ஜம்மு-காஷ்மீர் | புல்வாமா, சோபியானில் தியேட்டர்கள் திறப்பு
புல்வாமா: ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா, சோபியான் பகுதிகளில் திரையரங்குகளை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேற்று தொடங்கி வைத்தார். ஜம்மு-காஷ்மீரில் 1980-ம் ஆண்டுகளில் சில திரையரங்குகள் செயல்பட்டன. ஆனால், அவற்றின் உரிமையாளர்கள் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு உள்ளானார்கள். காஷ்மீரில் தீவிரவாதம் பரவியதால் 1990-ம் ஆண்டுகளில் திரை அரங்குகள் மூடப்பட்டன. கடந்த சில ஆண்டுகளாக திரையரங்குகளை மீண்டும் திறக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், நகர் லால் சவுக் பகுதியில் இருந்த ரீகல் சினிமா தியேட்டர் மீது 1999-ல் கையெறி குண்டு வீசப்பட்டது. … Read more