வாக்காளர்கள் இலவச திட்டங்களை பெறுவதை விட கண்ணியமாக வருவாய் ஈட்டவே விரும்புவார்கள் – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

புதுடெல்லி: இலவசங்களுக்கு பதில் கண்ணியமாக வருவாய் ஈட்டக்கூடிய நலத்திட்டங்களை வாக்காளர்கள் விரும்புவார்கள் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தலின் போது அர்த்தமற்ற இலவச வாக்குறுதிகளை வழங்கி வாக்கு சேகரிப்பதைத் தடுக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. மாநில அரசுகள் ஏற்கெனவே கடனில் தத்தளித்து வரும் நிலையில், இதுபோன்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற மேலும் கடன் வாங்க வேண்டி இருப்பதாக … Read more

திருப்பதியில் அக்டோபர் மாத த்திற்கான ரூ.300 தரிசன கட்டணம் ஆன்லைனில் வெளியீடு.!

திருப்பதியில் அக்டோபர் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசனம் டிக்கெட்கள் இன்று ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. வருடாந்திர பிரம்மோற்சவ விழாவினை முன்னிட்டு அக்டோபர் 1-ம்தேதி முதல் 5-ந்தேதி வரையிலான 300ரூபாய் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படாது. எனவே தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 26 நாட்களுக்கான 5 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகள் இன்று காலை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. வருடாந்திர பிரம்மோற்சவ விழா செப்டம்பர் மாதம் 27-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை நடைபெறுகிறது. … Read more

ஒடிசாவில் ஒரு வாரமாக பெய்யும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு: 4.67 லட்சம் பேர் பாதிப்பு.. உணவின்றி தவிக்கும் மக்கள்..!!

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரக்கூடிய கனமழை காரணமாக 12 மாவட்டங்களில் 4 லட்சத்து 67 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவார காலமாக நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக 12 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மகாநதியில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இதனால் மாகாணத்தில் தீரத்தில் அமைந்துள்ள சம்பல்பூர், ஜகத்சிங்பூர், கேந்திரபாலா, பூரே, குர்தா மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. சம்பல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகிலேயே மிகவும் நீளமான அணையான ஹிராகுட் அணையில் … Read more

பிஹார் புதிய சட்ட அமைச்சருக்கு எதிராக ஆள் கடத்தல் வழக்கில் கைது வாரன்ட்

பாட்னா: பிஹாரின் புதிய சட்ட அமைச்சர் கார்த்திகேய சிங்குக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார். பிஹாரில் பாஜக.,வுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளுடன் சேர்ந்து புதிய ஆட்சியை அமைத்தார். நிதிஷ் குமார் முதல்வராகவும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் கடந்த 10-ம் தேதி பொறுப்பேற்றனர். … Read more

இலவசங்களுக்கு எதிரான வழக்கில் இணைய ஆந்திர அரசு மனு

இலவசங்களுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில் ஆந்திர அரசு தாமாக முன்வந்து இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொள்ளுமாறு மனுதாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஒய்.எஸ்.ஆர்.கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் விஜய சாய் ரெட்டி, ஆந்திர அரசு அறிவித்துள்ள இலவசத் திட்டங்கள் சமூகத்திற்கான முதலீடுகள் என்று கூறினார். ஆந்திர அரசு விடுத்துள்ள அறிக்கையில் 15வது நிதிக்குழு பரிந்துரைப்படி, மத்திய அரசின் நிதியில் மாநில அரசுகளுக்கு 41 சதவீதப்பங்கு உள்ளது என்றும் கடந்த ஆண்டில் … Read more

அதிமுக அலுவலக சாவி ஒப்படைப்பு வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: அதிமுக அலுவலக சாவி ஒப்படைப்பு வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் வருவாய் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப தலைமை நீதிபதி ரமணா அமர்வு உத்தரவிட்டுள்ளது.

உலகின் மாசடைந்த நகரங்கள் பட்டியல் வெளியீடு: டெல்லிக்கு முதலிடம்

உலகில் காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியலை ஹெல்த் எஃபக்ட்ஸ் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா 2வது இடத்தில் உள்ளது. உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள், உலக சுகாதார அமைப்பின் காற்றின் தர அளவை விட மாசு நிறைந்த காற்றை சுவாசிக்கின்றனர் காற்றில் இருக்கக்கூடிய பார்ட்டிகுலேட் மேட்டர் (Particulate matter), அதாவது தூசின் அளவு 2.5 விட்டமாக இருக்கிறது. சுவாசிக்கக்கூடிய அளவுள்ள துகள்கள் 10 மைக்ரான்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். … Read more

அதிமுக இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

டெல்லி: அதிமுக இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

டெல்லி, கொல்கத்தா, ஷாங்காய் உள்ளிட்ட உலகின் மிக முக்கிய பெரிய நகரங்களில் மோசமான அளவில் காற்று மாசு

புதுடெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த ஹெல்த் எஃபக்ட்ஸ் இன்ஸ்டிடியூட் புதன்கிழமை வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் டெல்லி, கொல்கத்தா, சீனாவின் ஷாங்காய் மற்றும் ரஷ்யாவின் மாஸ்கோ நகரங்களில் காற்று மாசின் அளவு உலக சுகாதார மையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை தாண்டி மிக மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக, டெல்லி, கொல்கத்தா நகரங்களில் அபாயகரமான நுண்ணிய துகள்கள் (பிஎம் 2.5) காற்றில் கலந்துள்ளன. அதேபோன்று, ஷாங்காய், மாஸ்கோ நகரங்களில் காற்றில் அதிக அளவில் நைட்ரஜன் டை ஆக்ஸைடு (என்ஓ2) கலந்துள்ளது. … Read more

குறுகிய கால விவசாய கடன்களுக்கான வட்டி மானியம் வழங்க ரூ.34,856 கோடி ஒதுக்கீடு: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: ரூ.3 லட்சம் வரையிலான குறுகிய கால விவசாய கடன்களுக்கு ஆண்டுக்கு 1.5 சதவீத வட்டி மானியம் வழங்க ரூ.34,856 கோடியை ஒதுக்கீடு செய்து, ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், 7 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.3 லட்சம் வரையிலான குறுகிய கால விவசாய கடன்களுக்கு ரூ.1.5 சதவீத வட்டி மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு நடப்பு நிதியாண்டு முதல் 2024-25 … Read more