திருப்பதியில் அலைமோதும் கூட்டம்: பக்தர்களுக்கு தேவஸ்தானம் வேண்டுகோள்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதாலும், புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கு உகந்த மாதம் என்பதாலும், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அந்த வகையில், புரட்டாசி மாதத்தின் 3ஆவது சனிக்கிழமையான இன்று திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க லட்ச கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர். வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 32 அறைகளும் நிரம்பிய நிலையில் நாராயண தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வரிசைகளும் நிரம்பியதால் தற்பொழுது பாபவிநாசம் சாலையில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். … Read more