வேட்பாளர் கொடுத்த மதுவை வாங்கி குடித்த 6 வாக்காளர்கள் பலி
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதால் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு மதுபானங்களை சப்ளை செய்து வாக்குகளை சேகரிக்க அழைத்து செல்கின்றனர். அந்த வகையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரிடம் மதுபானங்களை வாங்கிக் குடித்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ஹரித்வார் மாவட்டம் பூல்கர் கிராமத்தின் பஞ்சாயத்து வேட்பாளர் ஒருவர், சிலருக்கு மதுபானங்களை சப்ளை செய்துள்ளார். அந்த மதுபானத்தை குடித்தவர்களில் சிலரின் உடல்நிலை மோசமடைந்தது. … Read more