பள்ளிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: பள்ளிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த புருஷேத்தமன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘இந்திய பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் இருந்தாலும் கூட, போதிய பாதுகாப்பின்மை நிலவுகிறது. மாணவ, மாணவியருக்கு பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளன. எனவே அரசுப்பள்ளிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார். இம்மனுவானது இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான … Read more

திருமலையில் தங்குவதற்கு திருப்பதியிலேயே அறைகள் முன்பதிவு

திருமலை: திருமலையில் உள்ள அன்ன மைய்யா பவனில் தொலைபேசி மூலம் பக்தர்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, பக்தர்களிடம் நிறை, குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமலைக்கு சுவாமி தரிசனத் துக்கு வரும் பக்தர்கள், இங்கு வந்த பின்னர் தங்கும் அறைகள் கிடைக்காமல் அவதிப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இதற்கு தீர்வு காணும் வகையில் இனி திருப்பதியிலேயே பக்தர்களுக்கு தங்கும் அறைகளுக்கான முன் பதிவு … Read more

'பசு தேசிய விலங்கா… வேற வேல இல்லையா எங்களுக்கு' – உச்ச நீதிமன்றத்தை கோபத்தில் ஆழ்த்திய பொதுநல வழக்கு

பசுவை தேசிய விலங்குகாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. பசு பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம் என்றும், பசு பாதுகாப்பில் அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் அமந்த மனுவில் குறிப்பிடுப்பட்டிருந்தது.  இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்கே கௌல், அபாய் எஸ் ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள மறுத்தனர். மேலும், நீதிமன்றம் மனுதாரரிடம்,”இதுதான் நீதிமன்றத்தின் வேலையா?, இதுபோன்ற வழக்குகளை தொடர்ந்து ஏன் … Read more

இந்தியாவில் சமூக நீதி தூணாக இருந்தவர்; பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் முலாயம் சிங் யாதவ்: மன்மோகன்சிங், ராகுல்காந்தி உள்ளிட்டோர் இரங்கல்..!!

டெல்லி: சமாஜ்வாதி  கட்சியின் நிறுவனரும் உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சருமான முலாயம் சிங் யாதவ், உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 82. யாதவ் ஆகஸ்ட் மாதம் முதல் குருகிராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது உடல் அவருடைய சொந்த ஊரான உ.பி. மாநிலம் சைஃபாய் கிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. முலாயம் சிங் யாதவின் இறுதிச்சடங்கு நாளை மறுநாள் அவரது சொந்த ஊரான சைஃபாய் கிராமத்தில் நடைபெறும் என்று … Read more

உத்தராகண்ட் பனிச்சரிவில் சிக்கியவர்களில் இதுவரை 27 பேரின் உடல்கள் மீட்பு

உத்தரகாசி: உத்தராகண்ட் பனிச்சரிவில் சிக்கியவர்களில் இதுவரை 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி நகரில் இயங்கும் நேரு மலையேற்ற கல்லூரியைச் சேர்ந்த 27 பயிற்சி வீரர்கள் மற்றும் 2 பயிற்சியாளர்கள் என மொத்தம் 29 பேர் கடந்த மாத இறுதியில் திரவுபதி கா தண்டா-2 மலை சிகரத்தில் ஏறினர். சிகரத்தின் உச்சியை அடைந்த அவர்கள் கடந்த 4-ம் தேதி கீழே இறங்கத் தொடங்கினர். சுமார் 17 ஆயிரம் அடி உயரத்தில் வந்து கொண்டிருந்தபோது அங்கு … Read more

டெல்லியில் கனமழை காரணமாக குறைந்த காற்றின் மாசு

கனமழை காரணமாக டெல்லியில் மாசு குறைந்து, காற்றின் தரத்தை மேம்படுத்தியுள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, ஏற்கனவே 55, 56 ஆக இருந்த குறியீட்டெண் நேற்று மாலை 48 ஆக குறைந்து இருந்தது. டெல்லியை அடுத்துள்ள காசியாபாத், குருகிராம், கிரேட்டர் நொய்டா ஆகிய நகரங்களும் தூய்மையான காற்றின் தரத்தை பதிவு செய்துள்ளன. டெல்லியில் 24 மணி நேரத்தில் 74 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு அக்டோபர் மாதத்தில் பெய்த இரண்டாவது அதிக … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தங்க கருட வாகனத்தில் வலம் வந்த மலையப்பர்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருமலை: புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்றிரவு 7 மணி முதல் 9 மணி வரை தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி, வாகன மண்டபத்தில் இருந்து நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, நான்கு மாடவீதியில் இருபுறமும் காத்திருந்த பக்தர்கள்  ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி முழக்கத்துடன் மனமுருக … Read more

லிப்ட் கேட்ட கல்லூரி மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்புரின் ஜெய்சிங்பூர் பகுதியில் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 23 வயதான மாணவி ஒருவர் பிடெக் பயின்று வருகிறார். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (அக். 7) அன்று மாலை கல்லூரி வகுப்புகளை முடித்து கொண்டு அவர் வீடு திரும்ப தாமதமாகிவிட்டது. இதனால், சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு காரில் லிப்ட் கேட்டுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற ஒரு கார் அவரை ஏற்றிச் செல்வதற்காக நின்றது. அதன்பின் அந்த மாணவி … Read more

25 வயது பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து கூட்டு பலாத்காரம்!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது பெண்ணுக்கு திருமணமாகி கணவர் மற்றும் ஒரு குழந்தை உள்ளது. இதனிடையே, அந்த குடும்பத்திற்கு சஞ்சய் சர்மா என்பவர் மாந்திரவாதி கூறி அறிமுகமாகி உள்ளார். சஞ்சய் அந்த குடும்பத்திற்கு சில மாந்திரிக நடவடிக்கைகளையும் செய்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பெண் தனியாக இருந்த போது, வீட்டிற்கு வந்த சஞ்சய் தனியாக இருந்த பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த செயலை வீடியோ எடுத்த சஞ்சய் … Read more

அந்த நிகழ்ச்சி பற்றி அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு தெரியாது – ராஜினாமா செய்த டெல்லி அமைச்சர் விளக்கம்

புதுடெல்லி: “என்னை ராஜினாமா செய்யச் சொல்லி யாரும் கட்டாயப்படுத்தவில்லை. அந்த கூட்டம் பற்றி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு தெரியாது” என்று ராஜினாமா செய்துள்ள அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் தெரிவித்துள்ளார். டெல்லி சமூக நலத் துறை ராஜேந்திர பால் கவுதம், கடந்த 5-ம் தேதி டெல்லியி நடைபெற்ற அசோக விஜயதசமி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கானோர் இந்து மதத்திலிருந்து புத்த மதத்துக்கு மாறினர். அவர்கள் ‘‘இந்து கடவுள்கள் மீது நம்பிக்கை இல்லை. அவர்களை … Read more