வருமானத்துக்கு அதிகமாக சொத்துகுவிப்பு வழக்கு: ஆ.ராசா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தொலைத்தொடர்பு துறையின் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உட்பட 16 பேர் மீது கடந்த 2015 ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது. இதையடுத்து டெல்லியில் 20 இடங்களிலும், தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, பெரம்பலூர் ஆகிய இடங்களிலும் அப்போது ஒரே நேரத்தில் சிபிஐ சோதனை நடத்தியது. … Read more

கேரளாவின் அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் முக்தி அடைந்தது ஆன்மிக சைவ முதலை

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள அனந்தபுரா பகுதியில் அனந்த பத்மநாப சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் தெப்பக்குளத்தில் கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக பபியா என்ற முதலை வசித்தது. இந்த முதலை அவ்வப்போது கோயிலுக்கு வந்து மூலவரை தரிசித்துச் செல்லும். தெப்பக் குளத்துக்கு வரும் பக்தர்களுக்கு பபியா எவ்வித தொந்தரவும் செய்தது கிடையாது. அசைவத்தை முற்றாகத் தவிர்த்து கோயில் பிரசாதம் மட்டுமே உண்டு வாழ்ந்து வந்த இந்த முதலை வயோதிகத்தால் நேற்று முன் தினம் இரவு உயிரிழந்தது. … Read more

காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுகொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது. தங்க்பவா என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கு இடையே நேற்று காலை வரை துப்பாக்கிச்சண்டை நீடித்தது. இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். … Read more

வாட்ச்-க்கு பதில் மாட்டு சாணத்தை அனுப்பிய ஃப்ளிப்கார்ட்: Open Box delivery பற்றி தெரியுமா?

இ-காமர்ஸ் தளங்களின் பண்டிகை கால சலுகைகளால் பயனடைந்தவர்களை காட்டிலும் நொந்துப்போனவர்களே ஏராளமானோர் இருப்பார்கள் என்பது தொடர்ந்து நிலவும் குளறுபடிகள் மூலம் அறிந்துக்கொள்ள முடியும். ஆர்டர் செய்த பொருட்களுக்கு பதில் வேறு பொருட்களையோ அல்லது தரமற்ற பொருட்களையோ, சம்பந்தமே இல்லாத பொருட்களையோ டெலிவரி செய்து வருவதாக பிரபல இ-காமர்ஸ் தளமான ஃப்ளிப்கார்ட் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆர்டர் செய்த கைக்கடிகாரத்திற்கு பதிலாக மாட்டு சாணத்தை அனுப்பி … Read more

பெண்கள் சுதந்திரமாக நடமாட 4 நாட்கள் இரவு திருவிழா – கேரளாவில் புதுமை முயற்சி

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் இரவு நேரத்தில் பெண்கள் சுதந்திரமாக வெளியில் வரும் வகையில் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவும் தைரியத்தை ஏற்படுத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னோட்டமாக மூவாற்றுப்புழாவில் 4 நாட்கள் இரவு திருவிழா நடத்தப்பட்டது. “நள்ளிரவில் பெண்கள் நகை அணிந்து தனியாக சுதந்திரமாக பாதுகாப்பாக செல்கின்றனரோ அன்றுதான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்” என்று தேசத் தந்தை மகாத்மா காந்தி கூறினார். காந்தியின் கனவை நனவாக்க கேரளாவில் புதுமையான முயற்சி தொடங்கப்பட்டிருக்கிறது. கேரளாவின் மூவாற்றுப்புழா தொகுதி … Read more

போலீசாரின் அபராதத்திற்கு பயந்து ஹெல்மெட் போட்டு தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்யும் இளைஞர்..!

போலீசாரின் அபராதத்திற்கு பயந்து தள்ளுவண்டியில் காய்கறிகள் விற்கும் நபர் ஒருவர் தலையில் ஹெல்மெட் அணிந்து செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த காய்கறி விற்கும் இளைஞர் தலையில் ஹெல்மெட் அணிந்த படி சாலையில் சென்றதை பார்த்த போலீசார் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டார். அப்போது வண்டியில் ஹெல்மெட் போடாமல் சென்றால் போலீஸ் அபராதம் விதிக்கும் என்ற அச்சம் காரணமாக ஹெல்மெட் போட்டு செல்வதாக அப்பாவியாக தெரிவித்தார். Source link

உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா செல்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 6 நாள் அரசு முறை பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார். இந்த பயணத்தின் போது சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்திர கூட்டம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கவுள்ளார். மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா மற்றும் உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் ஆகியோரை இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனித்தனியே சந்தித்து பேசுகிறார். அதேபோல, அமெரிக்க நிதி … Read more

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் – அமலாக்கத் துறை மேல்முறையீடு

புதுடெல்லி: மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர்அனில் தேஷ்முக் ஜாமீனை ரத்து செய்ய கோரி அமலாக்கத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அனில் தேஷ்முக் மகாராஷ்டிர அமைச்சராக பதவி வகித்தார். அப்போது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் ஊழல் செய்ததாகவும் புகார் எழுந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்த அமலாக்கத் துறை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அனில் தேஷ்முக்கை கடந்த ஆண்டு நவம்பர் 2-ம் தேதி கைது செய்தது. … Read more

பொருளாதார ரீதியாக சிறுபான்மையினரை புறக்கணிக்க வேண்டும்: பாஜ எம்பி சர்ச்சை

புதுடெல்லி: கிழக்கு டெல்லியை சேர்ந்த மணிஷ் என்பவர் கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலை சம்பவத்தை கண்டித்து டெல்லியில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் கண்டன கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய டெல்லி பாஜ எம்பி பர்வேஷ் வர்மா, ‘‘குறிப்பிட்ட சமூகத்தினரை நீங்கள் புறக்கணிக்க வேண்டும். குறிப்பாக பொருளாதார ரீதியாக புறக்கணிக்க வேண்டும். அவர்களிடம் யாரும் காய்கறி வாங்க … Read more

காதல் என்ற பெயரில் உறவில் இருந்ததால் பாலியல் வன்கொடுமை ஆகாது

ஆண் திருமணமானவர் என தெரிந்தும் அவருடன், பெண் பாலியல் உறவு கொண்டால், அது பாலியல் வன்கொடுமை ஆகாது என்று கேரள ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடன் இசைக்குழுவில் பணியாற்றிய ஒருவர், திருமணம் செய்து கொள்வதாக கூறி 10 ஆண்டுகளாக பாலியல் உறவில் இருந்ததாகவும், தற்போது அவர் திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும் புகாரளித்தார். அதனடிப்படையில் அந்த நபர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து அந்த நபர் கேரள … Read more