இவிஎம் இயந்திரங்களில் சின்னத்துக்கு பதில் வேட்பாளர் படம் வைக்க கோரிய மனு தள்ளுபடி
புதுடெல்லி: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் (இவிஎம்) அரசியல் கட்சிகளின் சின்னத்துக்குப் பதில், வேட்பாளரின் புகைப்படம், விவரங்களை வைக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேர்தல்களின் போது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் இடம்பெறும். இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் அஷ்வினி உபாத் யாய் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறும்போது, ‘‘வாக்குப் பதிவு இயந்திரங்களில் அரசியல் கட்சிகளின் சின்னங்களுக்குப் பதில், வேட்பாளர்களின் புகைப்படம் மற்றும் … Read more