பாஜகவில் இணைந்தார் அமரிந்தர் சிங்

டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவரும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான அமரிந்தர் சிங் பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான அம்ரிந்தர் சிங், இருமுறை பஞ்சாப் முதல்வராக இருந்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பாஜகவின் அருண் ஜெட்லியை எதிர்த்துப் போட்டியிட்டு ஒரு லட்சத்து 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2015-ம் ஆண்டு பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார். அவரது தலைமையில் 2017-ம் ஆண்டு சட்டப்பேரவைத் … Read more

2022-ம் ஆண்டு இறுதிக்குள் இந்தியா முழுவதும் 5G தொழில்நுட்பம் கொண்டு வரப்படும்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

டெல்லி: 2022-ம் ஆண்டு இறுதிக்குள் இந்தியா முழுவதும் 5G தொழில்நுட்பம் கொண்டு வரப்படும் என  மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். நாடு முழுவதும் 6 லட்சம் கிராமங்களுக்கும் Optical Fibre Cable மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் இணைய வசதி வழங்கப்படும் என்று கூறினார்.

ஒருபக்கம் தேர்தல்.. மறுப்பக்கம் தீர்மானம் நிறைவேற்றம் – காங்கிரஸில் நீடிக்கும் குழப்பம்

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளநிலையில், தமிழ்நாடு, ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத், பீகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சார்பில், ராகுல்காந்தியை மீண்டும் தலைவர் ஆக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக சோனியா காந்தி இருந்து வரும் நிலையில், கட்சிக்கு முழு நேர தலைவரை தேர்வு செய்வதற்கான பணியில் காங்கிரஸ் தலைமை தீவிரம் காட்டி வருகிறது. காங்கிரஸ் … Read more

அயோத்தியில் முதல்வர் யோகிக்கு கோயில் – சிலைக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு

அயோத்தி: உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு அந்த மாநிலத்தில் கோயில் கட்டி, சிலை வைத்து, ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்த கோயிலில் அவருக்கு பஜனை கூட பாடுவது வழக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இது உலகறிந்த செய்தி. ஆனால், யோகி ஆதித்யநாத்துக்கு அதே அயோத்தியில் கோயில் கட்டப்பட்டுள்ளது. அயோத்தியில் இருந்து சரியாக 15 கிலோ … Read more

குருவாயூர் கோயில் புதிய மேல்சாந்தியாக யூடியூப் பிரபலம் நியமனம்

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் குருவாயூர் கிருஷ்ணர் கோயிலும் ஒன்று. இக்கோவிலின் புதிய மேல்சாந்தியாக கிரண் ஆனந்த் (வயது 34) சமீபத்தில் நியமிக்கப்பட்டார். கிரண் ஆனந்த் ஆயுர்வேத டாக்டர் ஆவார். இவரது மனைவி மானசி. இவர்கள் இருவரும் ரஷியாவில் தங்கி பணிபுரிந்து வந்தனர். அப்போது ஆயுர்வேதம் மற்றும் இசை தொடர்பான வீடியோக்களை யூ டியூப்பில் வெளியிட்டு வந்தனர். இவர்களின் யூ டியூப் வீடியோக்களுக்கு கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் கிரண் ஆனந்த் … Read more

ஓலா சாஃப்ட்வேர் குழுக்களில் இருந்து 500 ஊழியர்கள் டிஸ்மிஸ்..? காரணம் என்ன?

ஓலா நிறுவனம் அதன் மென்பொருள் குழுக்களில் பணிபுரிந்து வரும் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓலா (OLA) நிறுவனம் அதன் செயலி (Application) தொடர்பான மென்பொருள் குழுக்களில் பணிபுரிந்து வரும் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் வெளியான மின்சார ஸ்கூட்டரான ஓலா எஸ் 1 ப்ரோவின் விற்பனை குறைந்ததை அடுத்து இந்த பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பணி நீக்க … Read more

விஸ்வரூபமெடுக்கும் சண்டிகர் பல்கலை. வீடியோ விவகாரம் : சிறப்பு புலனாய்வுக்குழு அமைப்பு

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள தனியார் பல்கலைக்கழகமான சண்டிகர் பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி பயின்று வரும் சன்னி மேத்தா என்ற மாணவி, சக மாணவிகளை ஆட்சேபகரமாக வீடியோ எடுத்து, இமாச்சலப் பிரதேசம் சிம்லாவைச் சேர்ந்த ரன்கஜ் வர்மா என்ற நபருக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. அந்நபர் அந்த வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றியதாகக் கூறி கடந்த 17-ம் தேதி இரவு முதல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 60-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியானதாகவும், இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் தற்கொலைக்கு … Read more

மொபைல் பணப் பரிமாற்றங்களுக்கான SMS கட்டணங்கள் தள்ளுபடி: SBI அறிவிப்பு!

டெல்லி: பாரத ஸ்டேட் வங்கி(SBI) மொபைல் பணப் பரிமாற்றங்களுக்கான குறுஞ்செய்தி(SMS) கட்டணங்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. விளிம்பு நிலை மற்றும் ஏழை மக்களிடையே மொபைல் பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க இந்த அறிவிப்பை பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ளது. USSD சேவைகளை பயன்படுத்தி பயனாளிகள் கூடுதல் கட்டணங்கள் இல்லாமல் வசதியாக பணப் பரிவர்த்தனை செய்யலாம் என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாரத ஸ்டேட் வங்கி; ‘மொபைல் பணப் பரிமாற்றங்களுக்கான … Read more

சண்டிகர் பல்கலைக்கழகம்: ஆபாச வீடியோ விவகாரத்தில் விடுதி மாணவி உள்ளிட்ட 3 பேர் கைது!

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள தனியார் பல்கலைக்கழக விடுதி மாணவிகளின் வீடியோ வெளியானது தொடர்பாக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியின் தலைமையில் 3 பேர் அடங்கிய மகளிர் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தும் என்று பஞ்சாப் டி.ஜி.பி. தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் டி.ஜி.பி. கவுரவ் யாதவ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், முதல்வர் பகவந்த் மான் உத்தரவின்படி, மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி குர்ப்ரீத் தியோ தலைமையில் 3 நபர்கள் அடங்கிய அனைத்து மகளிர் சிறப்பு புலனாய்வுக்குழு, … Read more

மேற்கு வங்கம் | பார்த்தா சாட்டர்ஜி, அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான ரூ.46 கோடி சொத்துகள் முடக்கம்

கொல்கத்தா: மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவருடன் நெருங்கிய நட்பில் இருந்த நடிகை அர்பிதா முகர்ஜி ஆகியோருக்குச் சொந்தமான ரூ.46 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. மேற்கு வங்கத்தில் அரசுப் பள்ளிகளுக்கான ஆசிரியர் நியமனத்தில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரின் பேரில், அம்மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கடந்த ஜூலை 23-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது அமலாக்கத் துறையால் இரு வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.49.80 … Read more