திருமணத்திற்கு சென்றபோது சோகம்.. பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 32 பேர் பலி..!
உத்தரகாண்டில், திருமண விழாவில் பங்கேற்பதற்காக சுமார் 50 பேருடன் சென்றுகொண்டிருந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் லால்தாங் பகுதியில் இருந்து பவுரி மாவட்டத்தில் உள்ள பிரோன்கால் பகுதிக்கு நேற்று பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பிரோன்காலில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்பதற்காக 50-க்கும் மேற்பட்டவர் அதில் பயணித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், இரவு 7.30 மணியளவில் மலைப்பாங்கான பகுதியில் பேருந்து சென்றுகொண்டிருந்த போது சிம்ரி என்ற இடத்தில் உள்ள வளைவில் திரும்பும்போது … Read more