மூத்த பாஜக தொண்டர்களுக்கு பாத பூஜை செய்த அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா!

அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா, மூத்த பாஜக தொண்டர்களுக்கு பாத பூஜை செய்தார். கவுகாத்தியில் பாஜக மாநில அலுவலகத்தின் புதிய கட்டடத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆகியோர் திறந்து வைத்தனர். விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா, பாஜக மூத்த தொண்டர்களின் பாதத்தை சுத்தம் செய்து, மரியாதை செய்தார். 1990ம் ஆண்டுக்கு முன்பு, பாஜகவில் சேர்ந்த மூத்த தொண்டர்கள் 75 பேருக்கு, அவர் பாத … Read more

நடுவழியில் சக்கரத்தில் கோளாறு; வந்தே பாரத் ரயிலுக்கு 3வது நாளாக வேதனை: மின்சாரத்தை துண்டித்து நிறுத்தம்

புதுடெல்லி: எருமைகள், பசு மாடு மோதியதால் தொடர்ந்து 2 நாட்களாக சேதமடைந்த நிலையில், நேற்று சக்கரங்களில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் வந்தே பாரத் ரயில் பயணிகள் வேறு ரயிலுக்கு மாற்றப்பட்டனர். குஜராத்தில் கடந்த வியாழன்று காலை வந்தே பாரத் ரயில் பாட்வா-மணிநகர் இடையே வந்து கொண்டிருந்தபோது திடீரென எருமைகள் தண்டவாளத்தில் கூட்டமாக புகுந்தன. இதனால், அவற்றின் மீது ரயில் மோதியதில் முன்பகுதி சேதம் அடைந்தது. இந்த முகப்பு பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்டது என்பதால், அடுத்த 24 மணி நேரத்தில் … Read more

திருமலையில் சனிக்கிழமை 6 கி.மீ. வரை காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருமலை: புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கு உகந்த மாதமாகும் என்பதால் நாடு முழுவதிலும் உள்ள பக்தர்கள், அதிலும் குறிப்பாக தமிழக பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் திருமலைக்கு படை எடுத்தனர். இதில், 2-வது சனிக்கிழமையன்று பிரம்மோற்சவ விழாவின் கருட சேவை நடை பெற்றது. இதில் சுமார் 3.5 லட்சம் பக்தர்கள் திருமலையில் குவிந்து கருட சேவையை கண்டுகளித்தனர். இதில் 87 ஆயிரம் பக்தர்கள் மூலவரை தரிசித்தனர். இந்நிலையில், பிரம்மோற்சவம் கடந்த 5-ம் தேதி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது 3-வது சனிக்கிழமையில் மீண்டும் … Read more

உத்தரகாண்ட் சாமோலி மாவட்டத்தில் பனியால் மூடப்பட்ட சீக்கியர்களின் ஹேம்குண் சாஹிப் கோயில்..!

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் பெய்த கடும் பனிப்பொழிவால் சீக்கியர்களின் முக்கிய வழிபாட்டுத் தலமான ஹேம்குண் சாஹிப் கோயில் பனியால் மூடப்பட்டுள்ளது. பனிப்பொழிவால் கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைப்பகுதி வெண்போர்வையால் போர்த்தப்பட்டுள்ளது போல் காட்சியளிக்கிறது. Source link

குஜராத்தில் ரூ350 கோடி ஹெராயின் பறிமுதல்

அகமதாபாத்: குஜராத் கடற்பகுதியில் கடலோர காவல்படையினரும், தீவிரவாத தடுப்பு படையினரும் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பார்த்ததும், படகை வேகமாக ஓட்டினர். போலீசார் விரட்டி சென்று படகை மடக்கி பிடித்து, சோதனையிட்டதில் 5 மூட்டைகளில் 50 கிலோ ஹெராயின் இருந்தது. விசாரணையில், இந்த படகு பாகிஸ்தானை சேர்ந்தது என தெரிய வந்தது. கைப்பற்றப்பட்ட ஹெராயினின் சர்வதேச மதிப்பு ரூ.350 கோடி. படகில் இருந்த 6 பேரும் கைது செய்யப்பட்டு ஜகாவ் துறைமுகத்துக்கு … Read more

பிரபல கட்சியின் சின்னம் முடக்கம்… தேர்தல் ஆணையம் அதிரடி!!

