வெறி கொண்டு துரத்திய குரங்கு கூட்டம்… மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த நபர்!

உத்திரப்பிரதேசம் பரேலியில், நடந்த ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில், 40 வயதுடைய விவசாயி, தனது வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருக்கையில், குரங்குகள் கூட்டம் துரத்தியதில்,  மொட்டை மாடியில் இருந்து விழுந்து இறந்தார். தன்னைத் தாக்கிய குரங்குகளின் கூட்டத்திடமிருந்து தப்பிக்க முயன்றபோது தவறுதலாக மொட்டை மாடியில் இருந்து விழுந்து இறந்தார்.  இறந்த நபர் முகேஷ் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உடனடியாக பரேலி நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மாலை உயிரிழந்தார். … Read more

குஜராத் தேர்தலில் ஆம்ஆத்மி போட்டியிடாமல் இருக்க பாஜக பேரம் பேசியதாக கெஜ்ரிவால் பரபரப்பு குற்றசாட்டு

டெல்லி: குஜராத் தேர்தலில் ஆம்ஆத்மி போட்டியிடாமல் இருக்க பாஜக பேரம் பேசியதாக கெஜ்ரிவால் பரபரப்பு குற்றசாட்டு தெரிவித்துள்ளனர். ஆம்ஆத்மி போட்டியிடாமல் ஒதுங்கினால் டெல்லி அமைச்சர்கள் மீதான வழக்குகளை கைவிடுவதாக பாஜக பேரம் பேசியுள்ளனர் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளனர். டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்திர ஜெயினை வழக்கில் இருந்து விடுவிப்பதாகவும் பாஜக பேரம் பேசியுள்ளது.

கொசுக்களை பாட்டிலில் அடைத்து நீதிமன்றத்துக்கு வந்த கேங்க்ஸ்டர்; என்ன காரணம்?

முப்பை நீதிமன்றத்தில், சிறை கைதி கொசு வலை கேட்ட கோரிக்கை மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மும்பையின் பிரபல கேங்ஸ்டரான தாவூத் இப்ராகிம் கூட்டாளியான இஜாஸ் லக்டவாலா கைது செய்யப்பட்டு கடந்து இரண்டு வருடமாக தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல குற்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளதால் பல முயற்சிகள் எடுத்தும், இவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில் தலோஜா சிறையில் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் கொசு வலை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என மாவட்ட செஷ்ன்ஸ் … Read more

டெல்லி காற்று மாசு | தேர்தல் இலவசங்களை அறிவிப்பதில்தான் முதல்வர் தீவிரமாக இருக்கிறார் – கெஜ்ரிவாலை விமர்சித்த மத்திய அமைச்சர்

புதுடெல்லி: டெல்லியில் நிலவும் காற்று மாசினை போக்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும், அவரது கவனம் முழுவதும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் இலவசங்களை அறிவிப்பதில்தான் இருக்கிறது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா விமர்சித்துள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “டெல்லியில் உள்ள மக்கள் உடனடியாக முகக்கவசம் அணிந்து காற்று மாசிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், அரவிந்த் … Read more

தலைகீழாகத்தான் நிற்பேன்: திருமண போட்டோ ஷூட் அலப்பறைகள்!

பழைய நினைவுகளை நினைவூட்டும் பொக்கிஷமாக புகைப்படங்கள் இருந்தன. பிரிண்ட் போட்டு ஆல்பமாக வீட்டு அலமாரியில் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பார்த்து மகிழ்வது வழக்கம். ஆனால், நிலை மாறி, இன்றைய நவீன உலகில், போகிற போக்கில் செல்பி எடுத்து விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. புகைப்பட உலகில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் குறிப்பாக திருமண போட்டோக்களில் அதிகம் எதிரொலித்து வருகிறது. 1970களுக்கு முன்பெல்லாம் திருமண வீடுகளில் போட்டோ எடுக்கும் நிகழ்வு அரிதாகவே இருந்தது. 1990களுக்கு பின்னர், திருமண வீடுகளில் … Read more

50 நாள் தனிமையில் இருந்து விடுதலை: நமீபியா சிவிங்கி புலிகளை காட்டில் விட நடவடிக்கை

போபால்: மத்திய பிரதேசத்தில் பூங்காவில் உள்ள நமீபியா சிவிங்கி புலிகளை வனப்பகுதிக்குள் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் சிவிங்கி புலிகள் கடந்த 1952ம் ஆண்டுடன் அழிந்து விட்டதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இதனை மீண்டும் இந்தியாவில் இனப்பெருக்கம் செய்வதற்காக நடவடிக்கை எடுத்தது. இதன் ஒரு பகுதியாக, நமீபியாவில் இருந்து 5 பெண், 3 ஆண் என மொத்தம் 8 சிவிங்கி புலிகள் தனி விமானத்தில் கொண்டு வரப்பட்டது. மத்திய பிரதேசத்தில் உள்ள … Read more

குஜராத் விபத்து | மோர்பி பால சீரமைப்புக்கான ரூ.2 கோடி நிதியில் ரூ.12 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டது அம்பலம்

மோர்பி: குஜராத்தின் மோர்பி பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பாலத்தை சீரமைக்க ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடியில் ரூ.12 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டது அம்பலமாகி உள்ளது. குஜராத்தின் மோர்பி நகரில் மச்சூ நதியின் குறுக்கே 233 மீட்டர் நீளம், 4.6 அடி அகலத்தில் கேபிள் நடைபாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பாலம் கடந்த 1880-ஆம் ஆண்டு அதாவது, 140 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. பாலம் பழுதடைந்ததை அடுத்து, கடந்த … Read more

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் காலமானார்!

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி காலமானார். அவருக்கு வயது 105. இமாச்சலப் பிரதேசத்தின் கின்னோர் மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மீது தீராத நம்பிக்கை கொண்ட ஷியாம் சரண் நேகி மறைவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் தெரிவித்துள்ளது. “தேசத்திற்கான அவரது சேவைக்கு நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.” என்று தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான இந்தியர்களை … Read more

பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் தாம்பரம் சீசிங் ராஜா ஆந்திர எல்லையில் கைது: சிறப்பு தனிப்படை போலீசார்

ஆந்திரா: பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் தாம்பரம் சீசிங் ராஜா ஆந்திர எல்லையில் கைது செய்துள்ளனர்.  சீசிங் ராஜா மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என முப்பதுக்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கூலிப்படை கும்பல் தலைவன் தாம்பரம் சீசிங் ராஜாவிடமிருந்து ஒரு காய் துப்பாக்கியும் பறிமுதல் செய்துள்ளனர். வேளச்சேரியில் பணம் கேட்டு மிரட்டிய வழக்கு தொடர்ச்சியாக கைது என சிறப்பு தனிப்படை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கல்வியாண்டு முதல் இந்தியில் மருத்துவப்படிப்பு: உத்தரகண்ட் மருத்துவக் கல்வி அமைச்சர்

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் அடுத்த கல்வியாண்டில் இருந்து இந்தி மொழியிலும் (ஆங்கில மொழியிலும் பயிற்றுவிக்கப்படும் ) மருத்துக் கல்வி பயிற்றுவிக்கப்படும் என்று அம்மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் தன் சிங் ராவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் தன் சிங் ராவத் கூறுகையில், “மத்திய அரசு இந்தி மொழிக்கு சிறப்பு கவனம் செலுத்தி வருவதை கருத்தில் கொண்டு மாநிலத்தில் மருத்துவக் கல்வியை இந்தி மொழியில் பயிற்றுவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, பவுரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநகர் அரசு மருத்துவக்கல்லூரி … Read more