ஆந்திரா, தெலங்கானாவில் என்ஐஏ நடத்திய சோதனைக்கு பிஎஃப்ஐ அமைப்பு கண்டனம்

புதுடெல்லி: ஆந்திரா, தெலங்கானாவில் என்ஐஏ நடத்திய சோதனைக்கு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பிஎஃப்ஐ தேசிய செயலாளர் நஸ்ருத்தீன் இளமரம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூலையில் தற்காப்பு கலை ஆசிரியர் அப்துல் காதரை தெலங்கானா போலீஸார் கைது செய்தனர். அவரோடு 2 அப்பாவி முஸ்லிம்களையும் பொய் வழக்கில் சிக்க வைத்தனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் தூண்டுதலின்பேரில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. ஆந்திரா, தெலங்கானாவை சேர்ந்த … Read more

வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தவரிடம் கத்தி முனையில் செல்போன் மற்றும் பணம் பறித்து சென்ற இளைஞர்.!

புதுச்சேரியில் வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தவரிடம் கத்தி முனையில் செல்போன் மற்றும் பணம் பறித்து சென்ற இளைஞரை சிசிடிவி உதவியால் போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி கோவிந்த சாலையை சேர்ந்த தியாகராஜன் என்பவர் திருபுவனையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணி புரிந்து வருகிறார். இரவு 11 மணியளவில் பணி முடிந்து தனது வீட்டிற்கு தியாகராஜன் நடந்து சென்ற போது அவரை வழிமறித்த 2 இளைஞர்கள் கத்திமுனையில் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போன் மற்றும் 2 … Read more

நான்தான் விலகி இருக்கிறேன்; அரசியல் என்னை விட்டு விலகவில்லை: நடிகர் சிரஞ்சீவி பரபரப்பு

திருமலை: ‘நான் அரசியலில் இருந்து விலகி இருக்கிறேன். ஆனால், அரசியல் என்னை விட்டு  விலகவில்லை’ என்ற நடிகர் சிரஞ்சீவி பேசிய ஆடியோ ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கு திரைப்பட மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள ஒரு ஆடியோ பதிவில், ‘நான் அரசியலில் இருந்து விலகி இருக்கிறேன். ஆனால், அரசியல் என்னை விட்டு விலகவில்லை’ என்று பேசி உள்ளார். கடந்த 2008ம் ஆண்டு பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை தொடங்கி 2009ம் ஆண்டு … Read more

ஏழுமலையானுக்கு ரூ.1.02 கோடி – சென்னை இஸ்லாமிய தம்பதி காணிக்கை

திருமலை: சென்னையைச் சேர்ந்த இஸ்லாமிய தம்பதியினரான, தொழிலதிபர் அப்துல் கனி மற்றும் சுபீனா பானு குடும்பத்தினர் திருப்பதி ஏழுமலையானை நேற்று தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள் கோயிலில் உள்ள ரங்க நாயக மண்டபத்தில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டியிடம் ரூ.1.02 கோடிக்கான காசோலையை காணிக்கையாக வழங்கினர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 27-ம் தேதி பிரம்மோற்சவ விழாவுக்கான கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இவ்விழா அக்டோபர் 5-ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெற … Read more

8 ஆண்டு பாஜ ஆட்சியில் சிபிஐ விசாரணை வளையத்தில் 118 எதிர்க்கட்சித் தலைவர்கள்: புள்ளி விவரங்கள் வெளியீடு

