பென்டசாலியா கிராம மக்கள் பாம்பு கடிக்கு பயந்து அசைவ உணவே சாப்பிடுவதில்லை. அதன் பின்னணி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இக்கிராம மக்கள் அசைவ உணவு சாப்பிட்டால் பாம்பு கடிக்கும் என்று நம்புவதாக தெரிவிக்கின்றனர். காலம், காலமாக இதனை கடைபிடித்து வருவதாகவும் அவர்கள் கூறினர். கிராமத்தின் நம்பிக்கைக்கு எதிராக யாராவது அசைவ உணவு சாப்பிட்டால் அவர்களுக்கு கண்பாதிப்பு ஏற்படும், உடல் நலக்குறைபாடுகள் உருவாகும் என்றும் முன்னோர் கூறியுள்ளதாக தெரிவித்தனர். இதனால் அந்த கிராமத்தில் … Read more