காரில் சாய்ந்து நின்ற சிறுவன் முதுகில் உதை: உரிமையாளர் கொடூரம்

திருவனந்தபுரம்: கேரளாவில் கார் மீது தெரியாமல் சாய்ந்து நின்ற 6 வயது சிறுவனை, எட்டி உதைத்த காரின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம், கண்ணூர் அருகே உள்ள தலச்சேரி பழைய பஸ் நிலையம் அருகே நோ பார்க்கிங் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு கார் நின்றது. அதன் மீது 6 வயது சிறுவன் ஏதேச்சையாக சாய்ந்து நின்றான். இதை பார்த்த காரின் உரிமையாளர், அந்த சிறுவனை ஆவேசமாக பாய்ந்து வந்து எட்டி உதைத்தார். இதை … Read more

மகாராஷ்டிராவில், பொட்டு வைக்காத பெண் பத்திரிகையாளரிடம் பேச மறுத்த சமூக ஆர்வலர் சம்பாஜி பிடே

மும்பை: மகாராஷ்டிராவில், பொட்டு வைக்காத பெண் பத்திரிகையாளரிடம் சமூக ஆர்வலர் சம்பாஜி பிடே பேச மறுத்துள்ளார். முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உடனான சந்திப்புக்கு பின் பத்திரிகையாளர் கேள்வி கேட்டபோது, பெண் என்பவள் பாரத மாதாவுக்கு நிகரானவள், பொட்டு வைக்காமல் விதவை போல் தோன்றக்கூடாது எனவும் கூறியுள்ளார்.

குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக இசுதான் காட்வி அறிவிப்பு

குஜராத்: சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக இசுதான் காட்வி அறிவிக்கப்பட்டார். குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதி, இருகட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

பஞ்சாப்பில் தர்ணா நடக்கும்போதே சிவசேனா தலைவர் சுதிர் சூரி சுட்டுக் கொலை! – பின்னணி என்ன?

பஞ்சாப் மாநிலத்தில் சிவசேனா கட்சித் தலைவர் சுதிர் சூரி அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமிர்தசரஸ் நகரில் உள்ள கோபால் மந்திர் என்ற கோயில் வளாகத்திற்கு வெளியே உள்ள குப்பையில் உடைக்கப்பட்ட சிலைகள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து பஞ்சாபில் சிவசேனா கட்சி சார்பில் இன்று போராட்டம் நடத்தினர். இந்த தர்ணா போராட்டத்துக்கு காவல்துறை பாதுக்காப்பும் அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று தர்ணா நடந்துகொண்டிருந்தபோது, அங்கு பொதுமக்களுடன் கலந்திருந்த அடையாளம் தெரியாத … Read more

ட்விட்டர் இந்தியா ஊழியர்களுக்கு கல்தா – எலான் மஸ்க் அதிரடி!

ட்விட்டர் இந்தியா அலுவலகத்தில் மார்க்கெட்டிங் மற்றும் கம்யூனிகேசன் துறைகளில் பணியாற்றியவர்கள் அனைவரையும் எலான் மஸ்க் பணி நீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டு உள்ளார். பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் 44 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து அண்மையில் வாங்கினார். இதை அடுத்து ட்விட்டர் நிறுவனத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். அதாவது, புளூ டிக் கட்டணம், ஊழியர்கள் குறைப்பு, விளம்பரங்களை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் … Read more

135 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதால் 5 நாட்களாக நடந்த மீட்புப் பணி நிறைவு: பேரிடர் மீட்புக் குழு ஆணையர் தகவல்

மோர்பி: குஜராத் விபத்தில் 135 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதால் 5 நாட்களாக நடந்த மீட்புப் பணி நேற்றிரவுடன் நிறைவு ெபற்றதாக பேரிடர் மீட்புக் குழு ஆணையர் தெரிவித்தார். குஜராத் மாநிலம் மோர்பி நகரில் கடந்த ஞாயிற்றுக் கிழமை தொங்கு  பாலம் அறுந்து விழுந்த விபத்தில், மச்சு ஆற்றில் மூழ்கி 135 பேர்  பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தற்போது அவர்கள்  மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இந்திய கடலோர காவல்படை,  இந்திய கடற்படை மற்றும் தேசிய பேரிடர் … Read more