புதுடெல்லி: சிபிஐ உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளை பயன்படுத்தி எதிர்கட்சி தலைவர்களை சிக்கவைப்பதில் ஒன்றிய பாஜ அரசு சாதனை புரிந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் 118 எதிர்கட்சி தலைவர்கள் புலனாய்வு அமைப்பின் ரெய்டில் சிக்கியுள்ளனர். எதிர்கட்சிகளை ஒடுக்கும் விதமாக அக்கட்சியின் தலைவர்கள் மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் மீது ஒன்றிய புலனாய்வு அமைப்பு (சிபிஐ), வருமான வரித்துறை, அமலாக்க இயக்குனரகம் ஆகியவற்றை ஆளுங்கட்சி ஏவி விடுவதாக குற்றச்சாட்டுகள் கூறுவது வழக்கம். இந்த நிலையில், எந்த ஆட்சிக் காலத்தில் அதிகளவில் எதிர்கட்சிகள் … Read more

13-வது நாளாக நடைபெற்ற பாத யாத்திரை – கேரள கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நட்ட ராகுல் காந்தி

ஆலப்புழா: மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டும் நோக்கில், இந்திய ஒற்றுமை நடை பயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னின்று நடத்தி வருகிறார். தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்தப் பயணம் தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற யாத்திரையின்போது ராகுல் காந்தி, அங்குள்ள மீனவர்களைச் சந்தித்துப் பேசினார். ஆலப்புழா மாவட்டம் புன்னப்ராவில் நேற்று முன்தினம் காலை நடைபயணத்தை தொடங்கிய அவர், 16 கி.மீ. கடந்து களவூரில் நிறைவு செய்தார். … Read more

Tirumala Tirupati: நவம்பர் மாத தரிசன டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது!

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 தரிசன டிக்கெட் மாதந்தோறும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அதன்படி, நவம்பர் மாதத்திற்கான ரூ.300 தரிசனம் டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “திருப்பதி ஏழுமலையானை எளிமையான முறையில் தரிசனம் செய்ய நவம்பர் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள் இன்று (21.09.2022) காலை 9 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அதேபோல் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீபலங்கார சேவை, ஆர்ஜித சேவை உள்ளிட்ட டிக்கெட்டுகள் மாலை … Read more

வாட்ஸ் ஆப் ,வீடியோ கால்கள் மூலம் பெண்களுடன் ஆபாசமாகப் பேச வைத்து பலரை மிரட்டி பணம் பறித்த இளைஞர் கைது.!

வாட்ஸ் ஆப் ,வீடியோ கால்கள் மூலம் பெண்களுடன் ஆபாசமாகப் பேச வைத்து பலரை மிரட்டி பணம் பறித்த 20 வயது இளைஞனை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். வாட்ஸ் ஆப்பில் அறியாத நபரிடமிருந்து தமக்கு அழைப்பு வந்ததாகவும் ஒரு பெண் தம்மிடம் பேசி ஆபாசமாக நடந்து கொண்டு அதை வீடியோவாக்கி தம்மிடம் 18 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக பாதிக்கப்பட்ட ஒருவர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி ராஜஸ்தான் ஆல்வார் பகுதியைச் சேர்ந்த … Read more

உத்தரப்பிரதேசத்தில் அவலம்; கபடி வீரர்களுக்கு கழிவறையில் உணவு: விளையாட்டு அதிகாரி சஸ்பெண்ட்

சஹாரன்பூர்: உத்தரப்பிரதேசத்தில் கழிவறையில் வைத்து உணவை கபடி வீரர்கள் வழங்கிய மாவட்ட விளையாட்டு அதிகாரி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் ஸ்டேடியத்தில் மாநில அளவிலான சப்-ஜூனியர் பெண்கள் கபடி போட்டி கடந்த 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடந்தது. இந்த போட்டியில் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்காக தயாரிக்கப்பட்ட சாதம் மற்றும் பூரி ஆகியவற்றை கழிவறைக்குள் வைத்து வீரர்களுக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொரு வீரர்களும் கழிவறைக்குள் … Read more

விடைபெறுகிறது அபிநந்தனின் மிக்-21 ரக விமான படைப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தானின் எஃப்-16 விமானத்தை, சென்னையைச் சேர்ந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். அப்போது அவர் சென்ற மிக் 21 ரக போர் விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, பாராசூட் மூலம் தப்பித்த … Read more