திருப்பதியில் ரூ. 12 கோடியில் பயோ காஸ் ஆலை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் திருமலையில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை கொண்டு பயோ காஸ் தயாரிக்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்(ஐஓசிஎல்) நிறுவனத்துடன்  திருமலை திருப்பதி தேவஸ்தானம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. தூய்மை திருமலையின் ஒரு பகுதியாக திருமலையில் 2 ஏக்கர் பரப்பளவில் தேவஸ்தானம் சார்பில் ரூ. 6 கோடி மற்றும் ஐஓசிஐஎல் சார்பில் ரூ. 6 கோடி முதலீட்டில் மொத்தம் ரூ. 12 கோடியில் பயோ காஸ் ஆலை அமைக்கப்படும்.  இதற்காக தினமும் 35 … Read more

கடற்படைக்கு சொந்தமான மிக்29 போர் விமானம் கடலில் விழுந்து விபத்து: விமானி மீட்பு

புதுடெல்லி: கோவாவில் கடற்படைக்கு சொந்தமான மிக்29கே போர் விமானம் நேற்று பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானி பாதுகாப்பாக மீட்கப்பட்டார். கடற்படைக்கு சொந்தமான மிக்29கே போர் விமானம் கோவா கடற்கரை பகுதியில் நேற்று காலை வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. விமான தளத்துக்கு விமானம் திரும்பிக்கொண்டு இருந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானி துரிதமாக செயல்பட்டு விமானத்தில் இருந்து வெளியேறியதால் … Read more

2024 தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார்? – மல்லிகார்ஜூன கார்கே பதில்

டெல்லி: 2024ல் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்த கேள்விக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பதில் கொடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறுகிறது. அக்டோபர் 19-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜூன கார்கேவும், திருவனந்தபுரம் எம்.பி.யும், கட்சியின் மூத்த தலைவருமான சசி தரூரும் மனுதாக்கல் செய்துள்ளனர். இவர்களது வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. தொடர்ந்து ஒவ்வொரு மாநிலமாக இருவரும் … Read more

காங். எம்எல்ஏ மீது ஆசிரியை குற்றச்சாட்டு பலாத்கார புகாரை வாபஸ் பெற ரூ. 30 லட்சம் பேரம்

திருவனந்தபுரம்: காங்கிரஸ் எம்எல்ஏ பலாத்கார புகாரை வாபஸ் பெறுவதற்காக ரூ. 30 லட்சம் பேரம் பேசினார்  என்று பாதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியை தெரிவித்து உள்ளார். கேரள மாநிலம் பெரும்பாவூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர்  எல்தோஸ். இவர் மீது திருவனந்தபுரம் பேட்டை பகுதியை சேர்ந்த ஒரு  பள்ளி ஆசிரியை கோவளம் போலீசில் பலாத்கார புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து எம்எல்ஏ எல்தோஸ் மீது ஜாமீனில் வெளிவர முடியாத  பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், புகார்  கொடுத்த ஆசிரியை … Read more

அக்டோபர் 25ம் தேதி சூரிய கிரகணம்..

அக்டோபர் 25ம் தேதி நடைபெறும் சூரிய கிரகணம் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தெரியும் என வானவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 2022ம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணத்தை நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நன்றாக காண முடியும் என கூறப்படுகிறது. சூரிய அஸ்தமனத்தின்போது ஏற்படும் கிரகணம் என்பதால் வடகிழக்கு மாநிலங்களில் குறுகிய நேரம் மட்டுமே காண இயலும் என வானியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.  Source link

போலி இருமல் மருந்து சர்ச்சை குற்றச்சாட்டை ஆராய ஒன்றிய நிபுணர் குழு

புதுடெல்லி: இந்திய இருமல் மருந்து குறித்து உலக சுகாதார அமைப்பு அளித்த அறிக்கையை ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட நிபுணர் குழுவை ஒன்றிய அரசு நியமித்துள்ளது. ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து குடித்த 66 குழந்தைகள் உயிரிழந்தன. மெய்டன் பார்மாசுட்டிகல்ஸ் தயாரித்தது உள்பட 4 இந்திய இருமல் மருந்துகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு கூறியது. இதையடுத்து, இவற்றை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதாக அது தெரிவித்தது. அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட … Read more

பிரபலங்கள் அதிர்ச்சி பேஸ்புக்கில் கோளாறு பாலோயர்கள் மாயம்: நிறுவனர் ஸூகர்பெர்க்கும் பாதிப்பு

புதுடெல்லி: பேஸ்புக்கில் பிரபலங்களின் கணக்கில் அவர்களை பின்தொடரும் பாலோயர்கள் எண்ணிக்கை திடீரென வெகுவாக குறைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கோளாறை சரி செய்வதாக பேஸ்புக் நிறுவனம் கூறி உள்ளது.அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமாக மெட்டாவின் சமூக வலைதளமான பேஸ்புக்கை உலகெங்கிலும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதில், பலதரப்பு பிரபலங்களை ஏராளமானோர் பாலோயர்களாக பின்தொடர்கின்றனர். இந்நிலையில், பல பிரபலங்களின் கணக்கில் அவர்களை பின்தொடருவோரின் எண்ணிக்கை திடீரென குறைந்துள்ளது. பல பின்தொடர்பவர்கள் மாயமாகி இருப்பதாக புகார் எழுந்துள்ளன. குறிப்பாக, மெட்டா … Read more

இந்துக்களை புண்படுத்துவதா? பிரபாசுக்கு நோட்டீஸ்

ஐதராபாத்: இந்துக்களை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, நடிகர் பிரபாஸ் மற்றும் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பிரபாஸ் நடித்துள்ள படம் ஆதி புருஷ். இந்த படம் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் ஜனவரி 12ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படம் ராமாயணத்தை தழுவி உருவாகியுள்ளது. ராமர் வேடத்தில் பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலிகான் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் கிராபிக்ஸ் பணிகள் மிகவும் மட்டமாக … Read more

இந்திய கடற்படைக்கு சொந்தமான மிக் 29 கே விமானம் கடலில் விழுந்து விபத்து – விமானி பாதுகாப்பாக உயிருடன் மீட்பு..!

கோவாவில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான மிக் 29 கே விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானி பாதுகாப்பாக விமானத்திலிருந்து வெளியேறினார். விரைவான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையால் விமானி பத்திரமாக மீட்கப்பட்டார். விபத்து குறித்து விசாரிப்பதற்காக குழு அமைத்து உத்திரவிடப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டிலிருந்து மிக் 29 கே ரக விமானத்தின் 4 வது விபத்து இதுவாகும்.  Source link

கேரளாவில் 2 பெண்கள் நரபலி உடலை 56 துண்டுகளாக வெட்டி மனித மாமிசத்தை தின்ற கொடூரம்: விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம்

திருவனந்தபுரம்: கேரளாவில்  நரபலி கொடுக்கப்பட்ட பெண்ணின் உடலை 56 துண்டுகளாக வெட்டி, வீடு முழுவதும் ரத்தத்தை தெளித்து விடிய விடிய பூஜை செய்து  நர மாமிசத்தை சமைத்து சாப்பிட்டதாக விசாரணையில் கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். கொச்சியில் லாட்டரி வியாபாரம் செய்து வந்த தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பத்மா (51), எர்ணாகுளம் காலடி பகுதியை சேர்ந்த ஆயுர்வேத மருந்து விற்பனை செய்து வந்த ரோஸ்லி (50) ஆகியோர் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மந்திரவாதி … Read more