பிரமோற்சவத்தை முன்னிட்டு திருப்பதியில் 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம்

திருமலை: பிரமோற்சவத்தை முன்னிட்டு திருப்பதியில் இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். உண்டியல் காணிக்கையாக மட்டும் ரூ.20 கோடியே 46 லட்சம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திருமண விழாவில் கலந்து கொள்ள பேருந்தில் சென்றவர்கள் 25 பேர் உயிரிழப்பு; நிதி அறிவிப்பு

உத்தரகாண்டில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறார். உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கார்வால் மாவட்டத்தில் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக மொத்தம் 45 பேர் நேற்று இரவு பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் சென்ற பேருந்து ரிக்னிவால் பிரோகால் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென … Read more

ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் தலைவராக எம்.பி., கனிமொழி நியமனம்

புதுடில்லி: ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களை நியமனம் செய்து ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. லோக்சபா எம்.பி.,க்கள் 17 பேரும், ராஜ்யசபா எம்.பி.,க்கள் 10 பேரும் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் தலைவராக திமுக எம்.பி., கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய மக்கள் தொகையை கட்டுப்படுத்த புதிய சட்டம் வேண்டும்- ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

இந்தியாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த புதிய சட்டம் இயற்ற வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஆர்.எஸ்.எஸ். சார்பில் தசரா விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பிரம்மாண்ட பேரணிகளை நடத்துவார்கள். மற்ற விழாக்களை காட்டிலும் வருடாந்திர விஜயதசமி முக்கியமானதாகப் பார்க்கப்படும். ஏனென்றால் பல முக்கியமான பிரச்சினைகளில் ஆர்.எஸ்.எஸின் நிலைப்பாட்டை ஆர்.எஸ்.எஸ். தலைவர் இந்த நிகழ்வில் வெளிப்படையாக முன்வைப்பார். இந்த நிகழ்ச்சியில் மலையேறும் வீராங்கனையான சந்தோஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக … Read more

தெலங்கானா முதல்வர் கேசிஆர் தலைமையில் தேசிய கட்சி உதயம்

ஹைதராபாத்: தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி, ‘பாரத் ராஷ்டிர சமிதி’ என தேசிய கட்சியாக மாற்றம் பெற்றுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தெலங்கானாவை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்துவதற்காக கடந்த 2001ம் ஆண்டு கே.சந்திரசேகர ராவால் தோற்றுவிக்கப்பட்டது தெலங்கானா ராஷ்டிர சமிதி. ஹைதராபாத்தில் நடைபெற்ற தொடர் போராட்டங்களை அடுத்து கடந்த 2014-ம் ஆண்டு தெலங்கானா தனி மாநிலமாக உருவாகியது. இதையடுத்து, 2014-ல் தெலங்கானாவின் முதல் முதல்வராக … Read more

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து பின்வாங்க மாட்டேன்: சசிதரூர் பேட்டி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று போட்டி வேட்பாளர் சசிதரூர் கூறினார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் இடையே போட்டி நிலவுகிறது. வரும் 8ம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும். வேட்பாளர்கள் இருவரும், வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டி உள்ளனர். மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கட்சித் தலைமை மற்றும் … Read more

கேசிஆரின் திருமா பாலிடிக்ஸ்… 3வது அணியில் இப்படியொரு அரசியல் கணக்கு!

அக்டோபர் 5 பிற்பகல் சரியாக 1.19 மணி. ஹைதராபாத் நகரம் தொண்டர்கள் படையால் குலுங்க ”பாரத் ராஷ்டிர சமிதி” (BRS) என்ற அரசியல் கட்சியை தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தொடங்கியுள்ளார். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் பெரிதாக அறியப்பட்ட முகங்கள் இல்லை. கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் என பார்த்தவுடன் அடையாளம் காண முடிந்தவர்கள் இருவர் தான். மற்றவர்கள் சிறிய அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள். அதுவும் தேசிய … Read more

உத்தரபிரதேசத்தில் எல்.இ.டி. டிவி வெடித்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு

உத்தரபிரதேசம்: உத்தர பிரதேசத்தில் வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்த போது எல்.இ.டி. டிவி வெடித்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் 16 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார் மூன்று பேர் படுமடைந்தனர். டிவி எதனால் வெடித்தது என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இமாச்சல் பிரதேசம்: ரூ.3,650 கோடி வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி.!

இமாச்சல் பிரதேசத்தில் ரூ.3,650 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி. கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட உள்நாட்டு மொபைல் போன்கள் நாட்டின் ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைந்ததாக பேச்சு. பிரதமர் நரேந்திர மோடி இன்று இமாச்சல் பயணம் மேற்கொண்ட நிலையில் காலை எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து லுஹ்னூ மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் தேசிய நெடுஞ்சாலை திட்டம், மருத்துவ சாதன பூங்கா உள்ளிட்ட ரூ.3650 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி … Read more

மெகபூபா முப்தி முன்வைத்த வீட்டுக் காவல் குற்றச்சாட்டு – ‘சுதந்திரமாக பயணிக்கலாம்’ என ஸ்ரீநகர் போலீசார் விளக்கம்  

ஸ்ரீநகர்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் காஷ்மீர் வருகையின் காரணமாக, தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஸ்ரீநகர் போலீசார், ‘நீங்கள் சுதந்திரமாக எங்கும் செல்லலாம்’ என்று பதிலளித்துள்ளது. காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி புதன்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில், அவரது வீட்டின் கதவுகளில் பூட்டு போடப்பட்டிருக்கும் படம் ஒன்றினைப் பதிவிட்டு, “காஷ்மீரில் தான் … Read more