சபரிமலையில் மண்டல பூஜை தரிசனம்: ஆன்லைனில் முன்பதிவு

திருவனந்தபுரம்: சபரிமலையில் இவ்வருட மண்டல பூஜை கால தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கியது. கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளதால் தினமும் எத்தனை பக்தர்கள் வேண்டுமானாலும் தரிசனம் செய்யலாம். இதற்கிடையே ஐப்பசி மாத பூஜைகளுக்காக வரும் 17ம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது. 22ம் தேதி வரை நடை திறந்திருக்கும். இதற்கான ஆன்லைன் முன்பதிவும் தொடங்கியுள்ளது. ஐப்பசி மாத பூஜைகள் நிறைவடைந்த பின்னர் சித்திரை ஆட்டத் திருநாளுக்காக வரும் 24ம் தேதி மாலை கோயில் நடை … Read more

பல உயிர்களை காப்பாற்றிய மும்பையின் ஹீரோ விபத்தில் பலி; சுங்க ஊழியருக்கு நேர்ந்த சோகம்!

மும்பையின் பாந்த்ரா – ஒர்லி சீ லிங்க் மேம்பால பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கார் வெடித்து விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற வேண்டுமென கடல்வழி மேம்பால சுங்கச்சாவடி ஊழியர்களும், ஆம்புலன்ஸும் விரைந்தது. இதையடுத்து விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிக் கொண்டிருந்த போது அவ்வழியே தாறுமாறாக வந்த கார் ஒன்று ஆம்புலன்ஸ் மற்றும் அங்கிருந்த கார்கள் மீது மோதியதால் மீண்டும் பெரும் விபத்து நேர்ந்தது. இதில், ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர், சுங்கச்சாவடி ஊழியர்கள் நால்வர் … Read more

27 வகை நறுமணம் வீசும் பட்டுப்புடவை – நெசவு தொழிலாளியை பாராட்டிய தெலங்கானா அமைச்சர்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், ராஜண்ணா சிரிசில்லா மாவட்டம், சாய் நகர் பகுதியை சேர்ந்த பட்டுப்புடவை நெசவு தொழிலாளி விஜய். இவர் 27 வகையான நறுமணங்கள் வீசும் புதிய ரக பட்டுப்புடவையை தயாரித்துள்ளார். இந்த பட்டுப்புடவையை தெலங்கானா அமைச்சர்கள் கே. டி.ராமாராவ், ஹரீஷ் ராவ் ஆகியோர் ஹைதராபாத்தில் நேற்று பார்வையிட்டனர். பட்டுப்புடவையை பார்த்து வியந்த அவர்கள் அதனை தயாரித்த விதம் குறித்து கேட்டறிந்தனர். இது குறித்து நெசவு தொழிலாளி விஜய் கூறியதாவது: இதற்கு அமைச்சர் கே.டி. ராமாராவ், ‘சிரி … Read more

தமிழக அரசு காட்டிய பாதை; கர்நாடகாவில் எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு 24% உயர்வு: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

பெங்களூரு: கர்நாடகாவில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினருக்கான இடஒதுக்கீடு 24 சதவீதமாக உயர்த்த முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்த  அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் வாழும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின  வகுப்பினரின் தற்போதுள்ள இட  ஒதுக்கீட்டை உயர்த்துவது தொடர்பாக ஓய்வு பெற்ற கர்நாடக உயர் நீதிமன்ற  நீதிபதி நாகமோகன்தாஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு ஆய்வு செய்து  அரசிடம் கொடுத்த அறிக்கையில், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 15 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாகவும், பழங்குடியின வகுப்பினருக்கான … Read more

நடுவழியில் நின்ற வந்தே பாரத் ரயில்!!

அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயிலில் மீண்டும் ஒரு முறை கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். டெல்லியில் இருந்து உத்தரப் பிரதேசம் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நேற்று காலை 6 மணி அளவில் புறப்பட்டது. ரயில் சுமார் 90 கிமீ பயணத்திற்குப் பின் குஜ்ரா என்ற ரயில் நிலையத்தை அடைந்த போது சக்கரத்தில் கோளாறு இருந்தது தெரியவந்தது. சக்கரங்களில் பேரிங் கோளாறு இருந்தது பணி புரியும் கேட்மேனால் கண்டுபிடிக்கப்பட்டது. அதிவேக வண்டிகளில் இந்த … Read more

பரபரப்பு! காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது தாக்குதல்!!

குஜராத் மாநிலத்தில் பழங்குடியின எம்எல்ஏ தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் வன்ஸ்டா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆனந்த்குமார், அப்பகுதியில் பழங்குடியின சமூகத்தின் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், நவ்சாரி மாவட்டம் ஹர்ஜம் என்ற பகுதியில் எம்.எல்.ஏ. ஆனந்த்குமார் நேற்று இரவு தனது காரில் சென்றார். அப்போது, காரை மறித்த மர்ம கும்பல் அவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு சென்றது. கும்பல் நடத்திய தாக்குதலில் ஆனந்த்குமார் முகத்தில் ரத்தக்காயம் ஏற்பட்டது. மேலும், அவர் பயணித்த கார் … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருமுனை போட்டி உறுதி

புதுடெல்லி/பெங்களூரு: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறுகிறது. அக்டோபர் 19-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜூன கார்கேவும், திருவனந்தபுரம் எம்.பி.யும், கட்சியின் மூத்த தலைவருமான சசி தரூரும் மனுதாக்கல் செய்துள்ளனர். இவர்களது வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. கட்சித் தலைவர் தேர்தலில் வேட்பு மனுவை வாபஸ் பெற நேற்று (அக்டோபர் 8) கடைசி நாளாகும். நேற்று வரை இருவரின் வேட்புமனுவும் வாபஸ் பெறப்பட வில்லை. … Read more

திப்பு விரைவு ரயிலின் பெயர், உடையார் விரைவு ரயில் என மாற்றம்..!

பெங்களூரு – மைசூரு இடையே இயக்கப்படும் திப்பு விரைவு ரயிலின் பெயர், ‘உடையார் விரைவு ரயில்’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1980ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் அந்த ரயிலின் பெயரை மாற்றம் செய்யக்கோரி மைசூரு எம்.பி. பிரதாப் சிம்ஹா உள்ளிட்ட பா.ஜ.க.வினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், அந்த ரயிலிற்கு மைசூரு அரச குடும்பத்தின் பெயரை சூட்டி ரயில்வே அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது.  Source link

ஆந்திராவில் 3 தலைநகர் கோரிக்கை: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா

திருமலை: ஆந்திராவில் 3 தலைநகர் அமைக்க வலியுறுத்தி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆந்திராவில் 3 தலைநகர் அமைக்க முதல்வர் ஜெகன் மோகன் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், முக்கிய எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவுக்கு அமராவதியை மட்டுமே தலைநகரமாக்க வேண்டும் என கூறி வருகிறது. இந்நிலையில், வட ஆந்திராவை சேர்ந்த கூட்டு நடவடிக்கை குழுவினர், விசாகப்பட்டினத்தில் நேற்று கூட்டம் நடத்தினர். இதில், ‘3 … Read more

பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் மதுவிலக்கு கோரி உமா பாரதி போராட்டம்

புதுடெல்லி: பாஜக மூத்த தலைவர் உமா பாரதி ம.பி.யை சேர்ந்தவர். துறவியான இவர் தனது இளம் வயதிலேயே பாஜகவில் இணைந்தார். இவரிடம் போபாலின் பாக் செவனியா பகுதி மக்கள் அங்குள்ள, அரசு அனுமதிபெற்ற ஒரு மதுக்கடை மீது அவ்வப்போது புகார் கூறி வந்தனர். இதனால் கடும் கோபம் கொண்ட உமா பாரதி அக்கடையின் மீது கற்களை வீசி மது பாட்டில்களை உடைத்தார். ம.பி.யில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் எனக் குரல் கொடுக்கத் தொடங்கினார். இவரை சமாளிக்க முதல்வர் … Read more