திருப்பதி மாவட்டத்தில் சாராயம் காய்ச்சும் கிராமங்கள் பசுமை மண்டலமாக மாற்றப்படும்-ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு

திருப்பதி : திருப்பதி மாவட்டத்தில் சாராயம் காய்ச்சும் கிராமங்கள் பசுமை மண்டலமாக மாற்றப்படும் என்று நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் வெங்கடரமணா தெரிவித்துள்ளார். ஆந்திர மாநில அரசு தலைமை செயலர் சமீர் சர்மா அனைத்து மாவட்ட கலெக்டர், இணை கலெக்டர்களுடன் கான்பரன்ஸ் மூலமாக நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இதில், திருப்பதி கலெக்டர் அலுவலகத்திலிருந்து கலெக்டர் வெங்கடரமணா, இணை ஆட்சியர் பாலாஜி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, தலைமை செயலாளர் சமீர் சர்மா மாநிலத்தில் நிலுவையில் … Read more

செங்கோட்டை தாக்குதல் வழக்கில் லஷ்கர் தீவிரவாதிக்கு மரண தண்டனை உறுதி

புதுடெல்லி: செங்கோட்டை தாக்குதல் வழக்கில் லஷ்கர் தீவிரவாதிக்கு விதித்த மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி டெல்லி செங்கோட்டைக்குள் தீவிரவாதிகள் சிலர் புகுந்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 ராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கில் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முகமது ஆரிஃப் என்கிற அஷஃபக் அடுத்த சில … Read more

கோவிட் அடுத்த அலை ரெடி! பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக்கோங்க! எச்சரிக்கும் WHO

புதுடெல்லி: கோவிட் பூஸ்டர் தடுப்பூசியை தவிர்க்க வேண்டாம் என்றும், அடுத்த கோவிட் அலை இந்தியாவில் வரலாம் என்றும் இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியர்கள் பூஸ்டர் டோஸ்களை கைவிடுவதால், ‘XBB வகை கொரோனா வைரஸ்’ மீண்டும் கோவிட்-19 அலையை ஏற்படுத்தலாம் என்றும் WHO எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.”ஒமிக்ரான் வகை வைரசின் 300-க்கும் மேற்பட்ட துணை வகைகள் உள்ளன. தற்சமயம் XBB வகை வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தலாம்” என்று நான் நினைக்கிறேன், இது ஒரு மறுசீரமைப்பு வைரஸ் ஆகும். … Read more

ஆட்சி மாறிவிட்டால் அனைத்து நடைமுறையும் மாறவேண்டும் என்பது இல்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஆட்சி மாறிவிட்டால் அனைத்து நடைமுறையும் மாறவேண்டும் என்பது இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி அக்கட்சியினர் மனு அளிக்கின்றனர். ஆட்சிக்கும், வழக்கு விசாரணைக்கும் சம்மந்தம் இல்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோஹி அமர்வு கூறியுள்ளார். 

திரிபுரா: மூங்கில் ஏற்றிவந்த லாரியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா கடத்தல்.!

திரிபுராவில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திரிபுரா அகர்தலாவில் உள்ள ஹவாய் பாரி பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மூங்கில் ஏற்றி வந்த வாகனத்தை சோதனை செய்தபோது, ஓட்டி வந்தவர்களின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியதில் முழு சோதனையையும் மேற்கொண்டனர். மேற்கொள்ளப்பட்ட சோதனையின் முடிவில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரனையில் ஈடுபட்டனர். பின்னர் கடத்தி வரப்பட்ட கஞ்சாவின் மதிப்பு … Read more

குஜராத் தேர்தல் | ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் யார்? – இன்று அறிவிக்கிறார் கேஜ்ரிவால்  

அகமதாபாத்: அடுத்த மாதம் நடைபெற உள்ள குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அரவிந்த் கேஜ்ரிவால் இன்று அறிவிக்கப்பட இருப்பதாக கட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என நேற்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதல் முறையாக குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி தேர்தலைச் சந்திக்க உள்ளது. இந்தநிலையில் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலின் போது அந்த … Read more

நாளை முதல் தொடர் விடுமுறை… 1 முதல் 5ஆம் வகுப்பு வரை… டெல்லி அரசு அறிவிப்பு!

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் காற்று தரக் குறியீடு 450ஐ தொட்டு அதிர்ச்சி அளித்துள்ளது. இதனால் ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் தொடர் விடுமுறை விடப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. காற்றின் நிலை சீரடையும் வரை தொடர் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு பரிசு, அரசு வெளியிட்டுள்ள பெரிய அறிவிப்பு

இலவச ரேஷன் விநியோகம்: உங்களிடம் ரேஷன் கார்டு இருந்து, அதில் மலிவான ரேஷன் பொருட்களை பெற்று வந்தால், இந்தச் செய்தி உங்களுக்குப் பயன்படும். ஆம், நவம்பர் மாதம் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு பெரிய செய்தியைக் கொண்டு வந்திருக்கிறது. உண்மையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் மக்களுக்கு பம்பர் அளவில் அரிசி கிடைக்கும். நவம்பர் மாதத்தில், மாநிலத்தின் பிபிஎல் குடும்பங்களுக்கு 45 கிலோ முதல் 135 கிலோ வரை அரிசி கிடைக்கும். இது தவிர, மாநிலத்தின் முன்னுரிமை ரேஷன் கார்டுதாரர்களுக்கு … Read more

மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி திறப்பு: திருவிதாங்கோடு தேவசம்போர்டு

திருவனந்தபுரம்: மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி திறக்கப்படும் என திருவிதாங்கோடு தேவசம்போர்டு அறிவித்துள்ளது. நவம்பர் 17 முதல் டிசம்பர் 27-ம் தேதி வரை சபரிமலை கோயிலில் மண்டல பூஜை நடைபெறும். மண்டல பூஜை நிறைவடைந்தபின் டிசம்பர் 27-ம் தேதி சபரிமலை கோயில் நடை மூடப்படும்.

நான் தவறு செய்திருந்தால் கைது செய்யுங்கள் – ஹேமந்த் சோரன் சவால்

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், நிலக்கரி சுரங்க குத்தகையை தனக்கே வழங்கிக் கொண்டார் என தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் செய்தது. இதை பரிசீலித்த தேர்தல் ஆணையம், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. ஆளுநர் இன்னும் முடிவு எடுக்கவில்லை. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, ராஞ்சி அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகுமாறு சோரனுக்கு சம்மன் அனுப்பியது. இதன்படி, சோரன் நேற்று அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகவில்லை. மாறாக … Read more