ஞானவாபி வழக்கு: செப். 22 முதல் ஹிந்து தரப்பின் மனு விசாரிக்கப்படும் – வாரணாசி நீதிமன்றம்

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி நகரில் உள்ள பிரசித்திபெற்ற காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டியுள்ள ஞானவாபி மசூதி சுவரில் அமைந்துள்ள “ஷ்ரிங்கார் கௌரி” ஆலயத்தில் வழிபாடு நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. ஹிந்து சமுதாயத்தின் பிரதிநிதிகளாக 5 பெண்கள் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர். மசூதி மேலாண்மை குழு சார்பாக இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு பக்க முக்கிய வாதங்களையும் பரிசீலனை … Read more

சிறு விவசாயிகளே இந்திய பால் உற்பத்திக்கு ஆதாரம்: பிரதமர் மோடி

புதுடெல்லி: சிறு விவசாயிகளே இந்திய பால் உற்பத்திக்கு ஆதாரமாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி அருகே நொய்டாவில் நடைபெற்ற சர்வதேச பால் கூட்டமைப்பு உலக பால்வள உச்சி மாநாட்டினை தொடக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அதன் விவரம்: “பால் துறை மென்மேலும் வளர்ச்சி காண, பால் துறை சார்ந்த பல்வேறு தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியது மிகவும் முக்கியம். இந்த மாநாடு அதற்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன். இந்திய பால் உற்பத்திக்கு … Read more

ஞானவாபி மசூதி: இந்து பெண்கள் தொடுத்த வழக்குகள் விசாரணைக்கு உகந்தது!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து பெண்கள் 5 பேர், வாரணாசி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. தொடர்ந்து, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற ஆணையர் அஜய் … Read more

ரூ200 கோடி மோசடி வழக்கு; ‘ஷூட்டிங்’ இருப்பதால் ஆஜராக முடியாது: நடிகையின் கோரிக்கையை ஏற்ற போலீசார்

டெல்லி: டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபரின் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர், கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் பரிசுப் பொருட்களை ஆதாயம் அடைந்ததாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை வழக்கு பதிந்து விசாரித்தது. இந்த விவகாரத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குற்றவாளிகளின் பெயருடன் இணைந்திருந்தது அமலாக்கத்துறை. ெதாடர்ந்து இதேவழக்கில் சிக்கிய மற்றொரு நடிகை நோரா … Read more

கியான்வாபி வழக்கு | இந்துப் பெண்களின் மனு, விசாரணைக்கு உகந்தது – நீதிமன்றம் தீர்ப்பு

வாரணாசி: கியான்வாபி மசூதியில் உள்ள சிங்கார கவுரி அம்மனை தினமும் தரிசிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று 5 இந்துப் பெண்கள் தொடர்ந்த வழக்கானது விசாரணைக்கு உகந்தது என்று வாரணாசி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மசூதியின் சார்பில் அஞ்சுமன் கமிட்டியின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். உத்தரப் பிரதேசம் – வாரணாசியில் பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியபடி அமைந்துள்ளது கியான்வாபி மசூதி. அங்கிருந்த கோயிலை இடித்துவிட்டு முகலாய மன்னர் அவுரங்கசீப், அங்கு மசூதி கட்டியதாகக் … Read more

பாகிஸ்தானில் வெள்ளம், சீனாவில் வறட்சி : காலநிலை மாற்றத்தின் அபாயத்தை உணர்வோமா?

இந்தியாவின் Silicon Valley என அழைக்கப்படும் பெங்களூரு நகரம், அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஒரு வாரத்திற்கு முற்றிலும் ஸ்தம்பித்தது. மிதக்கும் கார்கள், நீரில் மூழ்கிய சாலைகள், தனித்தீவுகளாய் மாறிய கட்டடங்கள் என பெங்களூருவின் திரும்பிய திசையெல்லாம் தண்ணீர் தான். ஏறக்குறைய 2015-ம் ஆண்டு வெள்ளத்தின்போது சென்னை சந்தித்த அதே நிலையை தற்போது சந்தித்துள்ளது. இந்த வெள்ளத்தினால் பெங்களூருவில் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மனிதத் தவறுகளும் … Read more

நடிகை மரண வழக்கு: சிபிஐக்கு மாற்றம்

பனாஜி: பாஜக பிரமுகரும், நடிகையுமான சோனாலி போகத் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் பரிந்துரைத்துள்ளார். அரியானா பாஜக மூத்த பிரமுகரும் நடிகையுமான சோனாலி போகத், கோவாவின் அஞ்சுனா பகுதியிலுள்ள கர்லீஸ் விடுதியில் கடந்த 23ம் தேதி உயிரிழந்தார். மாரடைப்பால் அவர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சோனாலி போகாத் பெற்றோர் முறையிட்டனர். இவ்வழக்கில் சோனாலி போகத் உடன் கோவாவிற்கு வந்த சுதீர் சாக்வன், சுக்வீந்தர் சிங் … Read more

நடிகை சோனாலி போகட் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு கோவா அரசு பரிந்துரை

சண்டிகர்: பாஜக பிரமுகரும், நடிகையுமான சோனாலி போகட் கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். ஹரியாணா அரசு மற்றும் சோனாலி போகட் குடும்பத்தினரின் தொடர் வேண்டுகோளை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இதுகுறித்து கோவா முதல்வர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “கோவா காவல் துறை மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. நல்ல முறையில் இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது. கோவா போலீசார் சிறப்பாக வழக்கை … Read more

நடிகை சோனாலி போகத் மரண வழக்கு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை

நடிகை சோனாலி போகத் மரண வழக்கை சிபிஐ விசாரணை நடத்த கோவா முதலமைச்சர் பிரமோத் சவாந்த் பரிந்துரை செய்துள்ளார். கோவா கடற்கரையில் உள்ள நட்சத்திர விடுதியில் வலுக்கட்டாயமாக போதை மருந்து கொடுக்கப்பட்டு நடிகை சோனாலி போகத் கொலை செய்யப்பட்ட வழக்கை அம்மாநில போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சோனாலி மகள் மற்றும் அவரது குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, வழக்கு விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைப்பதாக அறிவித்துள்ள கோவா முதலமைச்சர் பிரமோத் சவாந்த், அதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் … Read more

அதிமுக அலுவலக சாவி வழக்கு: ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: அதிமுக அலுவலக சாவி வழக்கில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் சாவியை எடப்பாடி தரப்புக்கு வழங்கியதை தவறு என கூற இயலாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.