பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கான்வாயில் 42 கார்கள் – விளாசும் எதிர்க்கட்சிகள்!

பஞ்சாப் மாநில முதலமைச்சர் பக்வந்த் மான் கான்வாயில் 42 கார்கள் உள்ளது, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 90-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று முதன் முறையாக பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் பகவந்த் மான் கான்வாய் குறித்து தகவல் அறியும் அறியும் சட்டத்தின் கீழ் அறிக்கை … Read more

அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5 ஜி தொழில்நுட்பம்: நாளை டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி: அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5 ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 5ஜி சேவையை,பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்திய மொபைல் காங்கிரசின் (ஐ.எம்.சி.) 6-வது பதிப்பையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஐ.எம்.சி. 2022 புதிய டிஜிட்டல் யுனிவர்ஸ் என்ற கருப்பொருளுடன் அக்டோபர் 1 முதல் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 5ஜி … Read more

'அங்க 21 வருஷமா பாஜக ஆட்சிதான்… அப்படியிருக்க மோடி ஜி இப்படி பேசலாமா?'

மொத்தம் 29 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத் திட்டங்களை துவக்கி வைப்பதற்காக, இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமது சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றுள்ளார். தமது இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, சௌராஷ்டிரா பகுதிக்கு உட்பட்ட பாவ்நகர், பொடாட் மற்றும் அம்ரேலி மாவட்டங்களில் மொத்தம் 6000 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை இன்று துவக்கி வைத்தார். இதனையொட்டி பாவ்நகர், ஜவகர் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, “நாட்டிலேயே நீளமான … Read more

68-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சூரரைப் போற்று திரைப்படம் 5 விருதுகளை பெற்றது

டெல்லி: 68-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சூரரைப் போற்று திரைப்படம் 5 விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, பின்னணி இசை, திரைக்கதை ஆகிய பிரிவுகளில் சூரரைப் போற்று படத்துக்கு விருது பெற்றது.

'தாஜ்மகாலை கட்டியது ஷாஜகான்தான் என்பதற்கான ஆதாரம் இல்லை' – உச்சநீதிமன்றத்தில் புதிய மனு!

தாஜ்மகாலை கட்டியது ஷாஜகான் தான் என்பதற்கான வலுவான ஆதாரம் கிடையாது எனவே இந்த விவகாரத்தில் உண்மை தன்மையை கண்டறிய குழுவை அமைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரஜினிஸ் சிங் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தாஜ்மஹாலை மும்தாஜ் நினைவாக ஷாஜகான் தான் கட்டினார் என்பதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், எனவே இது குறித்து உண்மை தன்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்து விரிவான … Read more

ஆம்புலன்ஸ் செல்ல கான்வாயை நிறுத்திய பிரதமர் மோடி – குவியும் பாராட்டு!

குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்காக, தனது கான்வாயை நிறுத்திய சம்பவத்திற்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிகிறது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு நேற்று வந்தார். அகமதாபாத்தில் நேற்று 36-வது தேசிய விளையாட்டு போட்டியை அவர் தொடங்கி வைத்தார். இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று, காந்தி நகர் – மும்பை சென்ட்ரல் இடையேயான புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய வந்தே … Read more

Watch: ஆம்புலன்ஸிற்கு வழிவிட்ட பிரதமர் கான்வாய் – குவியும் பாராட்டு

இரண்டு நாள்கள் பயணமாக பிரதமர் மோடி குஜராத்திற்கு வந்துள்ளார். இரண்டாம் நாளான இன்று, காந்திநகர் – மும்பை ஆகிய நகரங்களுக்கு இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று தொடக்கிவைத்தார். அதிக வேகமான ரயிலான இது, மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகும்.  மேலும், அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தில் முதல் கட்டப்பணிகளையும் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, அகமதாபாத் நகரின் தூர்தர்ஷன் மையம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். தொடர்ந்து, கூட்டத்திற்கு பின் … Read more

68-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் தொடக்கம்

டெல்லி: 68-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் தொடங்கியது. 2020-ல் வெளியான சிறந்த திரைப்படங்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி வருகிறார்.

என்னை Bhaiya, Uncle என்று அழைக்க வேண்டாம்: டாக்ஸி ஓட்டுனர் ஒட்டிய நோட்டீஸால் பரபரப்பு

என்னை Bhaiya, Uncle என்று அழைக்க வேண்டாம் என கார் சீட்டின் பின்புறத்தில் Uber டாக்ஸி ஓட்டுனர் ஒட்டிய நோட்டீஸால் பரபரப்பு ஏற்பட்டது. பயணி ஒருவர் அதனை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இதற்கு பதிலளித்த Uber India, பயணிகள் தங்களுக்குத் தெரியாத நபர்களை எப்படி அழைக்க வேண்டும் என்ற சந்தேகம் இருந்தால் App-ல் உள்ள ஓட்டுனரின் பெயரை உபயோகித்துக் கொள்ளுங்கள் என விளக்கம் அளித்துள்ளார்.

கேரளா: பூனைக்கடிக்கு தடுப்பூசி செலுத்தச் சென்ற பெண்ணை தெருநாய் கடித்த கொடூரம்!

பூனைக்கடிக்கு தடுப்பூசி செலுத்த சென்ற இளம்பெண்ணை மருத்துவமனைக்குள் தெருநாய் கடித்த கொடூர சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள விழிஞ்சம் நகரைச் சேர்ந்தவர் அபர்னா(31). இவரை பூனை கடித்ததால் மூன்றாவது டோஸ் ஆண்டி – ரேபிஸ் தடுப்பூசி செலுத்த தனது தந்தையுடன் அப்பகுதியிலுள்ள சுகாதார நிலையத்திற்குச் சென்றுள்ளார். காலை எட்டு மணியளவில் சென்ற அவர், அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு நாற்காலியின்கீழ் படுத்திருந்த தெருநாள் ஒன்று அவரை கடித்து காயப்படுத்தியுள்ளது. இதுகுறித்து … Read more