ஆவின் பால் பாக்கெட்களில்.. அமைச்சர் சொன்ன தகவல்..!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ஆவின் பால் பாக்கெட்டுகளில் தேசியக் கொடி சின்னம் பதித்து விற்பனை செய்யப்படவுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்தார். திருவள்ளூரில், போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பால்வளத்துறை அமைச்சர் நாசர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தனியார் பால் விலை உயர்வை அரசு நெறிப்படுத்த வில்லை என பால் முகவர் பொன்னுசாமி கூறியுள்ளார். பொன்னுசாமி, சங்கத் தலைவரே கிடையாது. அவர் கேள்வி கேட்கவே தகுதி … Read more

ஒரே நாடு… ஒரே நுழைவுத் தேர்வு திட்டம் வருகிறது ‘கியூட்’ தேர்வுடன் ‘நீட்’ – ‘ஜேஇஇ’ தேர்வுகள் இணைப்பு: பல்கலைக்கழக மானியக் குழுவின் முடிவால் திருப்பம்

புதுடெல்லி: ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு என்ற அடிப்படையில் கியூட் நுழைவுத் தேர்வுடன் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை இணைக்க பல்கலைக்கழக மானியக் குழு முடிவு செய்துள்ளதால் கல்வித் துறையில் முக்கிய திருப்பம் ஏற்பட வாய்புள்ளது. இந்தியாவில் உள்ள மத்திய பல்லைக்கழகங்களில் கல்வி பயில்வதற்கு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வான ‘கியூட்’ (CUTE) நுழைவுத் தேர்வை எழுதுவது கட்டாயம். நாடு முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் ஏதாவது ஒன்றில் … Read more

இவர்களுக்கும் ஓய்வூதியம்.. தமாகா தலைவர் கோரிக்கை..!

“தியாகிகளின் மனைவிக்கு பிறகு அவர்களின் சந்ததியரை இரண்டாம் வாரிசுகளாக அங்கீகரித்து, அவர்களுக்கு அரசு மரியாதையையும், குடும்ப ஓய்வூதியமும் வழங்க வேண்டும்” என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “நாட்டின் சுதந்திரத்திற்காக தனது சொத்து சுகங்களை இழந்து, தன்னலம் மறந்து பொது நலத்தோடு போராடிய சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. அவர்கள் என்றும் போற்றப்படக் கூடியவர்கள். இந்நிலையில், தியாகிகளின் மனைவிக்கு பிறகு அவர்களின் … Read more

30 வருஷமா ஒரே பேச்சு தான்.. ரஜினியை கலாய்த்த கடம்பூர் ராஜூ..!

தமிழக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தமிழக ஆளுநரை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்த செய்தியை பார்த்தேன். ஊடகத்தில் அவர் பேட்டி அளிக்கும் போது கூட நாங்கள் மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்தித்தாலும், அரசியலும் பேசினோம் என்று சொல்லி இருக்கிறார். அரசியலுக்கு வருவது என்பது தனிப்பட்ட நபர்களுடைய விருப்பம். நடிகர் ரஜினிகாந்த் இன்றைக்கு அல்ல, 1996-ல் அன்றைக்கு ஆளுகின்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக அவர் கருத்துக்களை தெரிவித்தார். அதற்குப் … Read more

அமைச்சர் கண்டனம், எப்ஐஆர், 15 நாள் சஸ்பெண்ட்; அட போங்கய்யா…. அது போலி விமானம்!.. புகை ஊதி தள்ளிய பாடி பில்டரின் கூல் பதிவு

டேராடூன்: விமானத்தில் புகைப்பிடிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்ட பாடி பில்டர், அந்த புகைப்படம் போலி விமான புகைப்படம் என்று தெரிவித்துள்ளார். அரியானாவைச் சேர்ந்த பாடிபில்டர் பாபி கட்டாரியா, சமூக வலைதளங்களில் தனது வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர். இந்நிலையில் அவர் விமானத்திற்குள் புகைபிடிக்கும் வீடியோ வைரலானதை அடுத்து பெரும் சர்ச்சையில் சிக்கினார். ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், அவர் 15 நாட்கள் … Read more

குஜராத் சட்டமன்ற தேர்தல்… வாக்காளர்களை கவர காங்கிரஸ் கையில் எடுத்துள்ள அஸ்திரம்!

குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி மற்றும் அவரது வலதுகரமாக அறியப்படும் அமித் ஷாவின் சொந்த மாநிலமாகவும், பாஜகவின் கோட்டைகளில் ஒன்றாகவும் இருப்பதால் அங்கு இந்த முறையும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது பாஜக. பாஜகவின் கோட்டையை இந்த முறை எப்படியாவது தகர்த்தெறிந்தே ஆக வேண்டும் என்ற துடிப்பில் களமிறங்கி உள்ளது காங்கிரஸ். தற்போது அங்கு எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் , அரியணையில் … Read more

வணிக பயன்பாட்டுக்காக குடியிருப்பை வாடகைக்கு எடுத்தால் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் என ஒன்றிய அரசு விளக்கம்

டெல்லி; வணிக பயன்பாட்டுக்காக குடியிருப்பை வாடகைக்கு எடுத்தால் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்தது. தனிப்பட்ட பயன்பாட்டுக்காக வீடு வாடகைக்கு எடுத்தால் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படாது. வாடகைதாரர்களுக்கு 18% ஜி.எஸ்.டி. விதிக்கப்படும் என செய்திகள் பரவியதை அடுத்து ஒன்றிய அரசு விளக்கம் அளித்தது.

அக்னிபாத் திட்டத்திற்கான முதல் ஆள் சேர்ப்பு பேரணி புனேவில் தொடக்கம்.!

இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் 17 1/2 வயது முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அக்னிபாத் என்ற புதிய திட்டம் மத்திய அரசால் ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் மட்டும் பணியாற்றுவார்கள் என்றும், அதில் 25 சதவிகித இளைஞர்கள் மட்டும் தான் கூடுதலாக 15 ஆண்டுகளுக்கு பணியில் தொடர்ந்து வேலை செய்வார்கள் என்றும், மீதமுள்ள 75 சதவிகிதம் இளைஞர்கள் … Read more

காதல் வதந்தி கசப்பில் முடிந்தது; பெயர், புகழுக்காக பொய் சொல்லும் நடிகை: ரிஷப் பன்ட் பதிவால் ஊர்வசி ரவுடேலா கடுப்பு

மும்பை: ரிஷப் பன்ட் – ஊர்வசி ரவுடேலா இடையிலான காதல் புகைச்சல் தற்போது மோதலில் முடிந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனும், இந்திய அணி கிரிக்கெட் வீரருமான ரிஷப் பன்ட் – பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா ஆகிய இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் உலாவி வருகின்றன. முன்னதாக, தொலைக்காட்சி நேர்காணலில் பேட்டியளித்த ஊர்வசி: ஆர்பி (ரிஷப் பன்ட்) என்ற நபர் என்னைப் பார்ப்பதற்காக ஓட்டல் லாபியில் பல மணி … Read more

கார், பைக், ஆட்டோ மோதல் குஜராத் விபத்தில் 6 பேர் பலி

அகமதாபாத்: குஜராத் மாநிலம் ஆனந்த் நகர் மாவட்டத்தில் நேற்றிரவு கார், பைக், ஆட்டோ ரிக்‌ஷா ஆகிய வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து ஆனந்த் நகர் ஏஎஸ்பி அபிஷேக் குப்தா கூறுகையில், ‘ஆட்டோவில் பயணம் செய்த 4 பேரும், பைக்கில் சென்ற 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரின் ஓட்டுனர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ … Read more