ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல்

புதுடெல்லி: இந்திய கடற்படையின் பயன்பாட்டுக்காக நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து ஏவப்படும் அதிவேக ஏவுகணை(எஸ்எல்பிஎம்) உருவாக்கப்பட்டது. இதை அணுசக்தி ஏவுகணைகளை ஏவும் திறன்படைத்த ஐஎன்எஸ் அரிஹந்த் என்ற நீர்மூழ்கி கப்பலில் இருந்து பரிசோதிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்ட எஸ்எல்பிஎம் ஏவுகணை, சிறப்பாக செயல்பட்டு இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், ‘இந்த சோதனை இந்தியாவின் அணு ஏவுகணை திட்டத்தில் மிக முக்கியமான … Read more

இருண்ட வானில் நம்பிக்கை ஒளி விளக்கு.. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றி ஐ.எம்.எப் தலைவர் கருத்து

இருள் சூழ்ந்த அடிவானத்தில் நம்பிக்கை ஒளியாக இந்தியாவின் பொருளாதாரம் இருப்பதாக சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எப்.பின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா தெரிவித்துள்ளார். ஜி 20 நாடுகள் கூட்டமைப்புக்கு டிசம்பர் 1 ம் தேதி முதல் ஓராண்டுக்கு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ளது.இந்தியா தலைமை ஏற்றதும் ஜி 20 நாடுகளுடன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 200 கூட்டங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய கிறிஸ்டாலினா, கடினமான காலங்களிலும் கூட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சீராக … Read more

கலால் கொள்கை முறைகேடு டெல்லியில் 25 இடத்தில் அமலாக்கத்துறை ரெய்டு

புதுடெல்லி: டெல்லியில் அமல்படுத்தப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான கலால் கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக டெல்லி துணை முதல்வர் சிசோடியா உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்து நாடு முழுவதும் அதிரடி சோதனைகளை அடிக்கடி நடத்தி வருகிறது. இந்தநிலையில் தலைநகரில் 25 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை மீண்டும் சோதனை நடத்தியது. இந்த சோதனையானது … Read more

எத்தனால் பெட்ரோல் டிசம்பரில் விற்பனை; ஒன்றிய அமைச்சர் பூரி உறுதி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில்  ஒன்றிய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நேற்று அளித்த பேட்டி வருமாறு: எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையை 2023ம் ஆண்டு ஏப்ரலில் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பாகவே இந்தாண்டு டிசம்பர் அல்லது அடுத்தாண்டு ஜனவரியில் இது விற்பனைக்கு வரும் என நம்புகிறேன். நுகர்வோர் தங்களின் விருப்பத்தின் பேரில் எத்தனால் அல்லது பெட்ரோலை வாங்கிக் கொள்ளலாம். இதற்கான பணிகள் நடக்கி்றது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு உள்ள மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு சட்டத்துறை அதிகாரியை மூன்று மாதத்துக்குள் நியமனம் செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், மின் கட்டண உயர்வு நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த தனி நீதிபதி அமர்வு, ‘தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறையை சேர்ந்தவர் … Read more

திருப்பதியில் சந்திரபாபு நாயுடுவை விமர்சித்து பேட்டியளித்த அமைச்சர் ரோஜா

திருப்பதி எழுமலையான் கோவிலில் அரசியல் சார்ந்த பேட்டிகள் அளிக்க கூடாது என தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ள நிலையில்,  ஆந்திர அமைச்சர் ரோஜா, முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை விமார்சித்து கோவிலில்  பேட்டியளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Source link

நளினி, ரவிச்சந்திரன் விடுதலை விவகாரம் ஒன்றிய அரசு தலையிட முகாந்திரம் கிடையாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

புதுடெல்லி: நளினி, ரவிச்சந்திரன் விடுதலை விவகாரத்தில் ஒன்றிய அரசு தலையிட முகாந்திரம் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டுள்ளது. நன்னடத்தையை அடிப்படையாக கொண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவித்தது போன்று எங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசும், ஒன்றிய அரசும் பதிலளிக்க கடந்த மாதம் 26ம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, தமிழக அரசு நேற்று முன்தினம் … Read more

நக்சல்களுடன் தொடர்பு பேராசிரியர் சாய்பாபா உட்பட 6 பேர் விடுதலை

நாக்பூர்: நக்சலைட்களுடன் தொடர்பு வைத்திருந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட  முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா உட்பட 6 பேரை மும்பை  உயர் நீதிமன்ற கிளை விடுதலை செய்துள்ளது. மகாராஷ்டிராவில் நக்சல்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக டெல்லி பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் ஜி.என் சாய்பாபா  உள்பட 6 பேர் மீது, உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த  வழக்கை  2017ம்  ஆண்டு விசாரித்த கட்சிரோலி மாவட்ட நீதிமன்றம், 6 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. இதை … Read more

அமேசான் பே.. சிக்னல் வீக்கா… ஆட்டைய போட ஆக்டிங்.. இளைஞருக்கு தர்ம அடி..!

செல்போன் கடை ஒன்றில் அமேசான் பே மூலம் 18 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பியதாக கூறி போட்டோஷாப் புகைப்படத்தை காண்பித்து மோசடியாக செல்போனை வாங்கிச்செல்ல முயன்ற தமிழக இளைஞர் புதுச்சேரியில் கையும் களவுமாக சிக்கினார். ஒரு நாள் முழுக்க கடையில் காத்திருக்க வைத்து, சிறப்பாக கவனித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள ராணி மொபைல்ஸ் கடைக்கு சென்ற இளைஞர் ஒருவர் ரெட்மி நோட் – 10 … Read more

டெல்லி, பஞ்சாப் மாநிலத்தை தொடர்ந்து குஜராத்தில் கெத்து காட்டும் கெஜ்ரிவால்: 41 வேட்பாளர்களை அறிவித்து ஜரூர் பிரசாரம், பா.ஜவின் அடி மடியில் கைவைக்கும் ஆம்ஆத்மி

24ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து இருக்கும் பா.ஜனதாவுக்கு இப்போது வர இருக்கும் தேர்தல் கொஞ்சம் தூக்கத்தை கெடுத்து விட்டது. காங்கிரஸ் மட்டும் தானே என்று அசால்ட்டாக எதிர்கொண்ட அவர்களுக்கு ஆம்ஆத்மியின் திடீர் வியூகம் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 2023 பிப்ரவரி 18ம் தேதி வரை குஜராத் சட்டசபை ஆயுட்காலம் உள்ளது. வரும் டிசம்பர் மாதம் தேர்தல் நடத்த ஆணையம் தயாரானது. ஆனால் இமாச்சலபிரதேசத்திற்கு மட்டும் தேர்தல் தேதியை அறிவித்து விட்டு குஜராத் பற்றி வாய் … Read more