மத்தியப் பிரதேசம் முழுவதும் இதுவரை 21 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொழிலாளர்கள் கைது

போபால்: மத்தியப் பிரதேசம் முழுவதும் இதுவரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் காவல்துறை சோதனை நடைபெற்றுவருகிறது. அதே போல் டெல்லியிலும் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்

ஆ.ராசாவுக்கு எதிராக புதுச்சேரியில் முழு அடைப்பு…தமிழக பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல்

புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தமிழக அரசுப் பேருந்துகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்து மக்களை இழிவாக பேசியதாக திமுக எம்.பி ராசாவை கண்டித்தும், தமிழக அரசு ராசாவை கைது செய்ய வலியுறுத்தியும் இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் புதுச்சேரியில் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதன்படி இன்று விடியற்காலை முதல் நகரில் உள்ள அனைத்து டீக்கடை முதல் பெரிய கடைகள் என எதுவும் திறக்கப்படவில்லை. தனியார் … Read more

தூய்மைப் பணியாளருக்கு விருந்து.. முதல்வர் கெஜ்ரிவால் அசத்தல்..!

தேர்தல் வந்துவிட்டாலே தலித் மக்களின் வீடுகளுக்குச் சென்று உணவருந்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு மத்தியில், குஜராத்தின் அகமதாபாத் நகரைச் சேர்ந்த தூய்மைப் பணியாளரை குடும்பத்துடன் தன்னுடைய டெல்லி வீட்டுக்கு அழைத்து விருந்து அளித்துள்ளார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். தலைநகர் டெல்லி மற்றும் பஞ்சாப் வெற்றியை அடுத்து, குஜராத் மீது கவனம் செல்லுத்தி வரும் அரவிந்த் கெஜ்ரிவால், அங்கு தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் (செப்.25-ம் தேதி), அகமதாபாத் நகரில் தூய்மைப் பணியாளர்களுடன் அரவிந்த் … Read more

எனக்கு கிடைக்கும் ஆதரவு மனு தாக்கலின்போது தெரியும் – காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தகவல்

பாலக்காடு: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறுகிறது. இதில் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசிதரூர் போட்டியிடுகிறார். அதற்கான வேட்பு மனுவையும் பெற்றுள்ளார். இந்நிலையில் பாரத ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியை கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் சசிதரூர் நேற்று சந்தித்தார். பின்னர் சசிதரூர், செய்தியாளர்களிடம் கூறும்போது, “பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பலர், காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடுமாறு என்னிடம் பரிந்துரை செய்தனர். நான் வேட்பு மனுவை தாக்கல் செய்யும் போது … Read more

90வது பிறந்தநாள் மன்மோகனுக்கு மோடி வாழ்த்து

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 90வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஜீக்கு பிறந்த நாள் வாழ்த்துக்ள். அவர் நீண்ட ஆரோக்கியம், ஆயுளோடு இருப்பதற்கு ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார். காங். முன்னாள் தலைவர் ராகுல் தனது டிவிட்டர் பதிவில், மன்மோகன் சிங்கின் பணிவு, அர்ப்பணிப்பு மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கான பங்களிப்புக்கு ஈடு இணை இல்லை. அவர் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியுடன் … Read more

”ஆதார் இருந்தால்தான் சோறு” -விருந்தினர்களிடம் கறார் காட்டிய மணமகள் வீட்டார்; ஏன் தெரியுமா?

திருமணங்கள் ஒரு பக்கம் கொண்டாட்டமான தருணமாக கருதப்பட்டாலும் அந்த நிகழ்ச்சிகளின்போது நடக்கும் பல்வேறு சலசலப்பு நிறைந்த நிகழ்வுகளே எப்போதும் பேசப்படக் கூடிய ஒன்றாக இருக்கக் கூடும். இந்தியாவில் நடக்கும் திருமணங்களில் நிகழக் கூடிய கேலிகளுக்கும், பரபரப்புகளுக்கும் எப்போதும் பஞ்சமே இருக்காது. அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா பகுதியில் நடந்த திருமண விழாவுக்கு வந்த விருந்தினர்களிடம் ஆதார் கார்டு கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று நிபந்தனை போட்டிருந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. … Read more

குடும்பப் பெயருக்கும், ஆசாத் என்ற பெயருக்கும் சம்பந்தமும் இல்லை – புதிய கட்சி குறித்து குலாம் நபி ஆசாத்

ஜம்மு: காங்கிரஸில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், ஜனநாயக ஆசாத் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய குலாம் நபி ஆசாத், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி கட்சியை விட்டு விலகினார். இந்நிலையில் ஜனநாயக ஆசாத் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை அவர் நேற்று தொடங்கினார். இது தொடர்பாக அவர் ஜம்முவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்கள் கட்சி ஜனநாயக கொள்கைகளை அடிப்படையாக … Read more

திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் இன்று பிரம்மோற்சவம் தொடங்கும் நிலையில் பக்தர்கள் கூட்டம் குறைவு: 1 மணி நேரத்தில் சுவாமி தரிசனம்

திருமலை: திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்ககூடிய நிலையில் பக்தர்கள் கூட்டம் இன்று காலை நிலவரப்படி குறைந்து காணப்பட்டது. நேற்று காலை முதல் இரவு வரை  52 ஆயிரத்து 682 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்களில் 15 ஆயிரத்து 805 பக்தர்கள் மொட்டையடித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி உள்ளனர். நேற்று ஒரே நாளில் தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் ரூ.5.57 கோடி ரூபாய் காணிக்கையாக செலுத்தினர். வருடாந்திர … Read more

சாலை சீரமைப்பு, கல்வீச்சு சம்பவத்தால் காஷ்மீரில் லாரிகளில் அழுகும் ஆப்பிள்கள்

ஸ்ரீநகர்: ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் ஆப்பிளை ஏற்றிச் சென்ற லாரிகள் கடந்த ஒரு வாரமாக காத்திருக்கின்றன. இதனால், லாரிகளில் உள்ள ஆப்பிள்கள் அழுகி வருவதாக லாரி ஓட்டுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் ஒரு வாரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில், சமூக விரோத கும்பல்கள் ஆங்காங்கே மீண்டும் கல்வீச்சிலும் ஈடுபட்டு வருகின்றன. அந்தப் பகுதியில் சரக்கு லாரிகள் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அந்த … Read more

காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் அசோக் கெலாட் போட்டியிடமாட்டார்: காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல்

டெல்லி: காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடமாட்டார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டியிடுவார் என அறிவிக்கபட்டிருந்த நிலையில் தற்போது போட்டியிடமாட்டார் என தகவல் பரவிவருகிறது.