கட்சியை வலுப்படுத்தவே தேர்தலில் போட்டி: மல்லிகார்ஜூன கார்கே திட்டவட்டம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: கட்சியின் மூத்த மற்றும் இளைய தலைமுறையைச் சேர்ந்த தலைவர்கள் வலியுறுத்தியதன் காரணமாகவே காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த தேர்தலில் யாரையும் எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் போட்டியிடவில்லை. கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்பதே என் தலையாய நோக்கம். அதற்காக மட்டுமே காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் களமிறங்கியுள்ளேன். எனக்கு பின்னால் காந்தியின் குடும்பத்தினர் ஆதரவாக … Read more

154-வது பிறந்த நாள் கொண்டாட்டம்: காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

புதுடெல்லி: மகாத்மா காந்தியின் 154-வதுபிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கு நேற்று காலை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர் மல்லிகார்ஜுன … Read more

”இந்து ராஷ்டிரமாக மோடிஅறிவிப்பார்; ஆயுதமேந்த தயாராகுங்கள்” – உ.பி பாடகர் சர்ச்சை பேச்சு

பிரதமர் மோடி இந்தியாவை இந்து ராஷ்ட்ரியமாக அறிவித்தவுடன் இந்துக்கள் அனைவரும் சிறுபான்மையினருக்கு எதிராக ஆயுதம் ஏந்த வேண்டும் என பொதுகூட்டத்தில் பாடகர் தர்மேந்திர பாண்டே கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் சித்தார்த்தா நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரபல பாடகர் தர்மேந்திர பாண்டே கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் மத்தியில் பேசிய அவர், ”பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை இந்து ராஷ்ட்ரியமாக அறிவித்தவுடன் இந்துக்கள் அனைவரும் சிறுபான்மையினருக்கு எதிராக ஆயுதம் ஏந்த வேண்டும். பிரதமர் மோடியிடம் இருந்து உத்தரவு … Read more

இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல சதி: உளவுத் துறை எச்சரிக்கையால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை: இந்து அமைப்பு தலைவர்களைக் கொல்ல சதித் திட்டம் திட்டப்பட்டுள்ளதாகவும், அவர்களது உயிருக்கு ஆபத்து இருப்பதால், கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அண்மையில் தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா(பிஎஃப்ஐ), எஸ்டிபிஐ நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தினர். இதில் 106 பேர் கைது … Read more

ஒரே நாளில் 2 சாலை விபத்துகள்: உத்தர பிரதேசத்தில் 31 பேர் உயிரிழப்பு; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

கான்பூர்: உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரே நாளில் நடந்த 2 சாலை விபத்துகளில் 31 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் உன்னாவ் அருகே பிரசித்தி பெற்ற சந்திரிகா தேவி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான மக்கள் குடும்பத்தினருடன் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் இதே பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று முன்தினம் இந்த கோயிலுக்குச் சென்றனர். சாமி தரிசனம் முடிந்து அவர்கள் … Read more

பிரதமர் மோடி வந்த ரயிலில் அடையாள குறியீடு; இத்தாலியை சேர்ந்த 4 பேர் அதிரடியாக சிக்கினர்!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 31ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த புதிய திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் ஏறி பயணித்தார். அவருடன் பொதுமக்கள், மாணவ மாணவிகளும் பயணம் செய்தனர். அதே சமயம் பிரதமர் மோடி பயணம் செய்யும் சில மணி நேரங்களுக்கு முன்பாக அவர் பயணிக்க திட்டமிட்டு இருந்த மெட்ரோ ரயிலின் வெளிப்பகுதியில் பெயிண்ட் அடிக்கப்பட்டு டிஏஎஸ் (TAS) என்ற ஆங்கில எழுத்துக்கள் … Read more

வறுமை, வேலைவாய்ப்பின்மை என நம்முன் பூதாகரமான சவால்கள் இருக்கின்றன: ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் கருத்து

வறுமை, வேலைவாய்ப்பின்மை, பொருளாதார ஏற்றத்தாழ்வு என நம்முன் பூதாகரமான சவால்கள் இருக்கின்றன என ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் சார்பு இயக்கமான ஸ்வதேசி ஜாகர்ன மஞ்ச் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தத்தாத்ரேயா, “வறுமை, வேலைவாய்ப்பின்மை, பொருளாதார ஏற்றத்தாழ்வு என நம்முன் ஏராளமான பூதாகர சவால்கள் இருக்கின்றன. நாட்டில் 20 கோடிக்கும் மேலோனோர் ஏழ்மை நிலையில் இருக்கின்றனர். வறுமை ஓர் அசுரன் போல் நிற்கிறது. அந்த வறுமையை நாம் வீழ்த்த … Read more

உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு காணும் முயற்சியில் இந்தியா பங்காற்ற தயாராக உள்ளது: உக்ரைனின் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

டெல்லி: எந்தவொரு அமைதி முயற்சிகளிலும் பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது என உக்ரைனின் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கூறியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய படைகளுடன் போராடி வரும் கிழக்கு ஐரோப்பிய நாட்டில் அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரில் உக்ரைன் நாட்டு நகரங்களை ரஷ்யா படைகள் கைப்பற்றின. இதற்கிடையே போரில் கைப்பற்றிய உக்ரைனின் … Read more

அபாய பலகையைப் பொருட்படுத்தாமல் அருவியில் குளித்த 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!

திருவனந்தபுரம் கல்லார் வட்டக்காயத்தில் அருவியில் குளிக்கச்சென்ற 5 பேரில் மூன்று பேர் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. கல்லார் அருவியில் பொழுது போக்கிற்காக 5 இளைஞர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அருவியில் குளிப்பது தொடர்பாக அங்கு அபாய பலகை வைக்கப்பட்டுள்ளதை அவர்கள் பொருட்படுத்தாமல் குளிக்கச் சென்றுள்ளனர். மேலும் அப்பகுதி மக்கள் அபாய பகுதி எனக் கூறிய போதும் அதனை ஏற்க மறுத்து நீரில் இறங்கியுள்ளனர். அப்போது அருவியில் தண்ணீர் அதிக அளவு வந்ததால், நிலை தடுமாறி 5 … Read more

போலீஸ் வேடத்தில் மாமூல் வசூல்… மடக்கிப்பிடித்த நிஜ போலீஸ்!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரோசாபாத் பகுதியைச் சேர்ந்த முகேஷ் யாதவ் (23) என்பவர் 120 கிலோ உடல் எடை கொண்டவர். இவர் பிழைப்புக்காக விபரீத முடிவெடுத்து தற்போது கையும் களவுமாக சிக்கியுள்ளார். தனது தோற்றத்திற்கு ஏற்ப போலீஸ் உடை ஒன்றை தைத்து போட்டுக்கொண்டு, சுற்றுவட்டாரப் பகுதிகளில் களமிறங்கினார். தனக்கென போலி ஆதார் கார்டு, போலீஸ் ஐடி கார்டு போன்ற ஆவணங்களையும் தயாரித்துள்ளார். போலி போலீசாக ரோந்துக்கு சென்று வாகனங்களை மடக்கி பிடித்து அபராத தொகை, மாமூல்களை வாங்கியுள்ளார். அத்துடன் … Read more