நேஷனல் ஹெரால்டு வழக்கு: கர்நாடக காங். தலைவர் டி.கே.சிவக்குமாரிடம் அமலாக்கத்துறை விசாரணை..!!

டெல்லி: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை அடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டி.கே.சிவக்குமார் ஆஜரானார். டி.கே.சிவக்குமார் மற்றும் அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

”பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவர் நன்றாக படிக்க முடியாதா?”- நீதிபதி கேள்வி

தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் வழக்கு விசாரணையில் முக்கிய கருத்தை மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி, அதிலிருந்து மீண்டு வர பல காலமாகும். அதை மறக்கும் வரை அந்த சிறுமி இயல்பாக நடந்துகொள்ள முடியாது, படிப்பில் கவனம் செலுத்த முடியாது என நினைக்கக் கூடாது” என முப்பை உயர்நீதிமன்ற கருத்து தெரிவித்துள்ளது. சவுதியில் கப்பல் ஊழியராக பணிபுரிபவர், விடுமுறையில் மும்பையில் இருக்கும் தனது வீட்டிற்கு வரும் போதெல்லாம் தனது மகளை பாலியல் … Read more

உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் கவலைக்கிடம் – உயிர்காக்கும் மருந்துகளுடன் தீவிர சிகிச்சை

புதுடெல்லி: உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ், உயிர் காக்கும் மருந்துகளுடன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக டெல்லி குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் (82) உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், கடந்த … Read more

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர கடலோரப் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. வட தமிழ்நாடு மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

66 குழந்தைகளின் மரணத்துடன் தொடர்பான இருமல் சிரப், இந்தியாவிலும் விற்பனையா? – அரசு விளக்கம்

காம்பியாவில் 66 குழந்தைகளின் மரணத்துக்கு காரணமாக கூறப்படும் இருமல் சிரப்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பதால், அந்த மருத்துகள் இந்தியாவிலும் விற்பனையானதா? என்ற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டத்தை தொடர்ந்து மத்திய சுகாதாரக அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.  இந்தியாவிலிருந்து கள்ளச்சந்தை வழியாக ஆப்பிரிக்க நாடான காம்பியாவில், குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடையதாகக் கூறப்பட்ட 4 இருமல் மருந்துகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சிரப்கள் ஏற்றுமதிக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டவை என்றும் இந்தியாவில் விற்கப்படவில்லை என்றும் சுகாதார … Read more

பிஎஃப்ஐ தடை குறித்து விசாரணை தீர்ப்பாயத்தின் தலைவராக தினேஷ்குமார் நியமனம்

புதுடெல்லி: நாடு முழுவதும் பிஎஃப்ஐ அமைப்பின் நிர்வாகிகள் வீடு, அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத் துறை அண்மையில் சோதனை நடத்தியது. இதன் அடிப்படை யில் பிஎஃப்ஐ மற்றும் அது சார்ந்த 8 அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பலர் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் 1,400-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த சூழலில் பிஎஃப்ஐ தொடர்பான சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்ட தீர்ப்பாயத்தின் தலைவராக நீதிபதி தினேஷ்குமார் சர்மா … Read more

ஆகாசா ஏர் விமானங்களில் செல்லப்பிராணிகளை கொண்டு செல்ல அனுமதி

அடுத்த மாதம் முதல் தனியார் விமானத்திலும் செல்லப்பிராணிகளை கொண்டு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஏர் இந்தியா விமானங்களில் மட்டுமே செல்லப்பிராணிகளுடன் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆகாசா ஏர் என்ற தனியார் விமான நிறுவனமும் தங்கள் விமானங்களில் செல்லப்பிராணிகளை அனுமதிக்க முடிவு செய்துள்ளது. நவம்பர் மாதத்தில் இருந்து ‘ஆகாசா ஏர்’ விமானங்களில், நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளுடன் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படுவதாக அந்த விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  Source link

உத்தராகண்ட் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 19 பேரின் உடல்கள் மீட்பு: டிஜிபி அசோக்குமார் தகவல்

உத்தராகண்ட்: உத்தராகண்ட் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது, பனிச்சரிவில் சிக்கிய மேலும் 10 பேரை மீட்கும் பணியில் 30 மீட்புக்குழுக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று உத்தராகண்ட் டிஜிபி அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

அடுத்த தலைவராகும் மல்லிகார்ஜூன கார்கே – சரிவில் இருந்து காங்கிரஸ் மீண்டெழ ‘தலித் அரசியல்' கைகொடுக்குமா?

பெங்களூரு: நாட்டின் பழமையான கட்சிகளில் ஒன்றான இந்திய தேசிய காங்கிரஸ் முன் எப்போதும் இல்லாத அளவுக்குசரிவில் இருக்கிறது. நாடும், கட்சியும் கடும் சவாலை எதிர்கொண்டிருக்கும் இத்தருணத்தில், நிரந்தர தலைவர் இல்லாத நிலை நீண்ட காலமாக உள்ளது. 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டிருக்கிறது. தலைவர் பதவிக்கு அசோக் கெலாட், திக் விஜய் சிங், சசி தரூர், கே.என். திரிபாதி ஆகியோர் காய் நகர்த்திய நிலையில், கடைசியாக களமிறங்கினார் மூத்த தலைவர் … Read more

75 ஆண்டுகளில் நடக்காத சாதனை காஷ்மீரில் பத்தே மாதங்களில் 1.62 கோடி சுற்றுலா பயணிகள்

ஜம்மு: ஜம்மு காஷ்மீருக்கு  கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தாண்டு பத்தே மாதத்தில் 1.62 கோடி சுற்றுலா  பயணிகள் வந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை தலை தூக்க விடாமல் ராணுவம் ஒடுக்கி வருகிறது. பாகிஸ்தான் எல்லையில் இருந்து ஊடுருவும் போதே அவர்களை சுட்டு தள்ளுகிறது. இதன் காரணமாக, தினமும் ஆங்காங்கு நடந்து வந்த தீவிரவாத தாக்குதல்கள் தற்போது எப்போதாவது ஒன்று, இரண்டு என்ற வகையில் மட்டுமே நடக்கிறது. இதன் காரணமாக, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி, … Read more