கர்நாடகா: மரத்தின் மீது அமர்ந்திருந்த சிறுத்தை – குலைத்தே விரட்டியடித்த தெருநாய்கள்

மரத்தின் மீது அமர்ந்திருந்த சிறுத்தை விரட்டி அடித்த தெரு நாய்கள். சிசிடிவி காட்சிகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கர்நாடக மாநிலம் மைசூரில் சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், மைசூர் ரிசர்வ் பேங்க் பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் அருகே மரத்தின் மீது சிறுத்தை ஒன்று அமர்ந்திருந்தது இதனை கவனித்த தெரு நாய்கள் சத்தமாக குலைக்க துவங்கின. இதையடுத்து நாய்கள் குலைக்கும் சத்தத்தால் சிறுத்தை மரத்திலிருந்து கீழே குதித்து இரண்டு நாய்களை தாக்க முயற்சி செய்தது. நாய்கள் … Read more

இன்னும் 10 நாட்களில் புதிய அரசியல் கட்சி: குலாம் நபி ஆசாத் அறிவிப்பு

பாரமுல்லா: இன்னும் 10 நாட்களில் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை விட்டு கடந்த மாதம் 26ம் தேதி விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பாரமுல்லா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் அவர் உரை நிகழ்த்தினார். காங்கிரஸில் இருந்து விலகிய … Read more

பி.ஏ. தேர்வுக்கான ஹால்டிக்கெட்டில் பிரதமர் மோடி புகைப்படம்

பீகாரில் உள்ள மதுபானி, சமஸ்திபூர் மற்றும் பெகுசராய் ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள், லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படுகின்றன. இதில் இளங்கலை 3-ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு, கல்லூரித் தேர்வுகளுக்காக ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், சிலருக்கு பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் தோனி, பீகார் ஆளுநர் பாகு சவுகான் ஆகியோரின் புகைப்படங்கள் ஹால்டிக்கெட்டுகளில் இடம் பெற்றுள்ளன. சமூக வலைதளங்கள் மூலம் இந்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு நோட்டீஸ் … Read more

10 நாட்களில் புதிய அரசியல் கட்சி அறிவிக்கப்படும் – காங்கிரஸில் இருந்து வெளியேறிய குலாம் நபி ஆசாத்

பத்து நாட்களில் புதிய அரசியல் கட்சியை அறிவிப்பதாக காங்கிரஸில் இருந்து வெளியேறிய குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தனது ஆதரவாளர்களை சந்தித்துவரும் குலாம்நபி ஆசாத், பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகிறார். பாரமுல்லாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10 நாட்களில் புதிய அரசியல் கட்சியை அறிவிப்பதாக தெரிவித்தார்.   Source link

ஆந்திர முதல்வர் சொந்த மாவட்டத்தில் சேறும், சகதியுமான சாலையில் கவுன்சிலர் அங்க பிரதட்சணம்

திருமலை: ஆந்திர முதல்வரின் சொந்த மாவட்டத்தில் சாலை வசதி கேட்டு வார்டு கவுன்சிலர் ஒருவர் சேறும், சகதியுமான சாலையில் அங்க பிரதட்சணம் செய்துள்ளார். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் சொந்த மாவட்டமான கடப்பா மாவட்டம் சொமிரெட்டிப்பள்ளி பஞ்சாயத்திற்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக சேதம் அடைந்துள்ளது. தற்போது தொடர்ந்து பெய்த மழையால் மண் சாலை சேறும், சகதியுமாக மாறியது. இதனை சரி செய்து சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. … Read more

பீகார்: 5 காவலர்களை லாக்-அப்பில் அடைத்து வைத்த எஸ்.பி! காரணம் என்ன?

