சுதந்திர தின உரை | டெலி பிராம்ப்டரை தவிர்த்துவிட்டு காகித குறிப்புகளை பயன்படுத்திய பிரதமர் மோடி
புதுடெல்லி: நாட்டின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றிவிட்டு, நாட்டு மக்களுக்காக உரையாற்றி இருந்தார். அப்போது தனது உரைக்கான குறிப்புகளுக்காக காகிதத்தை பயன்படுத்தி இருந்தார். வழக்கமாக பிரதமர் மோடி தனது சிறப்புரை பேச்சுகளின் போது டெலி பிராம்ப்டரை பயன்படுத்துவது வழக்கம். பாரம்பரியமிக்க செங்கோட்டையில் 76-வது சுதந்திர தின விழாவில் நாட்டின் பிரதமர் என்ற முறையில் கொடியை ஏற்றிய கையோடு சுமார் 1 மணி நேரம் 23 நிமிடங்கள் வரை பேசி இருந்தார். … Read more