சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் காலமானார்!
சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி காலமானார். அவருக்கு வயது 105. இமாச்சலப் பிரதேசத்தின் கின்னோர் மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மீது தீராத நம்பிக்கை கொண்ட ஷியாம் சரண் நேகி மறைவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் தெரிவித்துள்ளது. “தேசத்திற்கான அவரது சேவைக்கு நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.” என்று தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான இந்தியர்களை … Read more