பீகாரில் 5 காவலர்களை மாவட்ட எஸ்.பி. லாக் – அப்பில் வைத்த வீடியோ காட்சிகள் வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளளது. பீகார் மாநிலம் நவாடா பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு செப்டம்பர் 8 ஆம் தேதி இரவு 9 மணியளவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌரவ் மங்களா பதிவான வழக்குகளை மறுஆய்வு செய்ய வந்ததாக கூறப்படுகிறது. அப்போது காவல் நிலையத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் செயல்பாடுகள் சரியாக இல்லாததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌரவ் மங்களா அதிருப்தி அடைந்தார். இதற்காக அந்த … Read more

டெல்லி போக்குவரத்து கழகத்திற்கு பேருந்து வாங்குவதில் முறைகேடு.. சிபிஐ விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் அனுமதி

டெல்லி போக்குவரத்து கழகத்திற்கு, இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி இயங்கும் ஆயிரம் பேருந்துகள் வாங்குவதில் போடப்பட்ட ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் அனுமதியளித்துள்ளார். CNG தாழ்தள பேருந்துகளை வாங்குவது தொடர்பான குழுவின் தலைவராக டெல்லி போக்குவரத்து அமைச்சரை நியமித்ததில் ஊழல் மற்றும் முறைகேடு நடந்துள்ளதாக புகாரளிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து தலைமை செயலர் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, அவர் அனுப்பிய அறிக்கையில், ஒப்பந்தத்தில் பல முரண்பாடுகள் உள்ளதாகவும்,கொள்முதல் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை எனவும் தெரிவித்து விசாரணை … Read more

என் காதல் வாழ்க்கையை சீரழித்தது ஷாருக்கான்: நடிகை ஸ்வரா பாஸ்கர் பகீர்

மும்பை: என் காதல் வாழ்க்கையை கெடுத்தது ஷாருக்கான், ஆதித்யா சோப்ரா ஆகியோர் தான் என்று நடிகை ஸ்வரா பாஸ்கர் தெரிவித்தார். பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் சமீபத்தில் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘எனது காதல் வாழ்க்கையை சீரழித்தது ஆதித்யா சோப்ரா, ஷாருக் கான் ஆகிய இருவரும்தான். ஏனென்றால் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே’ என்ற திரைப்படத்தை சிறுவயதில் பார்த்தேன். அன்றிலிருந்தே ஷாருக் கான் போல் இருக்கும் அந்த மனிதரை தேடினேன். ஆனால் கிடைக்கவில்லை. அதனை உணர … Read more

வீடியோ: ”க்ளினிக்கை திறக்க இவ்வளவு நேரமா?” : கதவை உடைத்து டாக்டரை கடுமையாக தாக்கிய மக்கள்!

குறித்த நேரத்தில் க்ளினிக்கை திறக்காததால் வீடு புகுந்து மருத்துவரையும் அவரது மகனையும் நோயாளிகளும் அவர்களுடன் வந்தவர்கள் தாக்கிய சம்பவம் மகாராஷ்டிராவில் கடந்த செப்டம்பர் 6ம் தேதி அரங்கேறியிருக்கிறது. இந்த சம்பவம் அனைத்தும் மருத்துவரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருக்கிறது. தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள்தான் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு காண்போரை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. மகாராஷ்டிராவின் பாரமதியில் உள்ள சங்கவி என்ற பகுதியில் தனது வீட்டிற்கு அருகிலேயே ஆயுர்வேத க்ளினிக் ஒன்றை வைத்து நடத்தி வருபவர் யுவ்ராஜ் கெயிக்வாட். … Read more

தொழிலதிபர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 கோடி ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல்!

மேற்கு வங்கத்தில் தொழிலதிபர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. இ-நக்கெட்ஸ் என்ற மொபைல் கேமிங் செயலியைக் கொண்டு பணமோசடி நடைபெறுவதாக பெடரல் வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் வங்கி அதிகாரிகளுடன் இணைந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். கொல்கத்தாவின் கார்டன் ரீச் பகுதியில் உள்ள அமீர்கான் என்பவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அங்கிருந்த படுக்கை அறையில் கட்டுக்கட்டாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த பணத்தைக் கைப்பற்றினர். பணம் எண்ணும் எந்திரங்களைக் … Read more