7 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வார்டன் மீது போக்சோ வழக்கு
ஹைதராபாத்தில் விடுதி மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வார்டன் கைதுசெய்யப்பட்டுள்ளார். தெலங்கானாவிலுள்ள ஹயாத்நகர் பகுதியில் இயங்கிவருகிறது ஸ்ரீ சைதன்யா பள்ளி. அந்த பள்ளியில் விடுதி வார்டனாக பணிபுரிந்து வந்தவர் முர்ராம் கிருஷ்ணா. 35 வயதான இவர் விடுதியில் தங்கியிருந்த ஏழு சிறுவர்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்த தகவலறிந்த சிறுவர்களின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் சண்டையிட்டுள்ளனர். உடனே ஹயாத்நகர் காவல் நிலையத்தில் வார்டன் கிருஷ்ணா மீது புகாரளிக்கப்பட்டது. அதனையடுத்து அவர்மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. … Read more