காஷ்மீரில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு; 25 பேர் காயம்

ஜம்மு: காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 5 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இருந்து ரஜோரி பகுதிக்கு நேற்று பயணிகள் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ரஜோரி மாவட்டம் டேரி ரால்யோட் பகுதியில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்ஸில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயம் அடைந்தனர். போலீஸ், ராணுவ வீரர்கள் இணைந்து மீட்புப் … Read more

தேதி குறிச்சாச்சு…! பாஜகவில் இணைகிறார் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்

பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் அடுத்த வாரம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் அமரீந்தர் சிங். வயது 80. காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர், கடந்த ஆண்டு, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, முதலில், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் பிறகு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து பஞ்சாப் … Read more

காய்கறி கடையில் காசு கேட்டு கலாட்டா செய்த காங்கிரஸார்… மூவர் சஸ்பெண்ட் – பாத யாத்திரை பரிதாபங்கள்

‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்தியாவின் ஒற்றுமைக்கான நடைபயணம்) என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயணத்தை முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். இதை முன்னிட்டு, கடந்த செப்.7ஆம் தேதி சென்னை வந்த ராகுல் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர், ஹெலிகாப்டர் மூலம் சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற ராகுல் அன்று மாலையே தனது நடைபயணத்தை தொடங்கினார். முதல்நாள் நடைபயணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் … Read more

கேரளாவில் 9வது நாளாக நடை பயணம்; தோட்ட தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு: சத்தீஸ்கர் முதல்வர் பங்கேற்பு

திருவனந்தபுரம்: கன்னியாகுமரியில் இருந்து கடந்த 7ம் தேதி ராகுல் காந்தி எம்பி நடைபயணத்தை தொடங்கினார். 4 நாள் பயணத்தை முடித்துவிட்டு கேரளாவுக்கு திரும்பினார். தொடர்ந்து கடந்த 11ம் தேதி முதல் கேரள மாநில காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களுடன் நடைபயணத்தை தொடங்கியவர் நேற்று ஓய்வு எடுத்தார். அப்போது காங்கிரஸ் தேசிய தலைவர்கள், கொல்லம் மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து 9வது நாள் நடைபயணத்தை காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களுடன் இன்று காலை சுமார் 6.30 … Read more

ராகுல் காந்திக்கு வட கிழக்கு பற்றி தெரியவில்லை – அருணாச்சலப் பிரதேச முதல்வர் பேமா காண்டு

புதுடெல்லி: இந்திய எல்லைக்குள் சீனாவின் ஊடுருவல் குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள அருணாச்சலப்பிரதேச முதல்வர் பேமா காண்டு, ராகுல் காந்திக்கு வடகிழக்கு பற்றி முழுமையாகத் தெரியவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார். டெல்லி வந்திருந்த பேமா காண்டு அளித்த பேட்டியில்,”இந்திய எல்லைக்குள் ஊடுருவியுள்ள சீனப்படைகள் மீண்டும் தங்களின் கட்டமைப்பு வேலைகளைச் செய்கிறது என்ற தகவலை சமூக வலைதளங்களில் பார்த்தேன். எனக்கு கிடைத்த தகவலின்படி அப்படி எதுவும் நடக்கவில்லை. சீனாவின் அனைத்து நடவடிக்கைகளும் அவர்களின் எல்லைக்குள் தான் நடக்கின்றன. எதிர்க்கட்சிகளின் … Read more

விடாது துரத்தும் ரெய்டு – மணீஷ் சிசோடியா தலைக்கு மேல் கத்தி…?

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு விவகாரம் தொடர்பாக, நாடு முழுவதும் 40 இடங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் புதிய மதுபானக் கொள்கை ரத்து செய்யப்பட்டு, பழைய மதுபானக் கொள்கை அண்மையில் அமலுக்கு வந்தது. இந்த விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதாக, எதிர்க்கட்சியான பாஜக, துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவிடம், புகார் … Read more

திருமண பாலியல் வன்கொடுமைகளை குற்றச் செயலாக அறிவிக்கக் கோரிய மேல்முறையீட்டு மனுவுக்கு ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு

டெல்லி: திருமண பாலியல் வன்கொடுமைகளை குற்றச் செயலாக அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த வழக்கு மீதான விசாரணையை அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

லக்னோ: கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு

லக்னோவில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் நகரின் பல பகுதிகளிலும் வெள்ளம் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் லக்னோவில் உள்ள தில்குஷா பகுதியில் கனமழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து குடிசைகள் மீது விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கிய 3 சிறுவர்கள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு பேர் படுகாயமடைந்தனர். … Read more

தலைமை நீதிபதி யு.யு.லலித் புதிதாக அறிமுகம் செய்த வழக்கு பட்டியலிடும் புதிய நடைமுறையால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் அதிக அளவில் தேங்கும் வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க, புதிய நடைமுறையை தலைமை நீதிபதி யு.யு.லலித் அறிமுகம் செய்தார். வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், உச்ச நீதிமன்றத்தின் 30 நீதிபதிகள், இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் அமர்ந்து ஒவ்வொரு அமர்விலும் உள்ள பொதுநல வழக்குகள் உட்பட 60-க்கும் மேற்பட்ட இதர வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறையை அறிமுகம் செய்தார். இதுகுறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான மூன்று … Read more

நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது உயர்வு – பார் கவுன்சில் பச்சைக்கொடி!

உயா் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை முறையே 65, 67 ஆக உயா்த்த இந்திய பாா் கவுன்சில் (பிசிஐ) தலைமையிலான சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. தற்போது விசாரணை நீதிமன்ற நீதித் துறை அதிகாரிகள், உயா் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது முறையே 60, 62, 65 ஆக உள்ளது. இந்நிலையில், அனைத்து மாநில வழக்கறிஞர்கள் சங்கம், உயா் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிா்வாகிகள், இந்திய பாா் கவுன்சில் … Read more