எம்.எல்.ஏ-க்களை விலைபேசும் பாஜகவின் 'கரன்சி பாலிடிக்ஸ்’ கலாச்சாரத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்: டி.ஆர். பாலு

சென்னை: எம்.எல்.ஏ-க்களை விலைபேசும் பாஜகவின் ‘கரன்சி பாலிடிக்ஸ்’ கலாச்சாரத்தை மக்கள் எந்தக் காலத்திலும் ஏற்க மாட்டார்கள் என்று திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜகவினர் மேற்கொண்ட முயற்சிக்கு திமுக பொருளாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர். பாலு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தெலங்கானா மாநிலத்தின் ஆளுங்கட்சியான பாரத் ராஷ்டிர சமிதியின் (பிஆர்எஸ்) சட்டமன்ற உறுப்பினர்கள் 4 … Read more

”ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய ரூ.1,000கோடி ஒதுக்கீடு” – அமைச்சர்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் பிரதமர் மோடி குறித்த ‘மோடி அட் 20 : டிரீம்ஸ் மீட் டெலிவரி’ என்ற புத்தக கருத்தரங்க நிகழ்ச்சியில் எல்.முருகன் பங்கேற்றார். அதில் பேசிய அவர், மருத்துவம், பொறியியல், சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்கள் தாய்மொழியிலேயே படிக்க புதிய கல்விக் கொள்கை வழிவகுத்துள்ளதாக கூறினார். Source link

‘ஆன்லைன் கேமிங்’ மோசடி மூலம் ரூ.4,000 கோடி பணப் பரிவர்த்தனை அம்பலம்: சீனாவின் ‘டம்மி’ இந்திய இயக்குனர்களுக்கு சிக்கல்

புதுடெல்லி: ஆன்லைன் கேமிங் மோசடி மூலம் ரூ. 4,000 கோடி அளவிற்கு மோசடி பணப்பரிவத்தனை குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வரும்நிலையில், சீனாவின் டம்மி இந்திய இயக்குனர்கள் குறித்து அதிக மோசடிகள் நடந்துள்ளது அம்பலமாகி உள்ளது. நாடு முழுவதும் ‘ஆன்லைன் கேமிங்’ மூலம் நடைபெறும் மோசடி தொடர்பான புகார்களை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. குறிப்பாக சீன நிறுவனங்களின் சார்பில் இந்தியாவில் ‘ஆன்லைன் கேமிங்’ மோசடிகள் அதிகம் நடந்துள்ளன. அந்த வகையில் சீனாவைச் சேர்ந்த சில நிறுவனங்கள் போலி இந்திய … Read more

கர்நாடகாவில் பரபரப்பு: இருசக்கர வாகனத்தில் சென்றவரை விரட்டி தாக்கிய சிறுத்தை புலி..பொதுமக்கள் அலறல்..!!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூரு நகரில் சிறுத்தை புலி தாக்கியதில் 3 பேர் காயமடைந்தனர். கே.ஆர். நகர் பகுதிக்குள் மக்கள் சாலையில் நடந்து சென்றபோது அங்கு சிறுத்தை புலி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பொதுமக்கள் சத்தம் எழுப்பியதால் வழியில் தென்பட்டவர்களை சிறுத்தைப்புலி தாக்க தொடங்கியது. ஒருசிலர் வீட்டு சுவரில் ஏறி மொட்டை மாடிக்கு சென்று தப்பினர். அதேநேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரை சிறுத்தை புலி தாக்கியது. பொதுமக்கள் விரட்டி சென்றபோது அந்த புலி தப்பி … Read more