டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் மக்கள் அவதி – வீட்டில் இருந்து பணிபுரிய முதல்வர் கேஜ்ரிவால் கோரிக்கை

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவு 450 ஏக்யூஐ-க்கும் (Air Quality Index) அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அனைவரும் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் என்று முதல்வர் அர்விந்த் கேர்ஜிவால் வலியுறுத்தி உள்ளார். அத்துடன், 10 லட்சம் கட்டிடப் பணியாளர்களுக்கு ரூ.5,000 உதவித்தொகையும் அறிவித்துள்ளார். ஏக்யூஐ எனப்படும் காற்று தரக் குறியீடு பூஜ்ஜியம் முதல் 50 வரை இருந்தால் சிறந்த நிலையாகக் கருதப்படுகிறது. 51 முதல் 100 என்பது திருப்திகரமானது, 101 முதல் 200 … Read more

நாடு முழுவதும் ஒரே ஆண்டில் 20 ஆயிரம் பள்ளிகள் மூடல்: 2.8 லட்சம் ஆசிரியர்கள் வேலையும் காலி

புதுடெல்லி: கடந்த 2020-21ம் ஆண்டில் நாடு முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. ஆசிரியர்களின் எண்ணிக்கையும் 2.8 லட்சம் குறைந்துள்ளது. இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு பிளஸ் (யுடிஐஎஸ்இ+) 2021-22ம் ஆண்டிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: * 2020-21ம் ஆண்டில் நாடு முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன.* நாட்டில் 15.09 லட்சமாக இருந்த பள்ளிகளின் எண்ணிக்கை, 2020-21ம் ஆண்டில் 14.89 லட்சமாக … Read more

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர்: 106 வயது நேகி தபால் வாக்கு செலுத்தினார்

சிம்லா: சுதந்திரத்துக்குப் பிறகு 1952-ல் முதல் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. தட்பவெப்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு இமாச்சல பிரதேசத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் 1951 அக்டோபரில் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது கின்னவூர் மாவட்டம், மண்டி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட கல்பா வாக்குச் சாவடியில், பள்ளி ஆசிரியராக இருந்த ஷியாம் சரண் நேகி காலை 7 மணிக்கு முதல் வாக்காளராக தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். தற்போது அவருக்கு 106 வயதாகிறது. இந்த சூழலில் இமாச்சல் பேரவைத் … Read more

உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லயாவின் வழக்கறிஞர் விடுவிப்பு – லண்டன் முகவரி, இமெயிலில் தொடர்பு கொள்ள முடியவில்லை என விளக்கம்..!

லண்டனில் உள்ள விஜய் மல்லயாவைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் ஆஜரான அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். தம்மை இவ்வழக்கில் இருந்து விடுவிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். லண்டனில் உள்ள விஜய் மல்லயாவின் இமெயில் ஐடி, முகவரி உள்ளிட்ட விவரஙங்களைத் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். ஆனால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற மனுவை ஏற்று வழக்கறிஞர் இ.சி.அகர்வாலை இவ்வழக்கில் இருந்து விலக நீதிபதிகள் அனுமதியளித்தனர். Source link

தமிழகத்தில் நவம்பர் 8-ம் தேதி வரை கனமழை தொடரும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: தமிழகத்தில் நவம்பர் 8-ம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் பள்ளிகளில் தினமும் 10 நிமிடம் கட்டாய‌ தியானம் – கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் தகவல்

பெங்களூரு: கர்நாடகாவில் பள்ளிகள் மற்றும் பி.யூ. கல்லூரிகளில் தினமும் 10 நிமிடம் தியானம் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும் என அம்மாநில கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா பெருந்தொற்றுக்கு பிறகு மாணவர்களால் வகுப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை நிலவுகிறது. செல்போன், சமூக வலைதளங்கள், ஆன்லைன் விளையாட்டு ஆகியவற்றுக்கு அடிமையாகியுள்ளனர். கவனச் சிதறல், படிப்பில் ஈடுபாடின்மை ஆகியவற்றால் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிக்க வேண்டிய நிலை … Read more

தவறு செய்திருந்தால் எதற்கு சம்மன்? முடிந்தால் கைது செய்யுங்கள்: அமலாக்கத்துறைக்கு ஜார்கண்ட் முதல்வர் சவால்

புதுடெல்லி: ‘தவறு செய்திருந்தால் எதற்கு சம்மன் அனுப்ப வேண்டும். முடிந்தால் வந்து என்னை கைது செய்யுங்கள்,’ என்று அமலாக்கத்துறைக்கு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சவால் விட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் முறைகேடு தொடர்பான நிதி பரிமாற்ற மோசடி வழக்கில் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பங்கஜ் மிஸ்ராவும், மேலும் 2 பேரையும் அமலாக்கத்துறை சமீபத்தில் கைது செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு ஆஜராகும்படி முதல்வர் … Read more

ஊழல் செய்பவர்கள் தப்பிவிடக் கூடாது: பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: ஊழல் செய்பவர்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தப்பிவிடக் கூடாது என ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வலியுறுத்தினார். ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) டெல்லியில் நேற்று கொண்டாடியது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசியதாவது: ஊழலுக்கு எதிராக போராடவேண்டும் என செங்கோட்டையில் இருந்து சுதந்திர தின உரையாற்றியபோது அழைப்பு விடுத்தேன். அரசுத் துறையில் வசதிகள் குறைவாக இருப்பது, தேவையற்ற … Read more

நெற்றியில் குங்குமம் வைக்காத பெண் நிருபருக்கு அவமதிப்பு: வலதுசாரி சிந்தனையாளருக்கு நோட்டீஸ்

மும்பை: நெற்றியில் குங்குமம் வைக்காத பெண் நிருபரிடம் பேச மறுத்த வலதுசாரி சிந்தனையாளர் சாம்பாஜி பிடேவுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வலதுசாரி  சிந்தனையாளர் சாம்பாஜி பிடே. இவர் உள்ளிட்டோர் பேசிய பேச்சுகள்தான், 2018ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள புனே, பீமா கோரேகாவில் நடந்த கலவரத்துக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும், தனது தோட்டத்தில் விளையும் மாம்பழங்களை சாப்பிட்டவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று கூறி, அதே ஆண்டில் சாம்பாஜி சர்ச்சையை … Read more

தெலங்கானா உட்பட 6 மாநிலங்களில் 7 சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு

புதுடெல்லி: தெலங்கானா, பிஹார், உத்தரப் பிரதேசம் உட்பட 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று நடந்த இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. தெலங்கானாவின் முனுகோடு, பிஹாரின் மொகாமா, கோபால்கன்ச், மகாராஷ்டிராவின் அந்தேரி கிழக்கு, ஹரியாணாவின் ஆதம்பூர், உத்தர பிரதேசத்தின் கோலா கோக்கராநாத், ஒடிசாவின் தாம்நகர் சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று இடைத் தேர்தல் நடந்தது. இவற்றில் 3 தொகுதிகள் பாஜகவிடமும், 2 தொகுதிகள் காங்கிரஸிடமும், சிவசேனா மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியிடம் தலா ஒரு … Read more