சிவசேனா கட்சியின் சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட கிளர்ச்சியின் காரணமாக இரண்டு அணிகளாக பிரிந்தது. பொதுவெளியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி சிவசேனா என அறியப்பட்டாலும், சட்டமன்றத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் தலைமையிலான அணியே சிவசேனா என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கடந்த மாதம் கவிழ்ந்தது. சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் … Read more

லாரி மீது பேருந்து மோதி தீ பிடித்ததில் 12 பேர் உயிரிழப்பு; 30 பேர் காயம் – பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

நாசிக்: மகாராஷ்டிர மாநிலத்தில் நாசிக், அவுரங்காபாத் நெடுஞ்சாலையில் நேற்று காலை 5.15 மணியளவில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து டீசல் டேங்க் லாரி மீது மோதியது. அப்போது தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ மளமளவென வேகமாக பரவியதில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து சில பயணிகள் ஜன்னல் வழியாக அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாரும் தீயணைப்புப் படையினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 30 … Read more

குழந்தை திருமணம்: இந்தியாவின் மோசமான மாநிலங்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் தலைமை பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் இணைந்து மக்கள்தொகை மாதிரி கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. கருவுறுதல், குழந்தை பிறப்பு, குழந்தை இறப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அடிப்படையாக வைத்து சுமார் 80 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களிடம் கணக்கெடுக்கப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு 2020ஆம் ஆண்டு எடுக்கப்பட்டு, கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஜார்க்கண்ட் மாநிலத்தில், சிறுமிகள் திருமண வயதை எட்டுவதற்கு முன்பே திருமணம் செய்யும் சராசரி 5.8 சதவீதமாக … Read more

இந்திய விமானப்படையில் புதிய படைப்பிரிவுக்கு ஒப்புதல்.. புதிய உடை அறிமுகம்

இந்திய விமானப்படையில் டிரோன்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களை கையாள முதல்முறையாக தனிப்பிரிவு ஏற்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல் விமானப்படை வீரர்களுக்கு புதிய உடையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கிலேய காலனியாதிக்கத்தின்போது, பிரிட்டனின் ராயல் ஏர்போர்ஸ் விமானப்படைக்கு உறுதுணையாக, கடந்த 1932ம் ஆண்டு இந்திய விமானப்படை உருவாக்கப்பட்டது. இந்த தினம், இந்திய விமானப்படை தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 90ம் ஆண்டு விமானப்படை கொண்டாட்ட நிகழ்ச்சியையொட்டி சண்டிகரில் நடைபெற்ற விமானப்படை வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பில் பங்கேற்று, விமானப்படை … Read more

தடையை மீறி இயக்கினால் வாகனங்கள் பறிமுதல்: ஓலா, உபருக்கு எச்சரிக்கை

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஓலா, உபர் உள்ளிட்ட வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டும் அதை மீறி இயங்கி வரும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்  என்று அதிகாரிகளுக்கு ேபாக்குவரத்து அமைச்சர் பி.ஸ்ரீராமுலு  உத்தரவிட்டார். இது குறித்து பெங்களூரு விதானசவுதாவில்  செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘மாநிலத்தில் இயங்கிவரும் ஓலா, உபர் உள்ளிட்ட வாடகை வாகனங்கள் பொதுமக்களிடம் அதிகம் கட்டணம் வசூலித்து  வஞ்சித்து வருவதாக அரசின் கவனத்திற்கு வந்தது. பயணிகளிடம் எவ்வளவு கட்டணம்  வசூலிக்க வேண்டும் என்று அரசு கட்டண … Read more